|
 |
பிரிவினையில்
ஒற்றுமை
|
 |
.1947 பிரிவினையில்
ஒற்றுமை. அன்புள்ள மகளுக்கு
வாப்பா எழுதும் கடிதம்
, இங்கு அனைவரும் நலம்
அது போல் அங்கு நீ அம்மிஜான்
, வாசீம், ஈசான், மற்றும்
போஸ்ட்மேன், கதிரேசன்,
வத்தியார் கணபதி பிள்ளை
அனைவரின் நமறிய ஆவல், ரஜாக்கிடம்
உனது புகைப்படத்தை காண்பித்தேன்.
ரோம்ப வெட்க்கபட்டான்.
இன்னும் இரண்டு வாரங்களில் லன்டன்
செல்கிறான். அதன் பிறகு
லாகூர் வந்த பிறகு அவனையும்
கூட்டிக்கொண்டு மதுரை
வருவேன். பட்னாவிலிருந்து
மோஹன்லான் பையாஜி உனக்காக
ஒரு சால்வை அனுப்பிருந்தார்.
அதையும் கொண்டு வருகிறேன். அம்மிஜான்னுக்கு
சுகர் இப்பொழுது எப்படி
இருக்கிறது இன்னும் ,
அவர்களை காலையில் கோரிப்பாளையத்திலிருந்து
கலக்டர் அலுவலகம் வரை
நடக்க சொல், நாளை ஈசான்
அண்ணா அங்கே வருவதாக
மதுரை புறப்படுகிறார்.
அவரிடம் சால்வையையும்
கொஞ்சம் நகைகளையும் கொடுத்து
அனுப்புகிறேன். தோல்
வியாபாரத்திற்க்கு காபூலிலிருந்து
இரண்டு வியாபாரிகளை ஏஜென்டாக
சேர்த்துள்ளேன். அல்லா
அருளால் எல்லாம் நல்ல
படியாக நடக்கும். காந்தி
லாகூரில் வந்து பொதுக்கூட்டம்
நடத்தினார். அப்பொழுது
மதுரை கோவில் அரிஜன நுழைவை
பற்றி பேசினார் ரொம்ம
பெருமையாக இருந்தது.
நமது குப்பு சாமி, சுப்பையா
எல்லோரும் சென்றிருப்பார்கள்.மினாட்சி
அம்மையின் விக்ரகத்தை
நேரில் தரிசித்திருப்பார்கள்.
மகளே இங்கு விடுதலை போராட்டம்
தீவிரமடைந்திருக்கிறது.
லன்டனில் இருந்து மௌண்ட்
பேட்டன் என்னும் புதிய
கவர்னரை மகாராணி நியமித்துள்ளார்கள்.
அவர் நல்ல மனிதர் போல்
தெரிகிறது. மகாராணியிடம்
இந்திய மக்களின் எண்ணத்தை
எடுத்து சொல்லி விரைவில்
விடுதலை பெற ஆவன செய்வார்
எனத்தெறிகிறது. எனக்கு
இன்னும் மனம் வலிக்கிறது.
பகத்சிங்கின் தூக்கு
தண்டனையின் போது லாகூர்
சிறைக்கு வெளியே நடந்த
போரட்டத்தில் நானும்
தான் இருந்தேன். என்ன
செய்ய இத்தனை இந்தியர்கள்
இருந்து தங்க மகனை வெள்ளையர்களின் பிடியிலிருந்து
காப்பாற்ற முடியாமல்
போய் விட்டது. இப்படிக்கு
ஜமால் முகம்மது லாகூர்
மேற்க்கு இந்தியா. அன்புள்ள
வாப்பா அவர்களுக்கு பாத்திமா
எழுவது. இங்கு அனைவரும்
நலம் அப்பா ஈசான் அண்ணா
நீங்கள் அனுப்பிய பொருள்
அத்தனையும் கொடுத்தார்.
எல்லொரும் நலமாக இருக்கிறோம்
. வா ஊ சி அவர்கள் சிறையிலிருந்து
விடுதலை ஆகிவிட்டார்.
ஆனால் அன்னிய உடமைகள்
எரிப்பு போராட்டத்தில்
கலந்து கொண்டு மீண்டும்
சிறைக்கு சென்று விட்டார்.
