Make your own free website on Tripod.com

Sangee Muzangu

Tamil Marutthuvam

Home
Tibet dalai lama
ONRUPATTAAL UNTU VAAZU
Speak With Love
TuuRamagum UravukaL
For International Friends
KALAM
MUMBAI LOCAL
Unity or Disarray
Marutuva parvai
vanakkam nanparkalee
Teacher's Day
Ennaipatrri
tamil inaiya ezuththukal
Aanmeegapaarvai
ungal pathiugal
thamizukum oru vaazththu
India 60 years
வணக்கம் 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'இது நமது முன்னோர்களின் வாக்கு. நாம் இன்றைய சூழ்நிலைகளில் நாகரீக பழக்கவழக்கங்களுக்கு உட்பட்டு பல தீய நோய்களை விளைவைக்கும்
நோய்க்கிருமிகள் மேலும் உடல் உபாதைகள் நம்மை அறியாமல்
நம்மை ஆட்டிப் படைக்கின்றது. உதரணத்திற்க்கு நாம் சுற்றுச்சூழல் மாசுவினால் நமக்கு T B (என்புரிக்கி)நோய் ஏற்ப்பட்டு அதிலும் முதுகு
தண்டுவட T B என்பது மனிதனை நிரந்தரமாக முடமாக்கி வழ்நாள் முழுவதும் படுக்கையில் விழ வைத்துவிடுகிறது. மேலும் சர்க்கரை வியாதி இப்பொழுதெல்லாம் குறைந்த வயது உள்ளவர்களுக்கும் வந்து
அவர்களின் இல்லர வாழ்க்கையை வீனடித்து நடைபினமாக மாற்றி விடுகிறது, இதில் இரத்த அழுத்த குறைபாடுகள், பெண்களுக்கான நோய்கள், ஆஸ்த்துமா எனப்படும் மூச்சுத்தினரல் நோய்களால் இன்றைய இளம் தலை முறை அவதிப்படுவதை நாம் கண்ணால் காண்கிரோம்.
இதற்கெல்லாம் ஆங்கில மருத்துவம் தான் உகந்ததா ??என்றால்! அதனால் தற்காலிக பயன் தான், ஆனால் அதன் பின்விளைவுகள் நம்மை இறுதிநாள் வரை நம்முடன் ஒட்டிக்கொண்டு நம்மை பாடுபடுத்தும். எடுத்துக்காட்டாக, T B   க்காக நாம் உட்கொள்ளும் ஆன்டிபயாடிக் எனப்படும் எதிர்மருந்துகள் நமது சீரன உறுப்புகளை பாதித்து, புளித்த ஏப்பம், மற்றும் வயிறு உப்புதல், அஜிரணம் போன்ற பல எதிர் விளைவுகளை உண்டாக்கிவிடுகிறது.இன்சுலின் எடுத்துக்கொள்ளும்
சக்கரை வியாதி நோய்வுள்ளவர்களை கேட்டால் அவர்களின் புலம்பல்
உங்களுக்கு தெறியும் அதன் எதிர் விளைவுகள் எப்படிப்பட்டவைகள் என்பது!
இங்கு குறிப்பிட‌ப்ப‌ட்டிருக்கும் நோய்க‌ள் நூற்றில் ஒருப‌ங்கு ம‌ட்டுமே
இந்த‌ நோய்க‌ளுகெல்லாம் ஆங்கில‌ ம‌ருத்துவ‌மே தீர்வா அதுதானில்லை?

த‌மிழ் ம‌ருத்துவ‌மென‌ப்ப‌டும் சித்த‌ ம‌ருத்துவ‌ம், எந்த‌ நோய்க‌ளுக்கும் பின்விளைவுக‌ளில்லா சிகிச்சை த‌ரும் என்ப‌து. ஆங்கில‌ ம‌ருத்துவ‌ர்க‌ளே
ஓப்புக்கொண்ட‌ தீர்ப்பாகும்.
ப‌ல‌ ந‌ன்ப‌ர்க‌ள் நினைப்ப‌து சித்த‌ ம‌ருத்துவ‌ம் என்ப‌து மூலிகைக‌ள் தானே
அத‌ற்க்கு ஆஸ்திரேலியவிலும், ப்ரேசிலிலும், ஐரோப்பிய‌ நாடுக‌ளிலும் ம‌ற்றும் அமேரிக்காவிலும் வ‌சிக்கும் நாங்க‌ள் எங்கே போவ‌து என்று என்னிட‌ம் நேர‌டியாக‌வே கேள்விக‌ளை கேட்டுள்ள‌ன‌ர்.
த‌மிழ் ம‌ருத்துவ‌ம் என்ப‌து வெறும் மூலிகைக‌ளை கொண்ட‌து அல்ல‌,
முத்திரை குறிக‌ளை ந‌ம‌து கை விர‌ல்க‌ளால் செய்யும் பொழுது ந‌ம‌து உட‌லில் இர‌த்த‌ ஓட்ட‌ம் வ‌லுப்பெற்று உட‌ல் புத்துண‌ர்ச்சி பெறும் என்ப‌து ந‌ம‌து முன்னோர்க‌ள் க‌ண்ட‌ த‌மிழ் ம‌ருத்துவ‌ம், (எ க: லிங்க‌ முத்திரை நம‌து உள்ள‌கைவிர‌ல்க‌ள் அனைத்தையும் இருக‌ பிடித்த‌ வாறு க‌ட்டை விர‌லை மேல் உய‌ர்த்தி சிவ‌லிங்க‌ம் போல் உருவ‌ம் கொண்டு வ‌ரும் போது ந‌ம‌து உட‌லில் வெப்ப‌ம் ஏற்ப்ப‌ட்டு     ஆர்டிக் குளிரைக்கூட‌ தாங்கும் ச‌க்தி ந‌ம‌க்கு கிடைக்கிற‌து )

