Sangee Muzangu

Anmeegm
Home
Tibet dalai lama
ONRUPATTAAL UNTU VAAZU
Speak With Love
TuuRamagum UravukaL
For International Friends
KALAM
MUMBAI LOCAL
Unity or Disarray
Marutuva parvai
vanakkam nanparkalee
Teacher's Day
Ennaipatrri
tamil inaiya ezuththukal
Aanmeegapaarvai
ungal pathiugal
thamizukum oru vaazththu
India 60 years

Thervaram paatalingku

murugan4.jpg

ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம்
ஸ்ரீ விநாயகர் துதி
வேழ முகத்து விநாயகனைத் தொழ
வாழ்வு மிகுந்து வரும்
வெள்ளைக் கொம்பன் விநாயகனை
தொழத் துள்ளியோடும்
தொடர்ந்த வினைகள்
அப்பம் முப்பழம் அமுதுசெய் தருளிய
தொப்பை யப்பனைத் தொழ
வினையறுமே,
 ஸ்ரீ கற்பக விநாயகர் துதி,
அற்புத கீர்த்தின் வேண்டின்
ஆனந்த வாழ்க்கை வேண்டின்
நற்பொருள் குவிதன் வேண்டின்
நலமெலாம் பெருகவேண்டின்
கற்பக மூர்த்தி தெய்வக்
களஞ்சியத் திருக்கை சென்று
பொற்பதம் பணிந்து பாரீர்!
பொய்யில்லை கண்ட உண்மை.
முருகன் துனை
தேவராய சுவாமிகள் பாடிய
ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம்.
காப்பு
நேரிசை வெண்பா,
துதிப்போர்க்கு வல்வினைபோம்;
துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போ¡ர்க்கு செல்வம் பலித்துக்
கதித்து ஓங்கும்;
நிஷ்டையும் கைகுடும்;
நிமலர் அருள் கந்தர்
சஷ்டி கவசந் தனை.
குறள் வெண்பா
அமரர் இடர்தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி.
நூல்
நிலைமண்டில ஆசிரியப்பா
சஷ்டியை நோக்கச்
சரவண பவனார்
சிஷ்டருக்கு உதவும்
செங்கதிர் வேலான்.
பாதம் இரண்டில்
பண்மன்ச் சதங்கை
கீதம் பாடக்
கிண்கிணி யாட
மையல் நடஞ்செய்யும்
மயில் வாகன்னார்
கையில் வேலால் எனைக்
காக்க என்று உவந்து
வரவர வேலா
யுதனார் வருக;
வருக, வருக!
மயிலோன் வருக.
இந்திரன் முதலா
எண்திசை போற்ற
மந்திர வடிவேல்
வருக, வருக!
வாசவன் மருகா
வருக, வருக!
நேசகுறமகள்
நினைவோன் வருக!
ஆறுமுகம் படைத்த
ஐயா, வருக!
நீறிடும் வேலவன்
நித்தம் வருக!
சிரகிரி வேலவன்
சீக்கிரம் வருக!
சரவண பவணார்
சடுதியில் வருக
ரஹண பவச
ரரரர ரரர
ரிஹண பவச
ரிரிரிரி ரிரிரி
விணபவ சரஹண
வீரா நாமோ நம
நிபவ சரஹண
நிறநிற நிறனெ
வசர ஹணப
வருக வருக
அசுரர் குடிகெடுத்த
ஐயா வருக;
என்னை ஆளும்
இளையோன் கையில்
பன்னிரண்டு ஆயுதம்
பாசங் குசமும்
பரந்த விழிகள்
பன்னிரண்டு இலங்க
விரைந்து எனைகாக்க
வேலோன் வருக;
ஐயும் கிலியும்
அடவுடன் செளவும்
உய்யொளி செளவும்
உயிரையும் கிலியும்
கிலியும் சேளவும்,
கிளரொளி யையும்
நிலைபெற்று என்முன்
நித்தமும் ஒளிரும்
சன்முகன் தீயும்
தனிஒளி யொவ்வும்
குண்டலி யாம்சிவ
குகன் தினம் வருக!
ஆறுமுகமும்
அணிமுடி ஆறும்
நீறிடும் நெற்றியும்
நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும்
பவளச்செவ் வாயும்,
நன்னெறி நெற்றியில்
நவமணீச் சுட்டியும்,
ஈராறு செவியில்
இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத்து
அழகிய மார்பில்
பல்பூ ஷணமும்
பதக்கமும் தரித்து,
நன்மணி பூண்ட
நவரத்ன மாலையும்,
முப்புரி நூலும்
முத்தணி மார்பும்,
செப்பழ குடைய
திருவயிறு உந்தியும்,
துவண்ட மருங்கில்
சுடரோளி பட்டும்,
நவரத்னம் பதித்த
நல்சீராவும்,
இருதொடை அழகும்,
இணை முழந்தாளும்,
திருவடி யதனில்
சிலம்போலி முழங்க
செககண செககண
செககண செகண
மொகமொக மொகமொக
மொகமொக மொகென
நகநக நகநக
நகநக நகென
டிகுகுண டிகுடிகு,
டிகுகுண டிகுண
ரரரர ரரரர
ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி
ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு
டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு,
டங்கு டிங்குகு
விந்து விந்து,
மயிலோன் விந்து
முந்து முந்து,
முருகவேல் முந்து
எந்தனை யாளும்
ஏகரச் செல்வ!
மைந்தன் வேண்டும்
வர மகிழ்ந்து உதவும்
லாலா லாலா
லாலா வேசமும்
லீலா லீலா
லீலா விநோதன் என்று
உன் திருவடியை
உறுதியென்று எண்ணும்
என்தலை வைத்துன்
இனையடி காக்க;
பன்னிரு விழியால்
பாலனை காக்க;
அடியே வதனம்
அழகுவேல் காக்க;
பொடிபுனை நெற்றியைப்
புனிதவேல் காக்க;
கதிர்வேல் இரண்டு
கண்ணினை காக்க;
விதிசெவி இரண்டும்
வேலவர் காக்க;
நாசிகள் இரண்டும்
நல்வேல் காக்க;
பேசிய வாய்தனைப்
பெருவேல் காக்க;
முப்பத் திருப்பல்
முனைவேல் காக்க;
செப்பிய நாவை
செவ்வேல் காக்க;
கன்னம் இரண்டும்
கதிர்வேல் காக்க;
என்இளங் கழுத்தை
இனியவேல் காக்க;
மார்பை ரத்ன
வடிவேல் காக்க;
சேர்இள முலைமார்
திருவேல் காக்க;
வடிவேல் இருதோள்
வளம்பெற காக்க;
பிடரிகள் இரண்டும்
பெருவேல் காக்க;
அழகுடன் முதுகை
அருள்வேல் காக்க;
பழுபதி னாறும்
பருவேல் காக்க;
வெற்றிவேல் வயிற்றை
விளங்கவே காக்க;
சிற்றிடை அழகுறச்
செவ்வேல் காக்க;
நாண்ஆம் கயிற்றை
நல்வேல் காக்க;
ஆண்குறி இரண்டும்
அயில்வேல் காக்க
பிட்டம் இரண்டும்
பேருவேல் காக்க;
வட்டக் குதத்தை
வடிவேல் காக்க;
பணைத்தொடை இரண்டும்
பருவேல் காக்க;
கணைக்கால் முழந்தாள்
கதிர்வேல் காக்க;
ஐவிரல் அடியிணை
அருள்வேல் காக்க;
கைகள் இரண்டும்
கருனைவேல் காக்க;
பின்கைஇரண்டும்
பின்னவள் இருக்க;
நாவில் சரஸ்வதி
நல்துனை யாக
நாபிக் கமலம்
நல்வேல் காக்க;
முப்பால் நாடியை
முனைவேல் காக்க;
எப்பொழுதும் எனை
எதிர்வேல் காக்க;
அடியேன் வசனம்
அசைவுள நேரம்
கடுகவே வந்து
கனகவேல் காக்க;
வரும்பகல் தன்னில்
வச்சிரவேல் காக்க;
அரைஇருள் தன்னில்
அனையவேல் காக்க,
ஏமத்தில்,சாமத்தில்
எதிர்வேல் காக்க;
தாமதம் நீக்கிச்
சதுர்வேல் காக்க;
காக்க, காக்க,
கனகவேல் காக்க;
நோக்க நோக்க
நொடியினில் நோக்க
தாக்க தாக்க
தடையறத் தாக்க;
பார்க்க பார்க்க
பாவம் பொடிபட
பில்லி சூனியம்
பெரும்பகை அகல
வல்லபூதம்,
வலாக்ஷ்டிகப் பேய்கள்,
அல்லல் படுத்தும்
அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும்
புழக்கடை முனியும்
கோள்ளிவாய்ப் பேய்களும்
குறளைப் பேய்களும்
பெண்களை தொடரும்
ப்ரம்மராட் சதரும்
அடியேனை கண்டால்
அலறிக் கலங்கிட
இரிசி காட்டேரி
இத்துன்ப சேனையும்
எல்லிலும், இருட்டிலும்,