திருப்பூரில் குமரன்
என்னும் இளைஞரை போலிசார்
அடித்ததில் அவர் உயிரிழந்து
விட்டார். அவர் தன் உயிர்
போனாலும் பாரதக்கொடியை
விடாமல் தன் இன்னுயிர்
நீத்தார் தமிழகமெங்கும்
அவரது பேச்சுதான் அப்பா,
வடக்கே பகத்திங் என்றால்
இங்கே குமரன் போன்ற இளைஞர்கள்,
இவர்கள் இன்னுயிர் நீத்து
வாங்கித்தரும் சுதந்திரம்
மிகவும் விலையுயர்ந்தது
அப்பா , அதனால் திருமணம்
ஆனா பிறகு நான் இவர்களின்
வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக
எழுதலாம் என்றிருக்கிறேன்
. வரும் தலைமுறைகள் இதை
கண்டு எதிர்காலத்தில்
வரும் தலைமுறை சுதந்திரத்தை
தக்க முறையில் பேணிகாக்க
வேண்டும். பாத்திமா கோரிப்பாளையம்
மதுரை இந்தியா. அன்புள்ள
மகள் பாத்திமா , அனைவரும்
நலமா இங்கு சுதந்திர
போராட்டம் மிகவும் தீவிரமடைந்துள்ளது.
எப்படியும் ஆகஸ்ட் மாதத்திற்க்குள்
ஆட்சி அதிகாரத்தை நமக்கு
தந்து விடுவார்கள் போல்
உள்ளது. ஆனால் ஒரு புதிய
அதிர்ச்சி தரும் செய்தி
ஜின்னா அவர்கள் முஸ்லீம்களுக்கா
புதிய நாட்டை உருவாக்கித்தாருங்கள்
என ஆங்கிலேயரிடம் சொல்கிறார்.
அதற்க்கு காந்திஜிக்கு
உடன் பாடில்லை ஆனால்
டில்லியில் இதற்க்கான
வேலைகள் தயாராகிவருவதாக
செய்திகள் வருகிறது.
அப்படி முஸ்லீம்களுக்காக
தனி நாடு உறுவாகிவிட்டால்,
நீ அம்மிஜானும் ,வாசீம்,
ஈசான் எல்லோரும் புறப்பட்டு
வந்துவிடுங்கள். இங்கு
இப்பொழுதுள்ள சூழ்நிலையில்
எனக்கு அங்கு வரவேண்டும்
உங்களை எல்லாம் பார்க்க
வேண்டும் தான் மனம் சொல்கிரது.
முடிந்தவரை பார்க்கிறேன்
. இல்லையென்றால் புறப்பட்டு
வந்து விடுகிறேன். அதிகமாக
வெளியே எங்கும் சுத்த
வேண்டாம். தம்பிகளிடம்
சொல்லி வை வாப்பா ஜமால்
முகம்மது லாகூர். பிரியமுள்ள
வாப்பா ஆதாப், பாத்திமா
எழுதுவது , அப்பா பாரதம்
இரண்டு துண்டாக ஆக்கப்படுவது
முடிவாகிவிட்டது. வடக்கில்
அனைத்து முஸ்லீம்களும்
பாகிஸ்த்தான் செல்ல தயராகிவிட்டனர்.
ஆனால் தமிழகத்தில் அது
முடியாத காரியமப்பா இங்கே
அனைவரும் அண்ணன் தம்பிபோல்
பழகிவிட்டோம்.வாழ்ந்தாலும்
இறந்தாலும் இங்கேயே என்பது
முடிவாகிவிட்டது. மேலும்
கதிரேசன், வத்தியார்
கணபதி பிள்ளை அனைவரும்
இன்று வீட்டிற்க்கு வந்து
அப்படி யாரும் போகும்
சூழல் ஏற்பட்டாலும்
நீங்கள் போக வேண்டாம்
என்று சொன்னார்கள். திருப்பரங்குன்றத்தில்
முகைதீன் மாமாவும் இதைத்தான்
சொல்கிறார்கள். அதனால்
நீங்கள் இங்கு வந்து
விடுங்கள். எங்களுக்கு
தமிழகத்தில் இருக்கையில்
பயமில்லை ஆனால். உங்களை
நினைத்தால் தான் வாப்பா
பயமாக இருக்கிறது. இந்த
கடிதம் கண்டதும் உடனே
புறப்பட்டு வரவும். தயவு
செய்து நீங்கள் எந்த
வேலை இருந்தாலும் விட்டு
விட்டு வந்து விடுங்கள்.
