Sangee Muzangu

UNITY
Home
Tibet dalai lama
ONRUPATTAAL UNTU VAAZU
Speak With Love
TuuRamagum UravukaL
For International Friends
KALAM
MUMBAI LOCAL
Unity or Disarray
Marutuva parvai
vanakkam nanparkalee
Teacher's Day
Ennaipatrri
tamil inaiya ezuththukal
Aanmeegapaarvai
ungal pathiugal
thamizukum oru vaazththu
India 60 years

தமிழீழம் (ஈழத்தமிழ் நாடு) ஆரோக்கியமான பார்வை


 

           தமிழீழம் (ஈழத்தமிழ் நாடு)

தமிழர்கள் இலங்கையில் அதிகம் வாழும் பகுதிகளான வடகிழக்கு இலங்கை உள்ளக்கிய பகுதிகளான ஈழத்தமிழகம் கடந்த பல ஆண்டுகளாய் ஆங்கிலேயரின் பிரித்தாழும் சூழ்ச்சியின் கீழும் விடுதலைக்கு பிறகு அதிகாரப் பகிற்விற்க்கு தமிழருக்கு ஏமாற்றம் கண்டும் , பிரகு இணப்பிறிவனைக்கு வழிவகுத்தது.
 
இலங்கை என்று அழைக்கப்பட்ட நாட்டிலே ஐரோப்பியர் வரமுன்னர் சுதந்திரமாக இயங்கிய மூன்று இராச்சியங்கள் இருந்தன.கண்டி , கோட்டை, யாழ்ப்பாணம் என்பனவே அவை.

யாழ்ப்பாண இராச்சியம் என்பது யாழ்ப்பாணப் பகுதியையும், தீவுப் பகுதிகளையும், மன்னார், முல்லைத்தீவுப் பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தது. 1619 ம் ஆண்டு யாழ்ப்பாணம் அடிமைப்படுத்தப்பட்டது. அதாவது போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தை தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர்.

 


பல தமிழ்குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து அகதிகளாக அனாதைகளாக அலைக்கழிப்பட , இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தின் காரணமாக இலங்கை தமிழினம் சொல்லன்னா துயருற்றது.
இந்த துயர் களைய ஆயுதம் ஏந்தி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டது தமிழினம், த‌மிழின‌த்தின் த‌லைவிதிபோல் ப‌ல‌ இய‌க்க‌ங்க‌ள் தோன்றினாலும் கால‌ப்போக்கில் அவை ம‌றைந்து விட‌, த‌ன்னுடைய‌ நேர்த்தியான‌ பாதையிலிருந்து வில‌காம‌ல் க‌டைசிவ‌ரை போராடிவ‌ரும் ஒரு இய‌க்க‌மாக‌ த‌மிழீழ‌ விடுத‌லைப்புலிக‌ள் என்ற‌ இய‌க்க‌ம் வெலுபிள்ளை பிர‌பாக‌ர‌னின் த‌லைமையில் போராடிவ‌ருகிற‌து.

இய‌க்க‌த்தில் பாதையில் ப‌ல‌ இடையூறுக‌ள் ப‌ல‌ வெளிநாட்டு த‌லையீடு, ஆத‌ர‌வு, த‌டைபோன்ற‌ ப‌ல‌ கார‌ண‌ங்க‌ளை க‌ண்டும், துவ‌ண்டு விடாம‌ல் 30 வ‌ருட‌ங்க‌ளாக‌ போராடிவ‌ந்த‌ன‌ர்.

அப்படி போராடிவ‌ரும் ஈழ‌த்த‌மிழீழ‌ர்க‌ள் , பிற‌க்கும் புதிய‌ வ‌ருட‌த்தில் த‌மிழீழ‌ த‌னிய‌ர‌சு பிர‌க‌ட‌ன‌வெளியிட‌ப்போவ‌தாக‌ இல‌ங்கை அர‌சாங்க‌மே ஒத்துக்கொண்டுள்ள‌து.

இது உல‌கின் பார்வையை மீன்டும் ஒரு முறை வ‌ட‌கிழ‌க்கு இல‌ங்கையை நோக்கி ஈர்க்க‌த்துவ‌ங்கியுள்ள‌து.