ஆனால் அது ந‌ம்மிட‌ம் இருந்து சீன‌ர்க‌ளிட‌ம் சென்ற‌ பிற‌கு அங்கு ப‌ங்ச‌ர் என‌ பெய‌ரிட்டு ந‌ம்மிட‌மே மீன்டும் வ‌ந்த‌து.
மேலும் இன்னெரு த‌மிழ் ம‌ருத்துவ‌மான‌ எண்ணெய் கொப்ப‌ளிப்பு நாம் எந்த‌ நாட்டில் வ‌சித்தாலும் எளிதில் செய்ய‌ முடிந்த‌ ஒரு சிற‌ந்த‌ த‌மிழ் ம‌ருத்துவ‌ம்.
இந்த‌ ம‌ருத்துவ‌ சிகிச்சை முறைக‌ளை ப‌ற்றியும், மேலும் உங்க‌ளின் நோய்க்கான‌ சிகிச்சைக‌ளை ப‌ற்றியும், ப‌ல‌ கேள்விக‌ளுக்கும், அறிவுரைக‌ளும் ந‌ம் த‌மிழ் ம‌க்க‌ளுக்கு ப‌ய‌னுள்ள‌ வ‌ரையில் தெளிவாக‌
விள‌க்க‌ நாம் யாவ‌ரும் அறிந்த‌ த‌மிழ் ம‌ருத்துவ‌ மேதை  விருதுந‌க‌ர் திரு காசிராஜ‌ன் அவ‌ர்க‌ள் இனிவ‌ரும் வார‌ங்க‌ளில் ந‌ம்முட‌ன் க‌ருத்துக்க‌ளை ப‌ரிமாறிக்கொள்ள‌வும், ச‌ந்தேக‌ங்க‌ளுக்கு விள‌க்க‌ ம‌ளிக்க‌வும் வ‌ருகிறார்
       பூசணிக்காயின் மருத்துவக் குணங்கள்
 
 
பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யாணப்பூசணி என்ற பெயரும் உள்ளது.

காய்கறி வகைகளில் ஒன்றான, இதைச் சமைத்துச் சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும். உடல் சூட்டைத்தணிக்கும். சிறுநீர் வியாதிகளை நீங்கும். சதா காலமும் உடல் வலி
இருப்பவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி தீரும். புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கு சிகிச்சையளிக்கும்போது தினசரி பூசணிக்காய் சேர்த்து சமைத்த உணவைக் கொடுக்க புத்தி சுவாதீனம் படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும்.

மருத்துவத்தில் பூசணிக்காயின் கதுப்பு, நீர்விதை ஆகியவை பயன்படுத்தப் படுகின்றன. நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது. ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் சிறுநீரக நோய்கள், ரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறுதல், பெண்களின் வெள்ளைப் போக்கு நீக்கவும் வெண்பூசணி
பயன்படுத்தப்படுகிறது.

வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதய பலவீனம் நீங்கும். ரத்தசுத்தியாகும்.

பூசணிக்காய் சாற்றைத் தயாரித்து தினசரி 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் தொடர்ந்த இருமல், நெஞ்சுச்சளி குணமாகும். நீரிழிவு நோய் கட்டுப்படும். அதிகத் தாகத்தைக் குறைக்கும். உடம்பின் எந்தப் பாகத்திலாவது ரத்தக்கசிவு ஏற்பட்டால் ரத்தக்கசிவை நிறுத்திவிடும்.