எதிர்படும் அண்ணரும்,
கனபூசை கோள்ளும்
காளியோடு அனைவரும்
விட்டாங் காரரும்
மிகுபல பேய்களும்,
தண்டிய காரரும்,
சண்டாளர்களும்
என்பேயர் சொல்லவும்
இடிவிழுந்து ஓடிட,
ஆனை அடியினில்
அரும்பாவைகளும்,
பூனை மயிறும்
நீள்முடி மண்டையிம்,
பாவைகளுடனே
பலகல சத்துடன்
மனையில் புதைத்த
வஞ்சனை தனையும்
ஓட்டிய செருக்கும்
ஓட்டிய பாவையும்
காசும் பணமும்,
காவுடன் சோறும்,
ஓதும் அஞ்சனமும்,
ஒருவழிபோக்கும்
அடியேனை கண்டால்
அலந்து குலைந்திட
மாற்றான் வஞ்சகர்
வந்து வணங்கிட
கால தூதாள் எனைக்
கண்டால் கலங்கிட,
அஞ்சி நடுங்கிட,
அரண்டு புரண்டிட
வாய்விட்டலறி,
மதிகெட்டோட
படியினில் முட்டப்
பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம்
கதறிட கட்டு;
கட்டி உருட்டு
கைகால் முறிய
கட்டு கட்டு
கதறிட கட்டு,
முட்டு முட்டு
முழிகள் பிதுங்கிட
செக்கு செக்குச்
செதில் செதிலாக,
சொக்கு சொக்குச்
சூர்ப்பகை சொக்கு;
குத்து குத்து
கூர்வடிவேலால்;
பற்று பற்று
பகலவன் தணல்எரி;                             
தணல்எரி தணல்எரி,
தணல்அது ஆக;
விடுவிடு வேலை
வெருண்டது ஓட;
புலியும் நரியும்
புன்நரி நாயும்,
எலியும் கரடியும்
இனித்தொடர்ந்து ஓட;
தேளும் பாம்பும்
செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள்
கடித்து உயர் அங்கம்
எறிய விஷங்கள்
எளிதுடன் இறங்க;
ஒளிப்பும் சுளுக்கும்
ஒருதலை நோயும்
வாதம் சயித்தியம்
வலிப்பு பித்தம்
சூலைசயம் குன்மம்
சொக்கு சிரங்கு
குடைச்சல் சிலந்தி
குடல்விப் புரிதி
பக்கப் பிளவை
படர்தொடர் வாழை,
கடுவன்,படுவன்
கைத்தாள் சிலந்தி,
பற்குத்து, அரணை,
பருவரை யாப்பும்
எல்லாப் பிணியும்
எத்தனை கண்டால்
நில்லாது ஓட
நீ எனக்கு அருள்வாய்!
ஈரேழ் உலகமும்
என்க்கு உறவாக,
ஆணும் பெண்ணும்
அனைவரும் எனக்கா(க)
மண்ணாள் அரசரும்
மகிழ்ந்து உறவாகவும்,
உன்னை துதிக்க,
உன் திருநாமம்
சரவண பவனே!
சைலொளி பவனே!
திரிபுர பவனே!
பரிபுர பவனே!
பவம் ஒழிபவனே!
அரிதிரு மருகா!
அமரா பதியைக்
காத்துத் தேவர்கள்
கடுங்சிறை விடுத்தாய்!
கந்தா! குகனே!
கதிர் வேலவனே!
கார்த்திகை மைந்தா!
கடம்பா! கடம்பனை,
இடும்பனை அழித்த
இனியவேல் முருகா!
தணிகா சலனே!
சங்கரன் புதல்வா!
கதிர்காமத்துறை
கதிர்வேல் முருகா!
பழநிப் பதிவாழ்
பால குமரா!
ஆவினன் குடிவாழ்
அழகிய வேலா!
சென்னிமா மலையுறும்
செங்கல்வ ராயா!
சமரா புரிவாழ்
சன்முகத் அரசே!
காரார் குழலாள்,
கலைமகள் நன்றாய்
என்நா இருக்க,
யான் உனைபாட,
எனைத் தொடர்ந்திருக்கும்,
எந்தை முருகனை
பாடினேன் ஆடினேன்,
பரவசமாக!
ஆடினேன் நாடினேன்
ஆவினன் பூதியை
நேச முடன் யான்
நெற்றியில் அணியப்
பசவினைகள்
பற்றது நீங்கி,
உன்பதம் பேறவே,
உன் அருள் ஆக
அன்புடன் ரட்சி!
அன்னமும் சொன்னமும்
மெத்த மெத்தாக,
வேலா யுதனார்
சித்திபெற்று, அடியேன்
சிறப்புடன் வாழ்க!
வாழ்க! வாழ்க!
மயிலோன் வாழ்க!
வாழ்க! வாழ்க
வடிவேல் வாழ்க!
வாழ்க வாழ்க
மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க
மலைக் குறமகளுடன்!
வாழ்க வாழ்க
வாணர துவசம்!
வாழ்க வாழ்க
என் வறுமைகள்
நீங்க!
எத்தனை குறைகள்,
எத்தனை பிழைகள்,
எத்தனை அடியேன்
செய்தே யிருப்பினும்
பெற்றவை நீகுரு
பொறுப்பது உன்கடன்;
பெற்றவள் குறமகள்
பெற்றவளாமே,
பிள்ளை என்று, அன்பாய்ப்
பிரியம் அளித்து,
மைந்தன் என்மீது, உன்
மனம் மகிழ்ந்து அருளித்
தஞ்சம் என்ற அடியார்
தழைத்திட அருள்செய்;
கந்தர் சஷ்டி
கவசம் விரும்பிய
பாலன் தேவ
ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில்,
கருத்துடன் நாளும்,
ஆசாரத்துடன்
அங்கம் துலக்கி,
நேசமுடன் ஒரு
ஒரு நினைவது ஆகிக்,
கந்தர் சஷ்டி
கவசம் இதனைச்
சிந்தை கலங்காது
தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத்
தாறு உருக்கோண்டு
ஓதியே செபித்து
உகத்து நீறு அணிய
அஷ்ட திக்கு உள்ளோர்
அடங்கலும் வசமாய்,
திசைமன்னர் எண்மர்,
செயலது அருளுவர்;
மாற்றலர் எல்லாம்
வந்து வணங்குவர்;
நவகோள் மகிழ்ந்து
நன்மை அளித்திடும்;
நவமதன் எனவும்
நல்எழில் பெறுவர்;
எந்த நாளும்
ஈரெட்டாய் வாழ்வர்
கந்தர்கை வேலாம்
கவசத்து அடியை
வழியாய் காண
மெய்யாய் விளங்கும்!
விழியால் காண
வெருண்டிடும் பேய்கள்;
போல்லாதவரைப்
பொடிப்பொடி யாக்கும்;
நல்லொர் நினைவிக்
நடனம் புரியும்;
சர்வ சத்துரு
சங்கா ரத்தடி
அறிந்து எனது உள்ளம்,
அஷ்டலட்சுமிக்கு
விருந்துணவு ஆக
சூரபத் மாவை
துணித்த கையதனால்,
இருபத் தொழுவர்க்கு
உவந்து அமுது அளித்த
குருபரன் ப்ழநிக்
குன்றினில் இருக்கும்
சின்ன குழந்தை
சேவடி போற்றி;
எனைத் தடுத்து ஆட்கொள
எந்தனது உள்ளம்
மேவிய வடிவுறும்
வேலவா போற்றி!
தேவர்கள் சேனா
பதியே போற்றி!
குறமகள் மனமகிழ்
கோவே போற்றி!
திறமிகு திவ்ய
தேகா போற்றி!
இடும்பா யுதனே
இடும்பா போற்றி!
கடம்பா போற்றி!
கந்தா போற்றி!
வெட்சி புனையும்
வேளே போற்றி!
உயர்கிரி கனக
சபைக்கு ஓர் அரசே!
மயில்நடம் இடுவோய்
மலரடி சரணம்!
சரணம் சரணம்
சரவண பவஓம்,
சரணம் சரணம்
சண்முகா சரணம்!
கந்தர் சஷ்டி கவசம் முற்றியது.
வள்ளலார் அருளிய
கந்தர் சரணப்பத்து
முடியா முதலே சரணம் சரணம்
முருகா குமரா சரணம் சரணம்
வடிவேலரசே சரணம் சரணம்
மயிலூர் மணியே சரணம் சரணம்
அடியார்க்கு எளியாய் சரணம் சரணம்
அரியாய் பெரியாய் சரணம் சரணம்
கடியாக் கதியாய் சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்!
கந்தர் அநுபூதி
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
வாழ்த்து
ஆறிரு தடங்தோள் வாழ்க;
அறு முகம் வாழ்க! வெற்பைக்
கூறு செய் தனிவேல் வாழ்க;
குக்குடம் வாழ்க! சேவ்வேள்
ஏறிய மஞ்சை வாழ்க;
ஆனைதன் அணங்கு வாழ்க!
மாறிலா வள்ளி வாழ்க;
வாழ்க சீர் அடியாரெல்லாம்!
நவ கிரக தோஷங்கள் நீங்கிட
திருஞான சம்பந்தர் அருளிய
கோளறு பதிகம்
வேயுறு தோளி பங்கன்
விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை
முடி மேலணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய்
புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பு இரண்டுமுடனே
ஆசறு நல்ல நல்ல
அடியவர்க்கு மிகவே! 