த‌னிநாட்டு பிர‌க‌ட‌ன‌ம்

ம‌னித‌ன் நாக‌ரீக‌ம‌டைந்த‌ பிற‌கு த‌ன‌து வ‌சிப்பிட‌த்தை தேர்ந்தேடுத்து த‌ன‌து மொழி, த‌ன‌து க‌லாச்சார‌ம், த‌ன‌து உண‌ர்வை ஒத்த‌ ச‌முதாய‌ம் என்ற‌ க‌ருத்தை ம‌ன‌தில் கொண்டு அத‌ற்க்கேன‌ எல்லைக‌ள் உறுவாக்கி வாழ‌ ஆர‌ம்பித்து 5,000 வ‌ருட‌ங்க‌ளுக்கு மேல் ஓடிவிட்ட‌து.
ஹ‌ராப்ப‌ மொஹ‌ன்சாத‌ரா, மொச‌ப‌டோமியா ம‌ற்றும் எகிப்த்திய‌ நாக‌ரீக‌ம் என்றால் அந்த‌ கால‌க‌ட்ட‌த்தில் நாக‌ரீக‌ம‌ற்று வாழ்ந்த‌ ம‌னித‌ இன‌ங்க‌ள் கூட‌  வேறு ந‌ப‌ர் புக‌விடாம‌ல் த‌ன‌து ச‌மூதாய‌த்தின் பாதுகாப்பிற்க்கா எல்லைக‌ளை உறுவாக்கி வாழ‌ ஆர‌ம்பித்து வ‌ரும் கால‌க‌ட்ட‌த்தில் ம‌க்கட் தொகை பெருக்க‌ம்,
 
 
ம‌ற்றும் நிர்வாக‌ வ‌ச‌தி போன்ற‌வ‌ற்றை க‌ருத்தில் கொண்டு ப‌ல‌ எல்லைக‌ள் ப‌ர‌ந்து விரிய‌ ஆர‌ம்பிக்க‌ ,போராசை தான‌க்கு தான் எல்லாம் என்ற‌ ப‌ல‌ முடியாட்சி ம‌ன்ன‌ர்க‌ளின் போக்கினால் அடிமைபோல் வாழ்ந்த‌ ம‌க்க‌ளின‌ம் த‌ங்க‌ள‌து எல்லைப்ப‌குதிக‌ளை தானே ஆழும் நோக்க‌த்துட‌ன், குறிப்பிட்ட‌ ப‌குதிக‌ளை உள்ள‌ட‌க்கி அறிவித்த‌ சுத‌ந்திர‌ப்பிர‌க‌ட‌ன‌மே இன்றைய‌ முழுமைபெற்ற‌ உல‌க‌ம், நாம் கானும் வ‌ரைப‌ட‌ நாடுக‌ள்.

இதில் ஐக்கிய‌ நாடுக‌ள் ச‌பை தோன்றும் முன்பு தோன்றிய‌ நாடுக‌ள் ச‌பை தோன்றிய‌ பிற‌கு தோன்றிய‌ நாடுக‌ள் என‌ இர‌ண்டாக‌ பிரிக்க‌லாம்.
அப்ப‌டி பிரிந்த‌ நாடுக‌ள் அவைக‌ள் நிலை அந்த‌ நாடுக‌ளின் வெற்றிக்கு கார‌ண‌ம் என்ன‌ ?? ஏன் தோல்விஅடைந்தார்க‌ள் என்று  பார்க்க‌லாம்
 
 
                                                                        ஸ்கொட்லாந்து
 
1320 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசரான முதலாம் எட்வர்ட்டின் நீதியற்ற தாக்குதல்களிலிருந்து தற்காத்துக்கொள்ள ஸ்கொட்லாந்து சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது. அந்தப் பிரகடனத்தைத் தொடர்ந்து இரு நாடுகளிடையே அப்போதைய 22 ஆம் பாப்பரசர் ஜோன் அனுசரணையாளராக செயற்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஸ்கொட்லாந்தின் மீதான பிரித்தானியாவின் உரிமை கோரல்கள் கைவிடப்பட்டு 1328 ஆம் ஆண்டு பிரித்தானிய பேரரசர் மூன்றாம் எட்வர்டினால் ஏற்கப்பட்டது
 
லத்தீன் அமெரிக்க நாடுகளின் சுதந்திரப் பிரகடனங்கள்
 
பராகுவே 1811 ஆம் ஆண்டு " ஒருதலைபட்ச சுதந்திரப் பிரகடனத்தை" அறிவித்தது
 
1816 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் நாள் அர்ஜெண்டினா சுதந்திரப் பிரகடனம் வெளியிட்டது. அர்ஜெண்டினாவின் சுதந்திரப் பிரகடனத்தை 9 ஆண்டுகள் கழித்து 1825 ஆம் ஆண்டு பிரித்தானியா உத்தியோகபூர்வமாக அங்கீகரித்தது.
 