பூசணிக்காய் சாறு 30 மில்லியளவு சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் வலிப்பு நோயின் தீவிரம் குறைந்துவிடும்.

பூசணிக்காய் சாறு 120 மில்லியளவு தயாரித்து ஒரு தேக்கரண்டி தேனும், தேவையான அளவு சர்க்கரையும் கலந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் ஏற்படும் நோய்கள் நிவர்த்தியாகும். சிறுநீரில் ஏற்படும் ரத்தம், சீழ் கலந்த சிறுநீர் வெளியேறுதல் நின்றுவிடும்.

பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டும் (தோல், பஞ்சுப் பகுதி நீக்கி) சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வேகவைக்கவேண்டும். வெந்தபின் இதை எடுத்து சாற்றைப் பிழிந்து நீரைச் சேகரித்து 60 மில்லியளவு தயாரித்து இதில் சிறிது கற்கண்டு சேர்த்து தினம் 2_3 வேளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பாதிப்பால் ஏற்பட்டு வரும் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். தடையில்லாமல்
சிறுநீர் வெளியேறும்.

பூசணிக்காயின் விதைகளைச் சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேகபுஷ்டி உண்டாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி மிகுதியாக
உண்டாகும். உடல் சூட்டைத் தணிக்கும். பித்த நோயைக் கண்டிக்கும். பித்தவாந்தியை நிறுத்தும்.

வெண்பூசணி லேகியம்

நன்கு முற்றிய பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டிலும் தேவையான அளவு எடுத்துக்கொண்டு இதில் 3.500 கிராம் எடுத்து சிறுசிறு துண்டுகளாக வெட்டி சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைத்து எடுத்து மிக்சியில் நன்றாக
மசியும்படி அரைத்துக்கொண்டு வடிகட்டி, நீரையும் கதுப்பையும்
தனித்தனியாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். வடித்து எடுக்கப்பட்ட பூசணிச்சக்கையை 500 கிராம் நெய்யில் மொற மொறப்பாகும்படி வறுத்து எடுத்து, நெய்வேறு, பொறிக்கப்பட்ட சக்கை வேறாக வைத்துக்கொள்ள வேண்டும்.

பூசணிக்காய் பிழிந்த சாற்றில் கல்கண்டு சேர்த்து பாகுபதம் வரும்வரை காய்ச்சி, இந்த பாகில் வறுத்த பூசணிக்காய்த் தூளைக் கொட்டிக் கிளற வேண்டும். திப்பிலி, சுக்கு, சீரகம் இவற்றின் பொடிகள் தலா 70 கிராம், லவங்கப்பட்டை, ஏலரிசி, பச்சிலை, தனியா, மிளகு இவற்றின் பொடிகள் தலா 20 கிராம். இவைகளை மேற்கண்ட மருந்துடன் கலந்து, வடித்து வைத்துள்ள
நெய்யையும் சேர்த்து, நன்றாக எல்லா மருந்துகளும் ஒன்று சேர கிளறி வைத்துக்கொண்டு வேளைக்கு 10 கிராம் அளவில் தினசரி 2_4 வேளை சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா குணமாகும். சுவாச உறுப்புக்கள் பலப்படும். இருதய பலவீனம் நீங்கி பலப்படும். நல்ல பசியுண்டாகும். மலச்சிக்கல் இருக்காது. பொதுவாக உடல் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்கும். ஈசனோபைல்
நிவர்த்தியாகும். டான்சில்ஸ் தொல்லைக்குச் சிறந்தது. பூசணிக்காயைச் சாறு எடுத்து 30 மில்லி முதல் 60 மில்லி வரை வைத்துக்கொண்டு இதில் தேன் ஒரு தேக்கரண்டி சேர்த்து தினசரி கொடுத்து வந்தால், ஒல்லியான சிறுவர்களுக்கு
சதைப்பிடிப்பு ஏற்படும். அழகான தோற்றத்திற்கும், எடை அதிகரிப்பதற்கும் நோய் எதிர்ப்புச் சக்தி கூடி ஆரோக்கியமான உடல் தேறவும் நல்ல பலனைக் கொடுக்கும்.

சிறுநீரகச் செயல்பாடு குறைந்தவர்களுக்கு பூசணிக்காயில் 25 கிராம் அளவிற்கு வெட்டி எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்து வடிகட்டி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகச் செயல்பாடு சீராக அமையும்.

சிறுநீரகம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் பூசணிக்காய்ச் சாறு 120 மில்லியில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையும், இரண்டு  தேக்கரண்டி தேனும் கலந்து சாப்பிட்டு வந்தால், நோய்கள் முழுமையாக நிவர்த்தியாகும். பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும்
ஆயுர்வேத மருத்துவத்தில் பல மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்குக் கிடைக்கிறது. தனிப்பட்டவர்கள் மருந்து தயாரிக்கமுடியாத நிலையில் தயாரிக்கப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்திப் பயன்பெறலாம்.