 

ஸ்ரீ மன்மத காரூணீஸ்வரர் சிவன் ஆலயம். 1
........................................................................
காசிபமுனிவருக்கு மயை மூலமாக சூரபத்மன் என்ற அசுரன் பிறந்தான்.கடுந்தவம் புரிந்து பரமேசுவனிடம்
அளப்பரிய வரங்களை பெற்ற சூரன், முன்று லோங்களும் அவன் ஆளுகைள் வந்தன.வானவர்களை அடக்கி
கடுமையாகக் கொடுமைப்படுத்தி வந்தான். தேவேந்திரன் மைந்தனாகிய ஜயந்தனும், தேவர்களும்,
தேவமாதர்களும் சிறையில் அடைபபட்டு வேதனைப்பட்டார்கள்.
சூரபத்மனின் கொடுமை தாங்காமல், இந்திரன் மேருமலையில் பெருந்தவம் செய்தான்.ஈசன் தரிசனம் தந்து
''தவத்தின் நோக்கமென்ன? என்று வினவினார். ''அசுரன் சூரபத்மனின் தொல்லைகள் எல்லை மீறிவிட்டன.
எதிர்த்துப் போரிட களுக்குப் போ எங்திய வலுவில்லை. ஐயனே! இதற்கொரு முடிவைக் காணவேண்டும்''
என வேண்டி நின்றான்.
'இந்திரா! கவலையை விடு. நம்மால் தோற்றுவிக்கப்படும் குமாரனால் சூராதி அவுணர்கள் வேரோடு சாய்வர்'
'எனப் பெருமான் அருள்பாலித்தார். இந்திரன் ஆறுதல் கொண்டாலும் பரமன் இந்த அற்புதத்தை எப்போது
நிகழ்த்துவார்?எப்போது நம்துயர் விலகும் என்ற நெருடலோடு, பிரமதேவரை அணுகினான். பிரமதேவர்
திருமாலை நாடினார். 'சிவமூர்த்தியின் யோகநிலை கலைந்தால்தான் பார்வதி திருமணம் நடந்தேறும்;
பின்னர் குமாரர் தோன்றுவர்; சூரசம்ஹாரம் நிகழும்' என்றார்