1822 ஆம் ஆண்டு போர்த்துக்கலின் ஆதிக்கத்திலிருந்த பிரேசில் தனது சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது.

1825 ஆம் ஆண்டு பொலிவியா தனது சுதந்திரப் பிரகடனத்தை தானே அறிவித்தது.

1828 ஆம் ஆண்டு அர்ஜெண்டினா- பிரேசில் யுத்தத்துக்குப் பின்னர் உருகுவேயும் தன்னை சுதந்திர நாடாகப் பிரடகனம் செய்தது
 
அமெரிக்கா

1776 ஆம் ஆண்டு யூலை 4 ஆம் நாள் வட அமெரிக்காவில் பிரித்தானியாவுடன் அரசியல் தொடர்புகளை வைத்திருந்த 13 கொலனி நாடுகளை ஒருங்கிணைந்து சுதந்திரப் பிரகடனம் வெளியிடப்பட்டது. அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்திற்கு இடப்பட்டிருந்த தலைப்பு " 13 ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஏகமனதான பிரகடனம்" என்பதாகும். இன்றளவும் அந்த ஜூலை 4 தான் அமெரிக்காவின் சுதந்திர நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த சுதந்திர நாள் பிரகடனத்தை உருவாக்கியவர்கள் , தோமஸ் ஜெப்பர்சன் , ஜோன் ஆதம்ஸ் , பெஞ்சமின் பிராங்களின் ஆகியோராவர்
 
                                                                                    இந்தோனேசியா
 
1945 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இந்தோனேசியாவின் தேசியவாதத் தலைவர் சுகர்னோ சுதந்திரப் பிரகடனத்தை அறிவித்து அரச தலைவரானார்.
ஐ.நா. பிறப்பின் பின்னர் தோன்றிய நாடுகள்

  1, வியட்நாம்,
2, இஸ்ரேல்,
3, பலஸ்தீனம்,
4, கிழக்குத் திமோர் ,
7,சோமாலிலாந்த்,
6, தென் கமரூன்
 
அதேவேளையில் பாலஸ்தீனத்தை மற்ற நாடுகள் அங்கிகரிக்காத நிலையில் இஸ்லாமிய நாடுகள் அங்கிகரித்த கூத்தும் நடந்து வருகிறது
 
சுதந்திரத்தை பிரகடனபடுத்திய பிறகு தோல்வியை கண்ட நாடுகளின் நடவடிக்கைளை நன்கு கவனிப்போமானால், அதன் தோல்விக்கு முதல் முக்கிய காரணம் மக்களின் ஏகோபித்த ஆதரவு, இது ஒரு நாட்டினுடைய சுதந்திர பிரகடனபடுத்தும் இயக்கமோ, தலைவரோ, குழுக்களோ எதுவானலும் அவற்றிற்க்கு மக்களின் ஆதரவு இருக்கும் பட்சத்தில் காலம் தாழ்ந்தாலும் உலகம் அவற்றை ஏற்றுக்கொள்ளும் ஆனால் மக்கள் ஆதரவு இல்லாத நேரத�����தில் அது தோல்வியே.
அடுத்து எல்லைகளை நிர்னயிப்பதில் குழப்பம், தனிமனித எச்சோதிகாரம் போன்றவை ஒரு சுதந்திரபிரகடனபடுத்தும் நாட்டின் தோல்விக்கு காரணமாகிவிடும்
ரெடீசியா என்னும் நாடு  ஒரு சீமானின் கையினால் எச்சோதிகாரமாக உறுவாக்கி பிறகு தோல்வியில் விழ்ந்தது. உலகினுக்கு ஒரு பெரும் பாடமாக அமைந்தது.