இங்கு போஸ்ட்மேனை போலீஸ்காரர்கள்
பிடித்து சென்று விட்டார்கள்.
அவர் பொதுக்கூட்டம் போட்ட
காரணத்தால் அவரை கைது
செய்து விட்டனர். மீண்டும்
மீண்டும் சொல்கிறேன்
கடிதம் கண்ட உடன் புறப்பட்டு
வரவும். அம்மிஜான் உங்கள்
நினைவால் கவலைபட்டுக்கொண்டிருக்கிறார்கள். மகள்
பாத்திமா கோரிப்பாளையம்
மதுரை இந்தியா
|
 |
|
 |
|
 |
|
|
கண்ணடம் கலந்த
தமிழ் வாடை வீசும் கிராமம்,
தமிழகத்தின் எல்லை கிருஷ்னகிரி
மாவட்டத்தின் வடகோடி
வாகைகுடி கிராமாம் , இந்த
கிராமத்தை கடந்தால்
அடுத்து வருவது கருநாடகதான்.
மதிய வெப்பம் தனிந்து
மாலைகுளிர் வர ஆரம்பிக்கிறது.
மூன்று கூட்டு அடுக்கு
மாட்டு வண்டியில் 20 வதுக்கும்
மேற்பட்ட இளைஞர்கள் கையில்
அறிவாலும் சூலமும் ஈட்டியும்
ஏந்திக்கொண்டு வர ஆடு
மேய்த்து கொண்டிருந்த
முத்துவின் மகன் இதை
தூரத்தில் இருந்து பார்த்து
விட்டு தனது அப்பாவிடம்
சொல்ல முத்துவும் ஊர்ப்பெரியவரான
குழந்தை வேலு ஐயாவிடம்
சென்று ஐயா மூன்று மாட்டு
வண்டியில் ரொம்ப பேர்
வராங்கையா கையில ஈட்டி
அறிவால், சூலமெல்லாம்
வைத்திருக்கின்றனர்
சொன்னார். அதற்க்குள்
மாட்டின் சலங்கை சத்தம்
அருகில் கேட்க்க ஆரம்பித்தது.
அதிலிருந்து ஆஜானுபவான
ஒருவன் இறங்கினான். வடமொழியும்
தமிழும் கலந்த கொச்சை
மொழியில் பேச அதுபுரியாத
குழந்தைவேலு அருகில்
இருந்த சங்கரனிடம் தம்பி
ஜோசப்பை கூட்டிவா இவன்
என்ன சொல்கிறான் என்று
புரிய வில்லை. என சொல்ல
சிறிது நேரத்தில் ஜோசப்
அங்கு வர அவரிடம் தம்பி
இவன் என்ன சொல்ல வருகிறார்
என்று தெரியவில்லை கொஞ்சம்
விளங்கவை உனக்குத்தான்
வரமொழி தெரியுமே என சொல்ல
அவனும் அவரிடம் வடமொழியில்
பேசியவுடன் ஜோசப்பின்
முகம் இருளத்துவங்கியது. பதட்டத்துடன்
குழந்தைவேலுவிடம் ஐயா
நம்ம நாடு சுதந்திரம்
இன்று இரவு ஆகப்போகிறதான்,
ஆனால் இந்துக்களுக்கு
என்றும் முஸ்லீம்களுக்கு என்று
ஆங்லேயர் பிரித்து விட்டனர்.
அதனால் இங்குள்ள முஸ்லீம்கள்
எல்லாம் புதிதாக பிரியப்போகும்
பாகிஸ்த்தான் என்னும்
நாட்டிற்க்கு செல்ல வேண்டும்
அப்படி செல்ல மறுப்பவர்களை
விரட்டியடிக்க வேண்டும்
, அதற்க்குத்தான் இவர்கள்
வடக்கே இருந்து வந்திருக்கிறார்கள்
என சொல்ல குழந்தை வேலுவின்
உள்ளம் வேதனையுற்றது.