'' பிரபோ! ஈசனை நெருங்கி அவருடைய யோகநிலையைக் கலைப்பதென்பது நிகழக்கூடிய காரியமா?
அது சாத்தியமாகுமா? எனக் கேட்டார். ''மன்மதன் ஒருவரால் மட்டுமே முடியும். எல்லா வில்லாளிகளும்
அம்பு தொடுத்து ஒன்றை இரண்டாகுவார்கள். மன்மதன் மட்டுமே இரண்டை ஒன்றாக்கும் ஆற்றல் பெற்றவன்.
எனவே அவனை ஐயனிடம் அனுப்பி வையுங்கள்'' என்றார்.
பிரமதேவரும் மன்மதனை அழைத்து, ''சூரனின் கொடுமைகள் பற்றியும், தேவலோகம் படும் அவதி பற்றி
எடுத்துரைத்து, இறைவன் அருள்பாலித்தபடி குமாரக் கடவுள் தோன்ற வேண்டுமாகின் சிவத்தின் தவத்தைக்
கலைப்பதைத் தவிர வேறு மார்க்கமில்லை.'' என அவனிடம் வேண்டினார். இதைக் கேள்விப்பட்ட மறுகணமே,
மன்மதன் தீயை மிதத்தவன் போலாகி, 'ஈசனுடைய மகிமையை நன்கு உணர்ந்த தாங்களா இந்த விபரீத
விளையாட்டில் இறங்க என்னைத் தூண்டுகிறீர்கள்? நான் அற்புத விளையாட்டுகளைச் செய்தவன்தான்.
என்னுடைய பாணங்களுக்குக்குத் தப்பியவர் யாருமில்லைதான். ஆனால், பரமனை என்னால் இவ்விஷயத்தில்
நெருங்க முடியுமா? எனப் பலவாறு மறுத்துரைத்து மன்றாடினான். மறுப்புரை செய்த மன்மதனைக் கடைசிக்
கட்டமாக, ''மீண்டும் மறுத்தால், எனது கொடிய சாபத்திற்கு ஆளாக நேரிடும்'' எனக் கோபத்தோடு சொன்னார்
பிரமன்.எந்த வகையில் பார்த்தாலும் இருவரின் சாபங்களுக்கு ஆளாக நேரிடும் என்பதையுணர்ந்த மன்மதன்,
பரமனிடம் சாபம் பெற்று மடிவதே மேல் என்ற முடிவோடு சம்மதித்தான். இதனை மனைவி இரதிதேவியிடம்,
விவரித்தான். இரதியையும் அழைத்துக்கொண்டு கரும்பு, வில், கரும்பு நாண், அரும்பு பாணம் என
பஞ்சபாணங்களோடு, தென்றலாகிய தேரில் ஏறிக் கயிலாயம் நோக்கிப் பயணமானான்.
மன்மதன் தேரேறி மேலை வாயிலில் நுழைந்தான். கல்லால மரத்தினடியில் சனகாதியர் முன்பு எம்பெருமான்
அமர்ந்திருந்த திருக்கோலத்தைக் கண்டான். ''சகல லோகங்கலையும் இமைப்பொழுதில் சாம்பலாக்கி,
நீறு செய்யும் நிமலனைப் பூமலர்க்கணை கொண்டா போர் புரிவது'' என்று கலங்கி விதி வலியது என்ற
முடிவோடு, கரும்புவில்லை வளைத்து நாணேற்றி, தண்மலர்க்கணைகளைப் பூட்டி, மதிசடை நாயகன் முன்
சென்று தன்னை தயார்ப்படுத்திக் கொண்டு, மேனி நடுங்க பாணங்களைப் புட்டி வில்லை வைத்து இறைவன்
திருமேனி நோக்கிப் பிரயோகம் செய்தான்.
விரைந்து சென்ற பாணங்கள் ஈசனின் மேனியைத் தாங்கிய மறுகணமே அவரது நிஷ்டை கலைந்தது.
கோபத்தில் கண்கள் சிவக்க, எய்தவனை நோக்கினார். நெற்றிக்கண் திறந்ததும் அதிலிருந்து பாய்ந்த
தீப்பொறிகள் இமைப்பொழுதில் மன்மதனைச் சாம்பலாக்கிவிட்டது. இதனைக் கண்ணுற்ற இரதிதேவி
தலைவிரி கோலமாக இறைவனிடம் ஓடி வந்து புலம்பினாள்.
நன்றி, வணக்கம்.
அன்புடன்,
கிருஷ்ணன்,
சிங்கை
இன்பத் தமிழ் எங்கள் மொழி.
தமிழ் எமது மொழி.
என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம்
Krishnan,Singapore
For your Book Mark
http://ezilnila.com/saivam
http://www.singai-krishnan.blogspot.com/

ஸ்ரீ மன்மத காரூணீஸ்வரர் சிவன் ஆலயம். 2
''தேவர்களின் துயரத்தைப் போக்கத்தான் என் மணாளன் இந்தப் பாதகச் செயலில் இறங்கினார்.
காரணகர்த்தாவாகிய அவர்களை மன்னித்த பிரபு, என்னவருக்கு உயிர்ப்பிச்சை அளித்து எனக்கு
மீண்டும் வாழ்வளிக்க வேண்டும்'' என முறையிட்டாள். ஈசனும் ''பெண்ணே! கவலைப்படாதே!
உன் கணவரை உயிர்ப்பித்துத் தருவேன். ஆனால், உன் கணவன் உன் கண்ணுக்கு மட்டுமே தெரிவான்''
என உரைத்தார்.
மிகுந்த கருணைக் கொண்டு மன்மதனின் உயிரை உயிர்பித்து தந்தததால் ஈசனுக்கு காரூணீஸ்வரர்
என்று பெயர் வந்தது. மன்மதனுக்கு கருணை புரிந்ததால் ''மன்மத காரூணீஸ்வரர்'' ஆனார்.
................................................................................\
.............................................................
சிங்கப்பூரில் அமைந்திருக்கும் ஒரே ஒரு ஆலயம் '' ஸ்ரீ மன்மத காரூணீஸ்வரர் சிவன் ஆலயம் ''
சுமார் 120 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ மன்மத காரூணீஸ்வரர் சிவன் ஆலயம் தோற்றம் கண்டது.
காலாங் காஸ்வேர்க்ஸ் (Kallang Gas Works) சிவன் கோயில் என பெரும்பாலான பக்தர்களால்
அழைக்கப்பட்ட இவ்வாலயத்திற்கு ஒரு வளமான பாரம்பரியம் உண்டு.
போக்குவரத்து அதிகம் உள்ள காலாங் சாலையிலும்,சிங்கப்பூர் குடியேற்ற (இமிகிரேஷன்) கட்டடத்திலிருந்து
சுமார் 300 மீட்டர் தொலைவிலும், அமைதியான, பசுமையான சுற்றுபுறம், ஆலயத்தின் பின்புறத்தில்
நெளிந்தோடும் அழகான காலாங் நதி..., இந்த சுழ்நிலையில் அமைந்துள்ளது ஆலயம்.
தமிழ் மக்கள் வழிபாட்டுக்கு ஒரு தலம் அமைத்துக்கொள்ள ஸ்ட்ரேஸ் செட்டல்மெண்டு
(Governor of Straits Settlement) கவர்னரால் வழங்கப்பட்ட பட்டா நிலத்தில் 1888 - ஆம் ஆண்டு
சனவரி 1-ம் தேதி கோயில் ஸ்தாபிக்கப்பட்டது. இருபத்தொரு ஆண்டுகளுக்குப் பின் 1909 –
ஆம் ஆண்டு மார்ச் மாதம் பழைய பட்டாவுக்கு பதில் புதிய பட்டா 99 ஆண்டு குத்தகைக்கு
கொடுக்கப்பட்டது.
இடைப்பட்ட இருபத்திரண்டு ஆண்டு காலத்தில், 1909 –ல் பட்டாவில் கையெழுதிட்ட அனைவரும்
இயற்கை எய்தி விட்டதால், 1931–ல் காஸ்வேர்க்கில் தலைமை போர்மேனாகப் பணியாற்றிய
திரு.ஏ.வி.இருளப்ப பிள்ளை கோயிலின் விவகாரங்களை எடுத்து நடத்தினார். அவரும் அவர்களது
நண்பர்களும், சகாக்களும் ஆலயத்தை காரை, காங்கிரீட் கட்டிடமாக மாற்றினார்கள். ஆனாலும் அவர்கள்
அவர்கள் நிதிப் பற்றாக்குறையை எதிர்நோக்கினார்கள்.
1934-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி திரு.ஏ.வி. இருளப்ப பிள்ளை கேட்டுக் கொண்டதற்கு இணங்க
மறைந்த தங்களின் தந்தை கு.வேலுப்பிள்ளை நினைவாக கோயிலைக் கட்ட திரு.பக்கிரிசாமி பிள்ளையும்
அவரின் சகோதரர் திரு.வி.நாராயணசாமி பிள்ளையும் ஒப்புக்கொண்டனர்.
சுவான் அண்ட் மெக்லரண்ட்(Swan & Mclaren) எனும் கட்டடக் கலை நிறுவனம் கோயில் வரைபடங்களை
தயாரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. 1934–ம் ஆண்டு டிசம்பர் 27–ம் தேதி புதிய வரைப்டம் தயாரானது.
விமானம் மற்றும் அலங்கார வேலைகளை மேற்கொள்ள திரு.கந்தசாமி, திரு.எஸ்.ராஜாமணி ஆகிய ஸ்தபிதகள்
1935-ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி தமிழ்நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டனர். 1937 ம் ஆண்டு
கும்பாபிஷேகம் கண்டது.
இருளப்ப பிள்ளையும் அவரது குழுவினரும் தொடர்ந்து நிதிப்பற்றாக்குறை பிரச்சனையை எதிர்நோக்கியதால்
1939–ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி திரு.வி.பக்கிரிசாமி பிள்ளை கோயில் தலைவராக நியமிக்கப்பட்டதுடன்
ஆலய விவகாரங்களை கவனித்துக் கொள்ளவும், மிகுதியாக ஏற்படும் செலவுகளை ஏற்றுக்கொள்ளவும் கேட்டுக்
கொள்ளப்பட்டார். அவரின் தலைமைத்துவத்தின் கீழ் 1951-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதியும்,
1974 நவம்பர் 29-ம் தேதியும் ஆலயத் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
நன்றி, வணக்கம்.
அன்புடன்,
கிருஷ்ணன்,
சிங்கை
இன்பத் தமிழ் எங்கள் மொழி.
தமிழ் எமது மொழி.
என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம்
Krishnan,Singapore
For your Book Mark
http://ezilnila.com/saivam
http://www.singai-krishnan.blogspot.com