இந்த லேகியத்தை வாங்கிச் சாப்பிட்டு வந்தால், ரத்தபித்தம், சயம்,
இளைப்பு, பலவீனம், இதய நோய், இருமல் உள்ளவர்கள் நல்ல நோய் நிவாரணம் கிடைப்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

வெண்பூசணி லேகியம்

இந்த லேகியத்தை வாங்கிச் சாப்பிட்டால் காமாலை நோய், இரத்த சோகை, எலும்புருக்கி நோய், அஸ்தி வெட்டை, பிரமேகத்தால் ஏற்பட்ட வெள்ளை நோய் தீரும். உடல் வலிமை பெறும். தாது விருத்தி ஏற்பட்டு காம இச்சை மிகுதியாகும். வெண்பூசணி நெய் அல்லது கூழ்பாண்ட கிருதம் என்ற இந்தப் பூசணி நெய்யைச் சாப்பிட்டு வந்தால் சூலை நோய்கள் நிவர்த்தியாகும். தோல்
நோய்கள், பெண்குறிப்புற்று முதலியன நீங்கும். உடல் சூடு, சூட்டுடன் எரிச்சல், நீர்க்கட்டு, நீர்க்குத்து முதலியன ஆண்களுக்கும், பெண்களுக்கும் நிவர்த்தியாகும். அஸ்திவெட்டை, கிராணிக்கழிச்சல், எலும்புருக்கி (T.B.) முதலிய கொடிய நோய்கள் நிவர்த்தியாகும்.

 

மஞ்சள் மகிமை

இறைவன் பூமிக்கு பல மூலிகைகளை அனுப்பி இருந்தாலும் அதில் சிறப்பான இடம் பெற்ற மூலிகை மஞ்சளாகும். மஞ்சளின் மகிமையை ஒரே பதிவின் மூலம் விளக்க முடியாது. ஒரு தொலைக்காட்சி தொடரையே எடுத்தால் தான் விளக்க முடியும் என்றாலும் ஏதோ பொன் வைக்கும் இடத்தில் மஞ்சளை வைப்பது போல் என்னால் முடிந்தவரை மஞ்சளின் மகிமையை விளக்குகிறேன்.

பெண்கள் தினமும் மஞ்சள் தேய்த்து குளித்தால் முகம் பொலிவு பெறும். மஞ்சள் மிக சிறந்த கிருமி நாசினி. மஞ்சளை உணவில் சுவையும், மணமும் சேர்க்கவும் பயன்படுத்தலாம்.

மஞ்சள் இல்லாவிட்டால் எந்த மங்களகரமான நிகழ்ச்சியும் முழுமை அடையாது.பெண்கள் அணியும் தாலியில் தங்கம் இல்லாவிட்டால் அங்கே மஞ்சள் கிழங்கை வைத்து கட்டினால் கூட போதும்.ஆக பொன்னுக்கு சமமான மகிமை மஞ்சளுக்கு உண்டு என்பது தெரியவருகிறதல்லவா?

வெள்ளிகிழமை மஞ்சள் தேய்த்து குளித்து விட்டு தாலியில் மஞ்சள் கயிறை வைத்து கட்டி மஹாலஷ்மியை வணங்கிவர சகல சவுபாக்கியங்களும் இல்லத்தரசிகளுக்கு கிட்டும் என்பது திண்ணம். மஞ்சள் மிக ராசியான நிறமுமாகும்.மஞ்சள் வண்ண ஆடைகளை தொடர்ந்து அணிந்து வந்தால் நாம் வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் பெற்று மேன்மை அடைவோம் என்பது உறுதி.

எடுத்த காரியங்களை விக்கினமின்றி முடித்து தரும் கணபதியை மஞ்சள் பூசி வழிபட்டால் எண்ணியது நடக்கும்.மஞ்சள் கிழங்கில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபட மங்களம் பெருகும்.

இப்படி மூலிகைகளுக்கெல்லாம் அரசி என புகழ் பெற்ற மஞ்சளின் மகிமையை மேலும் அறிய கலைஞர் தொலைக்காட்சி கலைமாமணி தேவயானியின் நடிப்பில் "மஞ்சள் மகிமை"எனும் தொலைக்காட்சி தொடரை மக்களுக்கு வழங்கவிருக்கிறது.நாம் அனைவரும் அதை கண்டு களித்து பெருமகிழ்வு அடைவோமாக.

ஸ்வேதா மேகம் சிந்தும் ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தேடுகிறேன்