அதற்க்குள் இருட்ட ஆரபிக்க
ஜோசப்பிடம் சரிப்பா இவ்வளவு
தூரம் வந்திருக்காங்க
என்ன சாப்பிட்டாங்களோ
என்னவோ அதனால் அனைவரையும் எனது
வீட்டிற்க்கு வந்து சாப்பிட்டு
விட்டு ஓய்வெடுக்க சொல்,
காலையில் எல்லாம் பார்த்துக்கொள்ளலாம்
என்றார். ஜோசப்பும் இதை
சொல்ல வந்த நபர்கள் அனைவரும்
சரி யென்று சொல்ல , குழந்தை
வேலுவிற்க்கு மனதிற்க்குள்
பல கேள்விகள் இவர்களை
இப்படியே விட்டால், இவர்கள்
தமிழகத்திற்க்குள்
ஊடுறுவி ரகளை செய்ய ஆரம்பித்து
விடுவார்கள், இவர்களை
எதிர்க்க நம்மிடம் பலமுமில்லை
என்ன செய்யாலாம் என்று
யோசித்துக்கொண்டே தனது
வீட்டிற்க்குள் நுழைந்தவர்
தனது மனைவியிடம் தனம்
ஒரு 30 பேருக்கு சாப்பாடு
தயார் செய்ம்மா , என்று
சொல்லிவிட்டு தனது அறைக்கு
சென்று யோசனையில் மூழ்கினார்,
அவர் அந்த பகுதியில்
உள்ள பல கல் குவாரிகளின்
முதலாளி, மேலும் நாட்டு
வைத்தியர் வேறு தனது
அறையில் அமர்ந்து யோசித்துகொண்டிருக்கையில்
காயமுற்றவர்களுக்காக
தரப்படும் உடல் மரத்து
போகச்செய்யும் மருந்து
கண்ணில் பட அவருக்கு
ஒரு யோசனை தோன்றியது.
சரி என்ன ஆனாலும் பரவாயில்லை
என்று ஒரு முடிவிற்க்கு
வந்தவராக அந்த மருந்து
பாட்டிலை எடுத்துக்கொண்டு
வந்தவர், அதற்க்குள்
அவரது மனைவி சமையல் எல்லாம்
ஆக்கி தயார் செய்து விட
தோட்டத்திற்க்கு போய்
வாழையிலை கொண்டு என்று
அவர்களுக்கு சொல்ல அவரது மனைவியும்
சரி என்று சொல்லி விட்டு
தோட்டத்திற்க்கு செல்ல
அங்கு இருந்த மோர் பானையை
திறந்தவர், அனைத்து மருந்தையும்
அதில் கொட்டி கலந்துவிட்டு
மீண்டும் மருந்து சீசாவை
தனது அறைக்கு சென்று
வைத்துவிட்டார். அனைவரும்
சாப்பிட்டு விட்டனர்.
தனது கையேலேயே அனைவருக்கும்
மருந்து கலந்த மோரை குடிக்க
கொடுத்தார். தனது மனைவியிடம்
இவர்கள் வராந்தாவிலேயே
தூங்கட்டும் நீங்கள்
எல்லோரும் வீட்டில் போஉ
தூங்குங்கள் என்று சொல்லி
விட்டு கல்குவாரியை நோக்கி
நடையை கட்டினார். வெடிபோட
நாகர்கோவிலிருந்து குடும்பத்துடம்
அங்கு வந்து தங்கியிருந்த
குப்பனின் குடிசையை நோக்கி
சென்றவர். அவர் தூரத்தில்
வருவதை பார்த்த குப்பன்
ஓடிச்சென்று ஐயா என்னங்கையா
இந்த இரவு நேரத்தில்
நீங்க சொன்னா நான் வந்திருக்க
மாட்டேனா என்றான். அதற்க்கு
அவர் குப்பா எத்தனை குழிப்பா
போட்டிருக்கிறாய் என்று
வினவ ஐயா இன்னும் 4 மாதத்திற்க்கான
66 குழி போட்டு விட்டேன்.
இரண்டு நாளைக்கு ஒரு
குழி வெடிவைத்தாலும்
இன்னும் 6 மாதத்திற்க்கு
குழி போட தேவையில்லை
ஐயா என்றவனை அமைதியாக
பார்த்து எல்லா குழிக்குமே
இன்று வெடிவைக்க முடியுமா
என்றார் , அவரது பேச்சைகேட்டு
அதிர்ந்து போன குப்பன்
ஐயா என்ன சொல்ரீங்க அப்படி
போட்டா மலையே கானாமல்
போய்விடும் ஐயா அப்புரம்
ஊருக்குள் கல்விழும்
என்றான். அதற்க்கு அவர்
குப்பா இன்று இரவு இந்தியா
சுதந்திரம் ஆகப்போகிரது அதனால்
இந்த சந்தோச செய்தி சேலம்
வரைக்கும் கேட்பது போல்
வெடி போடனும் என்றார்.
