
என்னைப்பற்றி அனைவருக்கும்
வணக்கம் நான் சரவணன்
தந்தை பெயர் இராஜேந்திரன் மும்பையில்
அலுவலக முறைப்படி தந்தை
பெயரை முழுமையாக எழுதவேண்டும் என்பதால்
சரவணன் இராஜேந்திரன்,
என தந்தை பெயரை என் பெயருக்கு பின்
பயன் படுத்தி வருகிரேன்.
வீரர்களுக்கு ஒரு மாவீரர்
தினம் போல், எனக்கும்
வருடத்தில் ஒரு நாள்
உண்டு அது இந்த ஆங்கில
மாதம் பதினாறாம் தேதி.
(December 16) அனைத்து மனிதர்களின் வெற்றியோ
தோல்வியோ அவர்களின் பின்
அவளது அன்னை, சகோதரி, மனைவி,
மகள் மற்றும் காதலி என
ஏதாவது ஒரு வடிவில் பெண்
ஒருவர் இருப்பார்.
காந்தியடிகளின் வாழ்க்கையில்
அவரது தாய் அவரின் வெற்றியின்
பின் நிற்கிறார், நமது
சானாதிபதி முனைவர். திரு.
அப்துல் கலாம் வெற்றியின்
பின் அவரது சகோதரி இருக்கிறார்,
தந்தை பெரியார் வெற்றியின்
பின் அவரது துனைவியாரி
பங்கு உண்டு என்பது நாடறிந்த
உன்மை, பாலாஜி டெலிபிலிம்ஸ்
ஜித்தேந்தரின் வெற்றிக்கு
பின் அவரது மகள் ஏக்தா
கபூர் நிற்கிறார். தாஜ்
மாகாலின் அழகிய படைப்பிற்க்கு
பின்னால் அந்த ஷாஜகானின்
காதல் மனைவி மும்தாஜ்
இருக்கிறார்.
என் வாழ்வின் எந்த ஒரு
வெற்றியின் பின் ஒரு
பெண் இருக்கிறாள், அவளை
என்ன வென்று அடையாளம்
சொல்வது என்று எனக்கு
தெரியவில்லை,
ஆம் ஏதோ கல்வி பயின்றேன்,
அதையும் பாதியில் கோட்டை
விட்டு மும்பை வந்தேன், ,
பிறகு அம்மாவின் வற்புறுத்தலின் காரணமாக
வேலை தேடும் படலம், கிடைத்த
பணியும் சரியில்லாத வேலை
எனோ தானோ என்று வாழ்க்கையை
நகர்த்திக்கொண்டிருக்கும்
போது என் வாழ்வில் ஒரு
அதிசயமாக அவள் வந்தாள், அமாம்
அவள் முகம் கண்டதில்லை
ஆனால் அவளின் அன்பு வார்த்தை
களை கேட்டுள்ளேன், அவள்
தளிர் கரங்களை கண்டதில்லை,
ஆனால் அந்த தாமரையின்
விரல் முனையில் பதிந்த
அந்த அன்பு எழுத்துக்களை
கண்டேன். ஆமாம் "நோயாக
நான் கிடந்தால் நோம்பிருக்கும்
ஆத்தா" என்று இளையராஜா
படித்த பாட்டை போல் என்
உடல் நலம் சிறிது சீர்கெட்டாலும்
அந்த உயிர் தன்னை வருத்தி
பட்டினி கிடந்து எனக்காக
வேண்டிக்கொள்ளும், அவளின்
அன்பு வார்த்தையில் வராத
வற்றாத கங்கை, வள்ளூவரின்
வார்த்தை மொழிபோல் "அன்பிற்க்கும்
உண்டொ அடக்கும் தாழ்
ஆர்வலர் புன்கன்நீர்
பூசல் தரும்"
அவள் என்மீது காட்டிய
பாசம் வரை முறைகடந்தது,
கடவுள் இல்லை என்று சொல்லி
வந்த நான் கடவுள் இதோ
இவள் மூலமாக இருக்கிறாள்
என்று இமயத்தில் ஏறி
உலகமுழுவதும் கேட்டும்
படி உறக்க சொல்வேன்.