வெற்றி என பார்க்கும் போது பல நாடுகளை சொல்லாம் .
ஆனால் இரத்தம் சிந்தி பெற்ற சுதந்திரத்தை மக்கள் எந்த அளவு மதிப்பார்கள் என்பதற்க்கு அயிரோப்பிய நாடுகள், சாட்சியாக உள்ளது. ஆனால் அமைதிவழியில் வாங்கிய சுதந்திரம் எந்த அளவு சூரையாடபடுகிறது என்பது இந்தியாவில் நாம் கண்கூடாக கானும் காட்சி

 

                                                                   இனி தனித்தமிழ் ஈழம் பற்றி பார்க்கலாம்.
முதலில் தமிழ் ஈழம் பிரகடனபடுத்தினால் ஆதரிக்கப்போகும் நாடுகளில் முதன்மை படுத்தினால் தென் அமேரிக்க நாடுகள், மற்றும் சில அயிரோப்பிய நாடுகள், கனடா, என பட்டியலிட்டால், ஆஸ்திரேலியா மற்றும்  ஆசிய நாடுகள் புதிதாக தோன்றிய நாட்டின் ஆட்சி அமைப்பை பொருத்து தனது ஆதரவை தெரிவிக்கும்,
அப்ப‌டி நீழும் ப‌ட்டிய‌லில் ச‌ப்பான் கொரியா, இதில் அமேரிக்கா ம‌ற்றும் இங்கிலாந்தின் நிலை ந‌கைப்புகுள்ளாகும் வித‌த்தில் இருக்கும். அதாவ‌து
இந்தியாவில் தீவிர‌வாதிக‌ளை ப‌ற்றி க‌வ‌லை ப‌ட்டுக்கொண்டே தீவிர‌வாத‌த்திற்க்கு ஆத‌ர‌வு த‌ரும் பாகிஸ்தானையும் ம‌டியில் போட்டு கொஞ்சும் க‌தை போல் இல‌ங்கைக்கும் ஜே போட்டுக்கொண்டு ஈழ‌த்திற்க்கும் வாழ்க‌ கோச‌மிடும் கூட்ட‌ம்.

 ஆனால் இதிலிருந்து முற்றிலும் வில‌கி நிற்க்கும் இல‌ங்கையும் இந்தியாவும், இல‌ங்கை பிரிவினையை ஆத‌ரிக்காது என்ற‌ நோக்கில் பார்க்க‌லாம்.
ஆனால் இந்தியாவின் நிலை திரிச‌ங்கு நிலை தான், காங்கிர‌சு ஆட்சியிலிருக்கும் ப‌ட்ச‌த்தில் ராஜீவ் காந்தி கொலை என்ற‌ ஒரே ப‌ழைய‌ ரிக்கார் பிளேய‌ரை மாற்றி மாற்றி போட்டுக்கொண்டிருக்கும் ஏனேனில் காங்கிர‌சு கார‌ர்க‌ளுக்கு காந்தியை விட்டால் வேறு யாரும் க‌ண்ணில் ப‌ட‌மாட்டார்க‌ள்,
இந்திராவில் ஆர‌ம்பித்த‌ காங்கிர‌சின் த‌லையெழுத்து இன்று பிரிய‌ங்கா காந்தியின் 2 வ‌ய‌து ம‌க‌ள் வ‌ரை கோச‌ம் போடுகிறார்க‌ள்

காங்கிரசு காரர்களாக பார்த்து திருந்தாவிட்டால் இந்த காந்தி போதை மாறாது. மேலும் இந்திரா காந்தியை கொன்ற சீக்கியர்களை தலைமை ராஜாங்க அமைச்சர் பதவியில் ஏற்றி மகிழ்ந்த சோனியா காந்தி ஈழத்தமிழரின் நிலையில் மட்டும் மௌனம் ஏன் இதற்க்கு ஒரே பதில் சோனியா மனது வைத்தாலும் மற்றவர்கள் முட்டுகட்டை போடுவார்கள்.
ஏன் நம்ம ஊர் காங்கிரசு தலிவர் கூட கூப்பாடு போட்டுக்கொண்டு டில்லி ஓடுவார்( தமிழ் செல்வன் இரங்கல் சுவரொட்டிகளை பற்றி டில்லியில் பேசப்போகிறேன் என வாசன் அறிக்கை விட்டதை கவனிக்கவும்)
சீக்கியர்களை பற்றி பேசினால் இந்திராவை கொன்றவர்கள் தண்டிக்கபட்டு விட்டனர், என சாக்கு சொல்கிறது காங்கிரசு. பாரதிய சனதா ஆட்சிக்கு வந்தால் (வராது இருந்தாலும்) முதலில் சனநாயகம் மலரட்டும் பிறகு பார்க்கலாம் என்பர். நரேந்திர மோடியை கேட்டு விட்டு சொல்வார்கள் சனநாயகம் என்ன வென்று.