குழம்பி போயிருந்த குப்பனை
பார்த்து உன்னால் முடியுமா
முடியாதா எனக்கு இன்று
66 குழியிலும் வெடிவைத்தாக
வேண்டும் என்றார். அவனும்
என்னங்கையா இப்படி சொல்ரீங்க
உங்க உப்பை தின்று வளர்ந்த
உடம்பு உங்களின் கட்டளையை
ஏற்க்க மறுத்தால் எங்க
பரம்பரைக்கே சோறுகிடைக்காது.
சரிங்கையா நீங்க சொல்வது
போல் இன்று இரவே அனைத்து
குழியிலும் வெடி வைத்து
விடுகிறென் என்று சென்னவன்.
வெடிமருந்து மூட்டையையும்
ஹரிகேன் விளக்கையும்
எடுத்து கொண்டு வெடிவைக்க
கிளம்பிவிட்டான். மீண்டும்
ஊருக்கு வந்தவர் மணியை
பார்த்தார் மணி ஒன்பதை
கடந்து விட்டது. வடக்கிலிருந்து
வந்த அனைவரும் உடல் மரத்து
போய் அங்காங்கே படுத்து
கிடக்க பக்கத்தில் உள்ள
சுந்தரத்தேவரையும் கனிநாடாரையும்
வீடிற்க்கு சென்று அழைத்தார்.
இருவரும் என்னங்கையா
இந்த ராத்திரியில் என்று
கேட்க்க வடக்க இருந்து
ஒரு முப்பது பேர் விருந்துக்கு
வந்தாங்கே குடித்துவிட்டு
கண்மண் தெரியாம தூங்கிறாங்க
பெண்டு பிள்ளைங்க இருக்கிற
இடம் அதனால் இவங்களை
கொஞ்சம் ஊர் கடைசியில்
இருக்கும் மலைக்கு அடிவாரத்தில்
தூங்க வைக்கலாம் காலையில்
அங்கேயே கல்கிடங்கில்
குளித்துவிட்டு பிறகு
ஊருக்கு வரட்டும் குடிகார
பசங்க என்றார். அவர்களும்
சரி என்று சொல்லி விட்டு
ஒருவர் ஒருவராக மயங்கிகிடந்த
அனைவரையும் தூக்கி மலை
அடிவாரத்தில் போட்டு
விட சரிப்பா எல்லோரும்
போய்த்தூங்குங்க மன்னித்துக்கொள்ளுங்கள்
உங்க தூக்கத்தை கெடுத்து
விட்டேன் என்று சொல்ல
அவர்களும் பரவாயில்லை
ஐயா என சொல்லி விட்டு
மீண்டும் வீடு பொய் தூங்க
சென்றுவிட்டார்கள். இப்பொழுது
மணி 10 ஐ தாண்டிவிட்டது.
ஊரே அயர்ந்து தூங்கி
கொண்டிருக்க குழந்தை
வேலுமட்டும் ஊர்த்தெருவில்
ஒரு பார்வை பார்த்துவிட்டு
தனது துண்டை தண்ணீரில்
நனைத்துக்கொண்டு முதலில்
அன்சாரி வீட்டிற்க்கு
சென்றார். அங்கு அன்சாரியும்
அவரின் இரு பையன்களும்
வீட்டு தின்னையில் நன்றாக
உறக்கத்தில் இருந்தனர்.
சாமிகளா எங்களையும் இந்த
மண்ணையும் விட்டு விட்டு
சென்று எப்படி வாழ்வீர்கள்
. அப்படியே நீங்கள் சென்றாலும்
நீங்க எங்கோ ஒரு தேசத்தில்
கஸ்டப்படுவதை கண்டு எங்கள்
மனம் எவ்வளவு வேதனைப்படும்
, வேண்டாம் நீங்கள் எங்களை
விட்டு எங்கும் செல்ல
கூடாது. நான் செய்யும்
காரியம் தவறாக பட்டாலும்
எனக்கு இதை தவிர ஒன்றும்
தொனவில்லை கண்ணுகளா என்று
மனதிற்க்குள் சொல்லி
விட்டு துண்டை அவர்களின்
முகத்தை நோக்கி உதர நீர்த்துளிகள்
கண்ணில் பட்டது. அன்சார்
பட்டென்று எழுந்த உடன்
குழந்தைவேலு பாய் மழைத்தூறல்
எடுக்குது ஆலங்கட்டி
மழை வரும் போல் இருக்கிறது.