ஸ்ரீ மன்மத காரூணீஸ்வரர் சிவன் ஆலயம்.3

1993-ம் ஆண்டிலிருந்து நிர்வாக அறங்காவலரான திரு.பி சிவராமனும்
நிர்வாகக் குழுவினரும் சிறுசிறு புதுப்பிப்பு
பணிகளை மேற்கொண்டனர். கடைசி புதுப்பிப்பு பணி 1997-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி அதாவது, 1937 –ம்
ஆண்டில் வந்த ஈஸ்வர தமிழ் ஆண்டின் 60 கால சுழற்சிக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம்
நடத்தப்பட்டது.
ஆலய வலம்
மூலவர் மூர்த்திகள்
நந்திகேஸ்வரர்.
முதலில் நம்மை வரவேற்பவர் நந்திகேஸ்வரர். சிவபெருமானின் ரிஷப வாகனமாகும். ஈஸ்வரருக்கு மிகவும்
அருகில் இருப்பவர். நந்தி பெருமான் எப்போதுமே சிவனை நோக்கி அமர்ந்திருப்பார்.பரமாத்மவுடன் ஆத்மா
இணைய வேண்டும் என்பதை பிரதிபலிக்கும் வகையில் நந்திகேஸ்வரர் சிவபெருமானை வணங்கும் நிலையில்
இருக்கிறார்.
மன்மத காரூணீஸ்வரர்.
ஆலயத்தில் நுழைந்தவுடன் நமக்கு முதலில் காட்சியளிப்பர் ஸ்ரீ மன்மத காரூணீஸ்வரர். மூல மூர்த்தியாக
இவ்வாலயத்தில் அமைப்பட்டு அருவுரு சிவலிங்கம் ஸ்ரீ மன்மத காரூணீஸ்வர சிவன் என்று அழைப்படுகிறது.
சிவலிங்கம் சிவரூபமாக அமைந்துள்ளது. நம் கண்ணுக்கு புலப்படும் சிவலிங்கத்தின் மூன்று பிரிவுகள்
முத்தேவர்களையும் பிரதிபலிக்கின்றன்.
சதுர அடிப்பாகம் பிரம்மா, எண் கோண தூண்வடிவம் விஷ்ணு, வட்டமான மேற்பகுதி ருத்ரர்.
சுத்த வித்யா தத்துவம் எனும் பிரிவில் ஒரு பெரும் பகுதியாக இந்த முத்தேவர்கள் அமைந்துள்ளனர்.
வட்டமான மேற்பகுதியில் சிவதத்துவத்தின் ஐந்து கூறுகள் அமைந்துள்ளன. அதைப் போலவே
விஷ்ணுவிற்கு ஏழு வித தத்துவமும் பிரம்மாவிற்கு 24 ஆத்ம தத்துவமும் உள்ளன.
சிவலிங்க ரூபங்களை அதாவது உச்சிமுகம் ஈசானம், கிழக்கு முகம் தற்புருடம், தெற்கு முகம் அகோரம்,
வடக்கு முகம் வாமதேவம், மேற்கு முகம் சத்தியோசாதம் ரூபங்களை சிருஷ்டித்தல், காத்தல், அழித்தல்,
மறைத்தல், அருளிச்செய்தல் ஆகிய ஐந்து செயல்களை சிவலிங்கம் பிரதிபலிப்பதாகக் கூறுவதுண்டு.
இதனை திருமூலர் திருமந்திரத்தில் இப்படி கூறுகிறார்.
ஐந்து முகம்உள ஐம்மூன்று
ஐந்தினோடைந்து கரதலம் தானுள
ஐந்துடன் ஐந்தாயுதமுள நம்பி என்
நெஞ்சு புகுந்து நிறைந்தது நின்றானே.
விநாயகர்
அருவுரு சிவலிங்கத்தின் இடது புறம் வெற்றிகரமாக எல்லா காரியங்களும் நிறைவேறவும்,
விக்கினங்கள் நீங்கவும் அருள்புரியும் விக்னேஷ்வரர் விநாயகர்.
தண்டாயுதபாணி
வலது புறம் எளிமையான வாழ்வு வாழவேண்டும் என்ற நோக்கில் முருகன் தண்டாயுதபாணி
உருவத்தில் உள்ளார்.
பர்வதவர்த்தினியம்பாள்(பார்வதி)
எல்லா உயிரினங்களுக்கும் கருணை கொண்டு காக்கும் அன்னையாக பர்வதவர்த்தினியம்பாள்
(பார்வதி) அருள்பாலிக்கிறாள்.
தட்சிணாமூர்த்தி.
சிவனின் மறு உருவமே தட்சிணாமூர்த்தி. பேருண்மையை போதிக்கும் குருவாக இங்கும் அருள்புரிகிறார்.
சண்டீஸ்கேஸ்வர்.
சிவபெருமானையே சதாகாலமும் தியானித்துக்கொண்டு இருக்கும் சண்டீஸ்கேஸ்வர்.
நவகிரங்கள்
சிவ தரிசனத்தின் முழுப்பயனை இவரின் அருளாலேயே கிடைக்கப்படுகிறது.கோளங்களின் தாக்கத்தால்
ஏற்படும் தீங்குகள் குறைய நவகிரங்கள் தனி மண்டபத்தில் ஒரு பீடத்தின் மீது வைக்கப்பட்டுள்ளது.
பைரவர்.
ஆலயத்தின் காவல் தெய்வாமாக இருப்பவர் பைரவர்.ஆலய நிறைவு பூஜையான அர்த்தஜாம புஜையை
இவர் சன்னதியில் பூர்த்தி செய்து விடைபெறுவது சிவாகம மரபில் இருந்து வருகிறது.இங்கும்
ஆலயத்தையும் நகரத்தையும் காவல் தெய்வமாக இருந்து காத்து அருள் புரிகிறார்.
நன்றி, வணக்கம்.
அன்புடன்,
கிருஷ்ணன்,
சிங்கை
இன்பத் தமிழ் எங்கள் மொழி.
தமிழ் எமது மொழி.
என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம்
Krishnan,Singapore
For your Book Mark
http://ezilnila.com/saivam
http://www.singai-krishnan.blogspot.com/
 