கம்யூனிஸ்டுகள் ஆளுக்கொன்றாக ஸ்டேட்மென்ட் விடுவார்கள். கேரளா கம்யுனிஸ்ட் ஒன்று சொல்ல தமிழக ராஜா, வரத் போன்றோர்கள் ஒன்று சொல்ல வங்கத்தில் ஜோதிபாசு ஒன்று சொல்ல என தனக்குள்ளே குழம்பி போவார்கள்.
 ஆக மொத்தம் இந்தியா ஆதரவு ���ெ���ிவிக்கும் என்பது, கானல் நீர் போல்தான் அதனால் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை, நட்டம் இந்தியாவிற்க்குதான் என்பது ஈழத்தில்  விரைவில் மலரும் பொருளாதார ஏற்றங்களை கண்ட பிறகு தெரிய வரும்.

இருபுரமும் ஏற்க்காவிட்டால் இழப்பு உண்டா என்ற கேள்விக்கு இல்லை என்ற பதில் தான், ஏனேனில் நான்கு புறமும் அரபிய நாடுகளால் சூழப்பட்ட இஸ்ரேல் எந்த ஒரு தடங்களும் இன்றி இன்று உலகின் பல தொழில் நுட்ப சாதனை புரிந்தது.
 
மேலும் இந்தியாவின் நிலை என்ன அன்டை நாடுகளுடனான சுமூக உறவு என்று பார்த்தால் ஒன்றும் மில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

பக்கத்தில் பாகிஸ்தானுடன் ஒரு பனிப்போர், பங்களாதேசுடன் சுகமற்ற நல்லுரவு, சீனாவோ மஹாதமாவின் அஸ்தி கைலாயம் மானேஸ்வரத்திற்க்கு கொண்டு சென்ற பாதையை கூட பிடுங்கி கொண்டு இன்று கைலாயம் காண செல்லும் இந்திய யாத்திரிகளிடன் அனுமதி இல்லாமல் நுழையாதே என்கிறது. டில்லி அரசும் கைகட்டிகொண்டு வேடிக்கை பார்க்கிறது.

 ஈழத்தின் சுத‌ந்திர‌ பிர‌க‌ட‌ன‌ம் என்ப‌து த‌ற்போதைய‌ சூழ‌லில்  உலகம் ஏற்றுக்கொள்ளும் ஒரு நிலையில்தான் உள்ள‌து. அதே வேளையில் ஒரு சில‌ ப‌குதிக‌ளை கைய‌க‌ப‌டுத்தும் ந‌ட‌வ‌டிக்கைக‌ளை வ‌ரும் மாத‌ங்க‌ளில் புலிக‌ள் எடுப்பார்க‌ள் என‌பது இல‌ங்கை புல‌னாய்வுத்துறையின் அறிக்கை
"ஒரு பெருவெடிப்பிற்க்கு பிற‌கு புதிய‌ பிர‌ப‌ஞ்ச‌ம்"
  என்ற‌ நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்க‌   இல‌ங்கை அர‌சோ "பொட்டு வெடி போட்டு கைகொட்டி சிரிக்கும் குழ‌ந்தை"   நிலையில் இருக்கிற‌து   ((அடுத்த பகுதியில் புதிதாக மலரும் ஈழத்தின் பொருளாதாரம், மற்றும் அங்கு கிடைக்கும் கணிம வளங்கள் பற்றிய இந்தியாவின் ஒரு நிறுவனமும்
ஒரு அயிரோப்பிய நாட்டுடன் இனைந்து நிகழ்த்திய ஆய்வின் போது கண்டரிய பட்ட உண்மைகளும் சமீபத்தில் தசரா விழாவின் போது வாய்தவறி சிவ சேனைதலைவர் தாக்கரே சொன்ன ஒரு உன்மையையும் காண்போம்))
 --

Enter content here

Enter supporting content here

ஸ்வேதா மேகம் சிந்தும் ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தேடுகிறேன்