இன்று எரிபொருள் துறையில்
உலகின் ராஜா வான நிறுவனத்தில்,
வேலையில் இருக்கிறேன்,
சரவனா டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ்
என்ற நிறுவனத்தை நடத்தி
வருகிறேன். இன்னும் பல
சாதனைகள் புரிய வேண்டும்
என்ற ஒரு ஆர்வமும் அனைவருக்கு
எதாவது ஒரு நன்மை புரிய
வேண்டும் என்ற ஒரு உத்வேகம்
என்னுள் ஏற்பட்டது என்றால்
அவள் மட்டுமே காரணம் ஆனால்
அவள் யார் எப்படிப்பட்டவள்
என்ற எந்த ஒரு அடையாளங்களும்
எனக்கு தெரியாது. அந்த
முகம் காட்டா தெய்வத்தின்
('தெய்வம் எங்கப்பா தன்
முகம் காட்டியது என்று
அன்பர்கள் சொல்வது எனக்கு
கேட்கிறது.)'
அவள் ஆஸ்திரேலியாவில்
சிட்னி நகரில் வசிக்கிறாள்
என்று மட்டும் தான் எனக்கு
தெரியும், நான் அவளைக்
கான வேண்டும் என அவசரப்பட்டதால்
அந்த அழகிய உள்ளத்தின்
தொடர்பை இழந்தேன். எப்படியும்
அவளை காண்பேன், அதற்க்கு
முன் அவளின் ஆசை கனவான
சரவணனா நீ ஒரு பெரிய மனிதனா வரவேண்டும்
என்ற ஏக்கத்தை நீக்கி
ஸ்வேதா இதொ உன் சரவணன்
உன் எண்ணத்தை நிறைவேற்றி
விட்டான் என்று சொல்லி
அவள் முன் நிற்க்க வேண்டும்
என்பதே என் ஆசைகள்.
(சிட்னி நகர தமிழ் மக்களே
உங்களில் யாரும் ஸ்வோதா
என்ற பவானியை(PAV) கண்டால்
இந்த செய்தியை அவளிடம்
சொல்வீராக .................)
அன்னைக்கு முதல் வணக்கம்
தமிழுக்கு தலைவணக்கம்
,
தமிழருக்கு வீர வணக்கம்,
என்
ஸ்வேதாவிற்க்கு உயிர்
வணக்கம்.

ஓரான் நெப்பொலியன்,(U
S A) இவரிடமிருந்து எனக்கு
பிடித்தது, தமிழ் விமாணத்தில்
1 மணி நேரப்பயணத்தில்
தமிழகம் வரும் தொலைவில்
இருந்து கொண்டு என் பையனுக்கு
தமிழ் பேச வராது என்று
பெருமை அடிக்கும் மும்பை
தாய்மார்களின் கைகளை
பிடித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு
மத்தியில் அழகு தமிழ்
பேசும் பாலகன், தனிப்பட்ட
முறையில் அடம்பிடிக்கும்
சுட்டி பையன் இவர் ஆனால்
விருந்தினர்கள் வந்திருக்கும்
போது ஓரார் சித்தப்பாடா
இது என்று சொன்னது மரியாதை
கொடுக்கும் குணம் இவரிடமிருந்து
நான் கற்றது. சொந்த சிரமங்கள்
என்ன இருந்தாலும் நாடி
வந்தவரின் மனம் நோகமல்
பார்த்துக்கொள்வது.
 |
 |

அறிஞன் ஆரோன்
(ABUDABI)
இவரிடம் எனக்கு பிடித்தது,
எப்பொருள் யார் யார்
வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் கான்பது
அறிவு. இந்த குறளுக்கு
அழகான உதாரனம் இவரை சொல்லலாம்.
எந்த செயலையும் ஒரு முறைக்கு
இருமுறை கவனமாக கேட்டு
செயல் படும் அழகு, எனது
தெற்கு மண்டல அலுவலகத்தில்
அவரை ஒருமுறை அழைத்துச்
சென்றபோது இந்தியாவின்
பங்கு வர்த்தகத்தை பற்றி
புள்ளி விபரமாக சொல்லி
என்னையும் சேர்த்து வியப்பில்
ஆழ்த்தியவர். எனது தென்மண்டல
அலுவலகத்தில் எனது மதிப்பை
உயர்த்தியவர். இவரிடமிருந்து
நான் கற்றது.உயரதிகாரிகள்
எதைசொன்னாலும் yes sir, yes sir என்று
சொல்லாமல், ஒரு முறைக்கு
இருமுறை கேட்டு சந்தேகங்கள்
இருந்தால் சார் இது புரியவில்லை
, கொஞ்சம் மீண்டும் விளக்குங்கள்
என்று கேட்டு கொடுக்கும்
பணியை விரைவாகவும் திறமையாகவும்
கற்றுக்கொண்டேன்.