Sri Muneeswaran Temple (Queens Town) -1
முனீஸ்வரன் ஆலயம்
வேதக்காலங்களில் மக்கள் கல்வி அறிவு இல்லாதவர்களாக இருந்தனர். கல்வியின் சிறப்பை
அவர்கள் உணராமல் வாழ்ந்தனர். ஞானிகளும் அறிவையும் ஞானத்தையும் தேடாமல் சுகபோக
வாழ்வைத் தேடிச் செல்லலாயினர். அறியாமை எங்கும் சூழ்ந்தது. சனகன், சந்தனன், சனத்னன்,
சந்தனகுமாரன் என்ற நான்கு முனிவர்கள் சிவபெருமானிடம் வேண்ட அவர் தென்திசை நோக்கிக்
குருவாக அமர்ந்து ஞானத்தைப் போதித்தார். அதன் பின்னரே வேதங்களும் இதிகாசங்களும்
தோன்றின.தட்சிணாமூர்த்தியாக சிவபெருமானாகக் காட்சி அளித்தார்.
முனிவர்களுக்கெல்லாம் ஈஸ்வரராக இருந்து ஞானத்தைத் போதித்ததால் அவர் முனீஸ்வரர் என்று
அழைக்கப்பட்டார். ஆனால் மக்கள் ஏனோ முனீஸ்வரரைக் காவல் தெய்வமாக வணங்குகிறார்கள்.
சிவபெருமானே தட்சிணாமூர்த்தியாகவும், முனீஸ்வரராகவும் இருந்து நம்முள் இருக்கும்
அறியாமையை அகற்றுகிறார்
‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’\
’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’\
’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
ஸ்ட்ரேயிட்ஸ் செட்டல்மெண்டின் (Straits Settlement)
ஒரு பகுதியான சிங்கப்பூரில் 1928 – ல்
தண்டவாளங்கள் அமைக்கும் பணி தொடங்கியது.முதல் இரயில்1932-ல் ஓடத் தொடங்கியது. தண்டவாளங்கள்,
இரயில் பெட்டிகள், இவற்றைப் பராமரிக்கும் பொறுப்பு மலேசிய இரயில்வே ஊழியருடையதாகும். இவர்களில்
பெரும்பாலோர் இந்தியர்கள். இவர்கள் யாவரும் குவீன்ஸ் டவுனில் (Queens Town) வசித்து வந்தார்கள்.
பண்டைக்காலத்தில் இருந்து தமிழர்கள் எங்கு குடியேறினாலும் ஆன்மீக தேவைகளைப் பூர்த்திசெய்ய
ஏதேனும் ஒரு வடிவத்திலோ உருவத்திலோ கோயில் ஒன்றை நிறுவி வழிபடுவது வழக்கம். அதற்கு
இங்கு வசித்த தமிழர்களும் விதிவிக்கல்ல.சூலம் ஒன்றையும், கல் ஒன்றையும் நிறுவி சிறு கூரையுடன்
கூடிய குடில் ஒன்றினை அமைப்பார்கள். இந்த கூரை குடிலையே கோயிலாக எண்ணி
வழிபடுவார்கள்.
ஆலய வரலாறு
ஆரம்ப காலங்களில் குவின்ஸ்வே(Queens Way) செல்ல ஒரு சிறிய சாலை மட்டுமே
இருந்தது. இரயில் தவிர வேறு வகையான போக்குவரவு மிகக் குறைவு. சிங்கப்பூர் அரசாங்கம்
குவின்ஸ்வே (Queens Way) பகுதியை மேம்படுத்த வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் மூலம்
தொடங்கியது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் குவீன்ஸ் கிரசண்டில் ஏழு ஓரறை வீடு கொண்ட அடுக்கு மாடிக்
கட்டடங்களைக் கட்டி வந்தது. பின்னர் கடைகளும் அங்காடி நிலையம் ஒன்றும் சேர்ந்து
அப்பகுதியை மேலும் மக்கள் நடமாட்டமும் உயிரோட்டமுள்ள இடமாக செய்தது. அங்கே
வசித்து வந்தவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள், அதுவும் இந்துக்கள் என்பதால் ஒரு
கோயிலின் அருகில் வாழ விரும்பினர். ஆகவே, அவர்கள் ஒரு சூலத்தையும், கல்லையும்
வைத்து முனீஸ்வரனாக வழிபட ஆரம்பித்தனர்.
தினமும் வேலைக்கு செல்லும் முன் அவர்கள் குடிசையான கோயிலில் பிரார்த்தனை
செய்து விட்டு புறப்பட்டனர். அவர்கள் சூலத்தையும் கல்லையும் முனியாண்டி என்று
அழைத்துடன் முனியாண்டி அல்லது முனீஸ்வரன் தேவகனம் எனும் சிவபெருமானின்
உடலில் இருந்து மாற்றப்பட்டதாக நம்பினர்.’’
1961 –ம் ஆண்டில் குவீ ன்ஸ்வே டவுனில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளின்
தொடக்கக் குடியேறிகளில் ஒருவரான திரு.எ ன்.வீ. மேனன் இந்த குடிலை
முறையான கோயிலாக எழுப்பவேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட
முனைந்தார்.
முதலில் குடிலுக்கும் குவீன்ஸ்வே சாலைக்கும் இடையே இருந்த செடி,
கொடிகளையும், ஐந்து அடி உயரம் வளர்ந்திருந்த கோரைப் புற்களை
அழித்து சுத்தம் செய்து ஒரு ஒற்றையடி பாதை அமைத்தனர்.1962-ல்
குவீன்ஸ் டவுனில் வசித்த அன்பர்கள், பக்தர்களைக் கொண்டு ஒரு
இடைக்கால நிர்வாகம் அமைத்து அரசாங்கத்தில் பதிவு செய்ய
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. முனீஸ்வரன் கோயில் அதிகாரப்பூர்வமாக
1967-ல் மார்ச் முதல் தேதி பதிவு செய்யப்பட்டது.