அதனால் குழந்தைகளை அழைத்து
கொண்டு வீட்டில் போய்த்தூங்குக
என்ற உடன் தூக்க கலக்கத்தில்
இருந்த அன்சாரியும் குழந்தைகளை
அழைத்துக்கொண்டு வீட்டிற்க்கு
செல்ல இதே காரனத்தை சொல்லி
தின்னையில் படுத்திருந்த
அனைவரையும் வீட்டில்
போய் படுக்கச்சொல்லிவிட்டு
ஊரில் இருந்த அனைத்து
வீட்டில் கதவுகளை வெளிப்புரமாக
தாழ் போட்டார். நேரம்
சரியாக 11:30 ஆகியிருந்தது.
அந்த கும்மிருட்டிலும்
லாந்தர் விளைக்கினைஎடுத்துக்கொண்டு
வேகவேக மாக குப்பனின்
குடிசையை நோக்கி சென்றவர்.
என்னப்பா ஆயிடுச்சா என்றார்,
அவனும் ஆமாங்கையா எல்லா
குழியிலும் மருந்து வைத்துவிட்டேன்.
10 குழிக்கு ஒருகுழி எர்த்
அதனால் 6 குழி மருந்து
பலமா இருக்கும் ஐயா ஆனா
இப்படி ஒரு வேலையை நான்
இதுவரைக்கும் செய்ததே
இல்லை, எனக்கும் மனதில்
கொஞ்சம் பயமாத்தான்
இருக்கு என்றான் . அவரும்
சரி உன் மனைவியையும்
குழந்தையும் என்னுடன்
அனுப்பிவிடு நீ கல்லு
குகைக்கு போ சரியா 12 மணி
க்கு நான் சங்கு ஊதுவேன்
அந்த சத்தம் கேட்டதும்
நீ வெடி வைக்க ஆரம்பி
சரியா. என சொல்லி விட்டு
அவனின் பதிலை எதிர்பாராமல்
அவனது குழந்தைகளையும்
மனைவியையும் அழைத்துகொண்டு
வீட்டிற்க்கு வந்து விட்டார்.
வரும் வழியில் யாரும்
வெளியில் படுத்திருக்கிறார்களா? என்று
நோட்டமிட்டவாரே, வீடு
வந்து சேர்ந்தவர், தனது
மனைவியை எழுப்பி குப்பனின்
மனைவிக்கு சாப்பாடு கொடுத்து
தூங்க வை என சொல்லிவிட்டு
கதவை தாழிட்டுவிட்டு
மாடியறைக்கு வந்தவர்
தூரத்தில் குப்பனின்
ஹரிக்கேன் விளக்கு ஒளி
புள்ளியாய் தெரிய , மலைக்கு
இந்த பகுதியில் அந்த
மனிதர்கள் படுத்திருப்பது
கும்மிருட்டில் குப்பனுக்கு
தெரிய வாய்ப்பில்லை என்று
நினைத்துக்கொண்டு காங்கேயத்தில்
சுதந்திரம் பெற்றதற்க்கான அறிகுறியாய்
வான வேடிக்கை சத்த்ம்
லேசாய் கேட்க்க , தனது
கைகளில் சங்கை எடுத்து
மூச்சை உள்ளிழுத்து முழக்க
மிட ஆரம்பித்தார் . முதலில்
மெல்ல எழுந்த சங்கின்
ஒலி அந்த இரவின் அமைதியை
கிழித்துக்கொண்டு வேகமாக
முழங்க , சங்கின் சத்ததை
கேட்ட குப்பன் கையிலிருந்த
ஜெர்மன் தயாரிப்பு பட்டிக்ஸன்
பேட்டியில் இருந்த சாவியை
திருக முதலில் கிழக்கே
முகமாக வைத்த வெடி வெடிக்க
அடுத்து பூகம்பம் வந்தது
போல் பூமி அதிர்ந்தது.