|

அக்னிதா(USA)
இவரிடம் எனக்கு பிடித்தது
தேவையானவற்றை மட்டும்
பேசுவது, பழந்தமிழ் இலக்கியங்களில்
அன்னப்பறவையை பற்றி
ஒரு செய்தி உண்டு, பாலுடம்
தண்ணீர் கலந்து வைக்கும்
போது பாலை மட்டும் பருகிவிட்டு
தண்ணீரை அப்படியே விட்டு
விடும், இது இவருக்கும்
நான் உதாரனமாக சொல்வது இவரிடமிருந்து
நான் கற்றது. நிறைய கேட்க
வேண்டும் கொஞ்சம் பேசவேண்டும்
|
|
 |
 |
|
 |
"அறம் செய விரும்பு"
ஒளவை ஒரு வரி
"அன்பிலார் எல்லாம்
தமக்குரியர் அன்புடையார்
எல்லாம் உரியர் பிறக்கு"
வள்ளூவர் பெருமானின்
இரு வரி,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சம்மென்பதில்லையே, உச்சிமீது
வானிடிந்து வீழ்ந்து
விட்ட போதிலும், அச்சமில்லை
அச்சமில்லை அச்சம்மென்பதில்லையே,
மகாகவி பாரதியின் மூன்று
வரி,
எதிரியுன்னை வதம்செய
வந்தாலும் வேங்கைபோல்
எதிர், உதவி யேன யார் வந்தாலும்
உயிரை தந்து கூட உதவிடு, அறியாமல்
தவறிழைத்தாலும் வெட்கி
தலைகுனிந்திடு தமிழுக்கும்
தமிழனுக்கும் பங்கம்
விளைக்கும் யாராகினும்
புலியேன பாய்ந்தெதிர்திடு,
சரவணனின் நான்கு வரி
எனக்கு பிடித்தது,குழந்தை
பிடிக்கும் குழந்தையின்
மழழை பிடிக்கும் மழையின்
மீது பாசம் காடும் அம்மா
பிடிக்கும், அம்மாவின்
மீது கருனை காட்டும்
அப்பா பிடிக்கும், அப்பா
காட்டும் வானம் பிடிக்கும்
, வானம் தரும் மழை பிடிக்கும், மழை
தரும் வாசனை பிடிக்கும்,
வாசைனையில் வரும் பசுமை
பிடிக்கும், பசுமை விளைந்த
பயிர் பிடிக்கும், பயிர்
தரும் நெல்மணி பிடிக்கும், நெல்மணியில்
விலையும் புத்தரிசிபிடிக்கும், புது
அரிசி தந்த மண் பிடிக்கும்,
மண்ணில் உள்ள மனிதரை
பிடிக்கும், மனிதர் வணங்கும்
தெய்வம் பிடிக்கும், தெய்வத்திற்க்கு
என்னை பிடிக்கும், வணக்கத்துடன்
உங்கள் சரவணன் ராஜேந்திரன்
நாமும் ஒரு நதிதான்,
புனிதமான கங்கையில்
யமுனை கலப்பதால் அவள்
மேலும் புனிதமாகிறாள்,
காவிறியில் பவானி கலப்பதால்
அவள் அற்புதநதியாகிறாள்.
நம்மிலும் பல நதிகள்
கலக்கிறது. பிறந்தது
இந்து மதத்தில் பிறந்தேன்,
அப்பா பழனி முருகன் கோவிலுக்கு
அழைத்துச் சென்றார்,
அம்மா மதுரை மீனாட்சிஅம்மன்
கோவிலுக்கு அழைத்துச்
சென்றார், பிறந்தபோதே
கலந்தது இந்து மதம். பள்ளி
படிப்பு எல்லாம் கிரிஸ்தவ
மிஸினரி பள்ளிக்கூடங்கள்,
வேளாங்கண்ணி கோவிலுக்கு
அழைத்துச் சென்றார்கள்,
மதுரை சி எஸ் ஐ தேவாலயத்திற்க்கு
அழைத்துச் சென்றார்கள்,
என்னுள் கலந்தது, கிரிஸ்த்துவம்,
மும்பை வந்தேன் நாங்கள்
வசிக்கும் இடம் கோவண்டி
மும்பையிலேயே அதிகமாக இஸ்லாமிய
சகோதரர்கள் வாழும் பகுதி,
மாஹீம் தர்கா சென்றேன்,
ஹாஷி அலி தர்கா சென்றேன் என்னுள்
கலந்தது இஸ்லாம், ஆலத்திற்க்கும்,
தேவாலயத்திலும், தர்காகளுக்கு
சென்றதனால் மதங்கள் கலந்ததா
இல்லை ஆன்மீகம் பகுதியை
கானுங்கள் உங்களுக்கு
புரியும் ச ர வ ணா
|
 |
|
 |
|
|