ஆலய கட்டுமானப் பணி.
கோவில் அமையவிருந்த நிலம் மலேயன் ரயில்வே நிறுவனத்திற்குத் சொந்தமானதாக
இருந்ததால் அவர்களின் அனுமதி கோரினர். கோயிலை எழுப்ப மலேய ன் ரயில்வே
அதிகாரிகளிடம் பிரதிநிதித்துவம்செய்யப்பட்டபின் கோயிலைக் கட்டிக்கொள்ள
தற்கால உரிமம் வழங்கப்பட்டது. விரைவாகக் கட்டுமானப்பணியும் தொடங்கியது.
டிசம்பர் 1969- க்குள் எளிய முறையில் கோயில் ஒன்று நிர்மானிக்கப்பட்டு முனீஸ்வரர்,
விநாயகர், மாரியம்மன், முருகன் ஆகிய சிலைகள் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டன.
இடைக்காலத்தில் தற்காலிய பிரச்சனைகள் தோ ன்றினாலும் நிர்வாகக் குழுவினரும்
தொண்டூழியர்களும் விரைவாக தீர்வுக் கண்டனர்.
முனீஸ்வரன் கோயில் முதல் கும்பாபிஷேகம் 18 தேதி, ஜனவரி, 1970– ல் நடந்தேறியது.
புதிய ஆலய பூஜைகளை நடத்தும் பொறுப்பினை கதிகாய பண்டாரம் ஏற்றார்.
மீண்டும் ஒரு புதிய அத்தியாயம்
இருபது ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியது.
குவி ன்ஸ்வேயில் இருந்த பழைய இடம் இரயில்வே காரியங்களுக்கு மட்டுமே
ஒதுக்கப்பட்டிருந்தது. அதனால்,அன்றைய மேலாண்மைக் குழு கட்டட சீரமைப்பு
பணிகளை மேற்கொள்ள இயலவில்லை. வேறொரு இடத்தில் புதிய கோயிலைக்
கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது என குழு தீர்மானித்தது. அந்த தீர்மானத்தின்
காரணமாக, புதிய இடம் கோரி பல முறையீடுகள் செய்யப்பட்டன.
புரிந்துணர்வு மிக்க பல நாடாளுமன்ற உறுப்பினர்களும், இந்து அறக்கட்டளை
வாரியமும் தகுந்த ஓர் இடத்தைப் பெற்று தந்தனர். ஆனால் அவ்விடம் 1993
வரை அமைந்திடவில்லை.
மலேயன் இரயில்வே அதிகாரத்தின் கீழ் உள்ள நிலத்தில் அமைந்திருந்த எல்லா
குடிசைகளையும் அப்புறப்படுத்துவது, மறுசீரமைப்பு கொள்கை என வீடமைப்பு வளர்ச்சி
கழகம் தெரிவித்தது. முனீஸ்வரர் கோயிலும் மலேயன் இரயில்வே நிலத்தில் அமைந்திருந்த
காரணத்தால், மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் முனீஸ்வரர் கோயில், மற்ற கோயிலுடன்
இணைந்தால் மட்டுமே இடம் வழங்கப்படும் என்று அரசாங்கம் கூறியது.
நன்றி, வணக்கம்
அன்புடன்,
கிருஷ்ணன்,
சிங்கை
இன்பத் தமிழ் எங்கள் மொழி.
தமிழ் எமது மொழி.
என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம்
Krishnan,Singapore
For your Book Mark
http://ezilnila.com/saivam
http://www.singai-krishnan.blogspot.com

Sri Muneeswaran Temple (Queens Town) -2
முனீஸ்வரன் ஆலயம்
மலேயன் இரயில்வே அதிகாரத்தின் கீழ் உள்ள நிலத்தில் அமைந்திருந்த எல்லா குடிசைகளையும் அப்புறப்-
படுத்துவது, மறுசீரமைப்பு கொள்கை என வீடமைப்பு வளர்ச்சி கழகம் தெரிவித்தது. முனீஸ்வரர் கோயிலும்
மலேயன் இரயில்வே நிலத்தில் அமைந்திருந்த காரணத்தால், மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் முனீஸ்வரர்
கோயில், மற்ற கோயிலுடன் இணைந்தால் மட்டுமே இடம் வழங்கப்படும் என்று அரசாங்கம் கூறியது.
நான்கு கோயில்களுடன் சேர்ந்து அமைப்பதற்கு வீடமைப்பு வளர்ச்சி கழகம் மாற்று இடம் வழங்கியது.
இணைய பரிந்துரைக்கப்பட்ட கோயில்:-
1. சிலாட் சாலையிலுள்ள வேல் முருகன் கோயில்.
2. ரைப்பல் ரேன்ஞ்சிலுள்ள (Rifle Range) மாரியம்மன் கோயில்.
3. கான்பரா சாலையிலுள்ள புனித மரம் பாலசுப்பிரமணியர் கோயில்.
4. புக்கிட் தீமா அவென்யூவிலுள்ள இராம பக்த அனுமான் கோயில்
ரைப்பல் ரேன்ஞ்சிலுள்ள (Rifle Range) மாரியம்ம ன் கோயிலைத் தவிர ஏனைய
கோயில்கள் இணைவதில் ஆர்வம் காட்டவில்லை.
புலோ புக்கம் தீவிலிருந்த விநாயகர் கோவில்,
எண்டர்சன் சாலையிலிருந்த சித்தி விநாயகர் கோவில்,
முனீஸ்வரன் கோயில் ஆகிய நான்கு கோயில்களும் ’’முனீஸ்வரன் கோயில்’’
என்ற பெயரில் ஒரு குடை கீழ் இணைந்தன.
இறுதியில் 3, காமன்வெல்த் டிரைவில்(Commonwealth drive) 2500 சதுர மீட்டர்
நிலத்தில் முனீஸ்வரன் கோயில் இயங்க வீடமைப்பு கழகம் அனுமதி அளித்தது.
இந்நிலத்திற்காகக் கோயில் நிர்வாகம் வீடமைப்பு கழகத்திற்கு 550,000 வெள்ளி
வழங்கியது. 20-ம் தேதி, நவம்பர், 1994 ஆண்டு அடிக்கல் நாட்டு விழா முனீஸ்வரர்
ஆலய வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல்லாக அமைந்தது.
இந்து சமூகத்தினரின் சமய தேவைகளை மேம்படுத்திப் பூர்த்தி செய்யவும், இந்து
சமூகத்தினர் சமூக, கலாச்சார, கல்வி, பொழுதுபோக்கு, சமூக சேவை தேவைகளை
உணர்ந்து அவற்றை மேம்படுத்த, ஐந்து அடுக்கு கொண்ட இராஜகோபுரத்துடன்,
பிரதான கோயில் வழிபாட்டு சன்னிதிகளுடன் பன்னோக்கு திருமண மண்டபம்,
விசேஷ நடவடிக்கைகளுக்குத் தனி அறை எனச் சிறப்பான முறையில் ஆலயம்
அமைந்துள்ளது.
முனீஸ்வரர் சன்னிதி தென் கிழக்கு ஆசியாவிலேயே மிகவும் சிறப்பானது.
மிக பெரியது என நம்பப்படுகிறது. அது இந்தியாவின் தலை சிறந்த கட்டட
கலைஞர்கள், சிற்பிகளால் வடிவமைக்கப்பட்டது. இந்து சமயத்தின்
நேர்த்தியான சிற்ப வேலைப்பாடுகளைப் பிரதிபலிக்கிறது இச்சன்னிதி.
முனீஸ்வர பெருமானை வழிபடும் போது பக்தர்களின் பார்வையை தூண்கள்
மறைக்காதிருப்பது தனிச்சிறப்பு. வேறெங்கிலும் உள்ள சன்னிதிகளில்
அரிதாகக் காணக்கூடிய கட்டட அமைப்பின் சிறப்பை முனீஸ்வரர் சன்னதி
பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்து சமயத்தின் கீழ் சைவ, வேதாந்த தந்தர கோட்பாடுகள்
ஒன்றிணைக்கப்பட்டிருப்பது மற்றொரு சிறப்பாகும். அருள்மிகு முனீஸ்வரரின்
அளவற்ற சக்தி, பரிவு, எழில், சாந்தம், உண்மை ஆகிய தன்மைகளைக்
கொண்ட தெய்வங்களை ஒன்றிணைந்து அமையப்பெற்றிருக்கிறது.
சிற்பமும் கைவண்ணமும் இணைந்து பக்தியுடனும் பெருமையுடன் வணங்கி
நிற்கும் பக்தர்களுக்கு அமைதியையும் நளினத்தையும் பறைசாற்றுகின்றன.
சன்னிதிகள்
மூலவராக முனீஸ்வரர், கர்ப்பக விநாயகர், சுப்பிரமணியர், துர்க்கை அம்மன்,
மாரியம்மன், கிருஷ்ண ர், ஐயப்பன் சுவாமி, காசி விசாலாட்சி, நவகிரகங்கள்
என அருள் பாலிக்கிறார்கள்.
சமய விழாக்கள்.
ஆண்டுதோறும் விசாக தினத்தில் கூட்டு பிராத்தினை,பஜனையும், முருகப்
பெருமானுக்கும், தெய்வானை,வள்ளி ஆகியோருக்கும் நிகழ்ந்த தெய்வீக
திருமண விழா, சித்திரா பெளர்ணமி,கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர்
சதுர்த்தி, கந்த சஷ்டி விழா, திருக்கார்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி,
மாசி மகத்தி ன் முதல் நாள் சங்கு 108 பூஜை, நவராத்திரி விழாக்களுடன்
முக்கிய பண்டிகை நாட்களில் பூஜைகள், சமய விழாக்கள் நடத்தப்படுகின்றன.
சமூக சேவை திட்டங்கள்
ஆலயம் என்பது வழிபாட்டுக்கு உகந்த இடமாக மட்டும் இருந்தால் போதாது.
அது இந்து சமூகத்தினரின் சமூக, கலாச்சார தேவைகளைப் பூர்த்தி செய்யத்
தக்க இடமாகவும் விளங்கிட வேண்டும்.முனீஸ்வரர் ஆலயத்தில் பலதரப்பட்ட
சமூக சேவை திட்டங்கள் மேற்கொண்டு வருகிறது.இலவச சட்ட ஆலோசனை
சேவை, எழுவர் கொண்ட காற்பந்தாட்டம், மெதுவோட்டம், இந்து சமயப் பாட
துணை வகுப்பு, சத்திய சாயிபாபா பஜனை ம ன்றம், தேவார வகுப்புகள் தமிழ்
பாலர்பள்ளி, இயற்கை சிகிச்சை முறை, பரத நாட்டியம் வகுப்பு, யோகப் பயிற்சி,
சிறையில் இருக்கும் கைதிகளுக்குச் சமய வழிப்பாட்டைக் கடைப்பிடிக்கவும்,
பின்பற்றவும் பயிற்சியும், ஆலோசனை வழங்குதல் என பல் வேறு சமூக நடவடிக்கையில்
ஈடுபட்டுள்ளது.
தினம் வேலைக்குச் செல்லுமுன் இங்கு வந்து வணங்கி செல்வார்கள்.
இந்த கல்லும், சூலமும் பிற்காலத்தில் முனீஸ்வரருக்கு அழகிய கோயில்
அமைந்திட வழி வகுக்கும் என்று அன்று யாரும் சிந்திக்கவோ, எதிர்பார்க்கவோ
எண்ணியோ இருக்க மாட்டார்கள்.
நல்ல செயல்கள், சிந்தனைகள் என்றும் கனவாகி போனதில்லை.
நன்றி, வணக்கம்.