ஒட்டு மொத்த வெடியும்
ஒரே நேரத்தில் வெடிக்க
, ஊரில் உள்ள வீடுகளின்
ஓடுகளின் மீது கற்கள்
பறந்து வந்து தாக்க , அன்சாரியின்
மனைவி பயந்து போய் என்னங்க
என்ன ஆச்சுன்னு போய்
பாருங்க என சொல்ல அதற்க்கு
அன்சாரி பாயோ ஆலங்கட்டி
மழை பெய்கிறது , அதான்
இப்படி சத்தம் சத்தம்
கெட்டாமல் படுடி என தூக்கத்தில்
சொல்லிவிட்டு தூங்க ,
கிட்டத்தட்ட அறைமணிநேரம்
கழிந்த உடன் குழந்தைவேலு
கீழே வந்து கதவை திறந்து
பார்க்கிறார் , ஒரே புகை
மண்டலம் அந்த புகையிலும்
அனைத்து வீட்டு கதவையும்
மீண்டு சென்று தாழை விலக்கி
விட்டு குப்பா என குரல்
கொடுக்க கல் குகைக்குள்
இருந்து வெளிவந்த குப்பன்
ஐயா சுதந்திரம் வந்துவிட்டதாய்யா
என கேட்க்க ஆமாம் குப்பா
இப்பதான் உன்மையான சுதந்திரம்
வந்தது சொல்லி விட்டு
சரி வா வீட்டிற்க்கு
மற்றதை காலையில் பார்க்கலாம்
என சொல்லிவிட்டு , பாதையில்
கிடந்த கற்கள் இடர மனதில்
இருந்த ஒரு இடரல் விலகியதால்
இந்த இடரலை பொருட்படுத்தாமல்
வீட்டிற்க்கு வந்தவர்.
நிம்மதியாக தூங்க ஆரம்பித்தார்.
1947 ஆகஸ்ட் 15 காலை பொழுது
சேவல் கூவியது. வாசல்
தெளிக்க வெளியே வந்த
தனம் அம்மாள் ஒரே ஆச்சர்யத்தில்
மூழ்கினார் கிழக்கே தெருவெல்லாம்
ஒரே கல்லும் மண்ணும்
புரியாமல் விழித்தவர்,
மெல்ல பொழுது புலர்வதை
கண்டு வடக்கே பார்வையை
செலுத்தியவர் அரண்டு
போனார், திருமணமாகி வந்த
40 வருடங்களுக்கு மேல்
ஆகிவிட்டது. வடக்கே அந்த
மலையைதான் முதலில் பார்ப்பவர்,
இன்று அந்த மலை இருந்த
இடம் தெரியாமல் போனது.
என்னங்க என்ன ஆச்சு ராவிலே
மலையை காணோம் என சொல்ல
, அவரும் பதட்டமின்றி
மாடியேறி வடக்கே பார்வையை
செலுத்தியவர். அவரின்
எண்ணப்படி நடந்திருந்தது.
வடக்கையும் தெற்க்கையும்
இனைக்கும் ஒரே பாதை அடைபட்டு
கிடந்தது. அந்த குன்று
சுத்தமாக இருந்த இடமின்றி
போயிருந்தது. ஆனால் அந்த
கல் கிடங்கும் நேற்று
வந்தவர்கள் படுத்திருந்த
இடமும் பல நூறு அடி மணல்
குன்றின் கற்ப்பத்தில்
சென்று விட்டது. அன்று
ஊரில் எல்லோருக்கும்
ஒரே குழப்பம் என்ன நடந்தது
என்று யாருக்குமே தெரியவில்லை
, குப்பனையும் அவனது குடும்பத்தினருக்கும் நிறைய
சன்மானம் கொடுத்து காலையிலேயே
அவர்களது ஊருக்கு அனுப்பிவிட்டார்
வேலு . ஜோசப்பிடம் வந்தவர்கள்
பாதிராத்திரியில் எழுந்து
போட்டாங்க காவாலிபயலுக
சொல்லிட்டாவது போகலாமில்லை
என்று சொல்லிக்கொண்டிருந்தார்
அன்சாரி எந்த ஒரு சலமின்றி
தனது ஆட்டு மந்தைகளை
புதிய இடம் தேடி மேய்க்க
அழைத்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தார். இங்கே
அனைவரும் ஒன்றுதான் நமது
தாய் தமிழ் மண்ணுதான்
ஸ்வேதா மேகம் சிந்தும்
ஒவ்வொரு துளியிலும் உன்
முகம் தேடுகிறேன்
|
|
|
 |