ஆலய முகவரி
Sri Muneeswaran Temple (Queens Town)
3, Commonweath Drive
Singapore. 109670
Tel 64735037/ Fax. 64757967
அன்புடன்,
கிருஷ்ணன்,
சிங்கை
இன்பத் தமிழ் எங்கள் மொழி.
தமிழ் எமது மொழி.
என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம்
Krishnan,Singapore
For your Book Mark
http://ezilnila.com/saivam
http://www.singai-krishnan.blogspot.com

kuraan.jpg

Enter content here

எல்லோரும் கடவுள்
 
 
ராமபிரான் காட்டுக்கு சென்றதும் ஒரு ஆசிரமத்திலிருந்து மற்றொரு ஆசிரமத்திற்கு புறப்பட்டார். அப்போது, அந்த ஆசிரமத்திலிருந்த இரண்டு இளைஞர்கள் அவருடன் சென்றனர். இரண்டாவது ஆசிரமத்திலிருந்து மூன்றாவது ஆசிரமத்திற்கு புறப்பட்டதும், இன்னும் இரண்டு இளைஞர்கள் சேர்ந்துகொண்டார்கள். ஆக நான்கு இளைஞர்களும், ராமன், லட்சுமணன், சீதா ஆகியோர் உட்பட ஏழு பேர் மற்றொரு ஆசிரமத்தை நோக்கி சென்றனர். அந்த ஆசிரமத்திலிருந்த குருபத்தினிகள் அவர்களை வரவேற்றனர். அந்தக் கூட்டத்தில் சீதை மட்டுமே பெண் என்பதால் அவளை அடையாளம் கண்டுகொண்டனர். மற்றவர்களில் யார் ராமன், யார் லட்சுமணன் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. அவர்கள் சீதையிடம் அங்கு நின்ற ஒவ்வொருவராக காட்டி, "இவர் ராமரா?, இவர் ராமரா?' என கேட்டுக்கொண்டே வந்தனர். சீதையும் "இவர் ராமர் இல்லை. இவர் ராமர் இல்லை' என சொல்லிக்கொண்டே வந்தாள். கடைசியாக ரிஷிபத்தினிகள் ராமனைச் சுட்டிக்காட்டி, "இவர் ராமரா?' என்று கேட்டார்கள். சீதை பதில் சொல்லாமல் நாணத்துடன் தலையை கவிழ்ந்துகொண்டாள். "இவர்தான் ராமர்' என்று கூறவில்லை. இதிலிருந்து ஒரு உண்மையை புரிந்துகொள்ள வேண்டும். உலகிலுள்ளவர்கள் கடவுள் தங்கள் அருகில் இருந்தும் அடையாளம் காணத் தவறி விடுகிறார்கள். அதே நேரம், பிற பொருட்கள் கடவுளாக இருக்குமோ என சந்தேகப்படுகிறார்கள். சிலருக்கு பணம் கடவுளாகத் தெரிகிறது. சிலருக்கு உலக இன்பங்கள் கடவுளாகத் தோற்றமளிக்கின்றன. ஆனால், நிஜமான பக்தன் எல்லோரையும் கடவுளாகப் பார்க்கிறான். எந்நேரமும் கடவுளுடனேயே இருக்கிறான். நாமும் எல்லாரையும் கடவுளாகப் பார்ப்போமே!

--ரமணர்

Enter supporting content here

ஸ்வேதா மேகம் சிந்தும் ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தேடுகிறேன்