Sangee Muzangu

India 60 years

Home
Tibet dalai lama
ONRUPATTAAL UNTU VAAZU
Speak With Love
TuuRamagum UravukaL
For International Friends
KALAM
MUMBAI LOCAL
Unity or Disarray
Marutuva parvai
vanakkam nanparkalee
Teacher's Day
Ennaipatrri
tamil inaiya ezuththukal
Aanmeegapaarvai
ungal pathiugal
thamizukum oru vaazththu
India 60 years

சுத‌ந்திர‌ம்( பெண்விடுத‌லை, சமூக‌ விடுத‌லை)

1. சுதந்திரத்தின் சுவை( பெண்விடுதலை)
இந்தியா சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளை கடந்து விட்டது . இந்த 60 ஆண்டுகளில் சுதந்திரம் எந்த அளவில் உள்ளது என கொஞ்சம்
பார்ப்போமா.

இந்த நிக்ழ்ச்சி நடை பெற்று ஒரு வருடம் கழிந்து விட்டது.
மென்பொருள் வாணிபத்தில் கொடிகட்டி பறக்கும் கருநாடக மாநில தலை நகர் பெங்களூர், அங்கு ஒரு பண்ணாட்டு நிறுவணத்தில் பணிபுரியும்
கீர்த்தனா 25 ( பெயர் மாற்றப்பட்டுள்ளது)என்ற பெண்ணிற்க்கு ஏற்பட்ட ஒரு நிலை
 அந்த அலுவலகத்தில் ஒரு ஆய்வு பணிக்காக சென்ற ஒரு நபருக்கு அந்த நிறுவனத்தின் பெண் அதிகாரி ஒருவர் தகவல்களை தரும் பணி தரப்பட்டது.
அவரின் பணி நேரத்தில் அந்த பெண் மேற்ப்பார்வையாளர் கலையில் பணிக்கு வந்தது முதல் போனில் தான் அதிக நேரம் செலவழித்தார், எர்ச்சலைடைந்த
அந்த ஆய்வாளர் அவரை பற்றி யாரிடமும் புகார் சொல்ல முடியாமல் தவித்தார் ஏனேனில் அவரி பதவி அப்படிப்பட்டது. அந்த அலுவலகத்தில்
பணிபுரியும் ஒருவரிடம் இதை பற்றி கேட்டபோது சார் அந்த பெண்னுடைய தாயார் சக்கரை வியாதியால் இரு கால்களை இழந்தவர். வீட்டில் இவரது
சின்ன தம்பி மட்டும் தான் சார் அதனால் அந்த பெண் அவரது தாயாரின் தனிமையை போக்க இப்படி அடிக்கடி பேனில் பேசிக்கொள்வார்கள்.
யாரும் தவறாக எடுக்க மாட்டோம்.  என்றதும் அவரது மணம் கொஞ்சம் இளகி அவரின் மீது இரக்கம் தான் வந்தது.
சில மாதங்கள் கடந்தது அந்த பெண்ணிற்க்கு அவரது உறவினர் ஒருவரி மகனுடன் திருமணமானது அவரது கணவனின் வீடும் அவரது
வீடும் மூன்று நாண்கு வீடுகள் கழித்து தான் இருக்கும். திருமணமானதும் அந்த பெண் வேலையிலிருந்து முதலில் தனது வீட்டிற்க்கு சென்று
அண்ணைக்கு பணிவிடைகள் செய்துவிட்டு இரவு தான் தனது கணவனது வீட்டிற்க்கு திரும்புவார், ஆரம்ப நாட்களில் மறுப்பேதும் சொல்லாத
அவரது கணவனின் வீட்டார் நாளாக நாளாக அவருக்கு தொந்தரவு தர ஆரம்பித்தனர். நீ உன் கணவனை கவனிக்க வில்லை. உனக்கு அம்மாதான்
முக்கியமா??? என கேள்வி கேட்டு தொந்திரவு செய்ய அவரது கணவனும் அவரது வீட்டாருக்கு  அதரவாக பேச விளைவு திருமணமான 1 மாதத்திற்க்குள்
அவரது உறவினர்களின் ( கட்ட பஞ்சாயத்து) பேச்சு வார்த்தை நடத்த பெண்ணும் தனது அம்மாவிற்க்கு தான் உதவி செய்ய என்னை தவிர யாரும் இல்லை
என வாதாட ஆனால் பெரிய மனிதர்கள் அந்த பெண்ணின் கனவனுக்கு ஆதரவாக பேச விளைவு திருமண முறிவு ,
திருமணமான ஒரு மாதத்திற்க்குள் கணவன் அவளை தள்ளி வைத்துவிட மீண்டும் அவள் தனது தாயாரின் வீட்டிற்க்கு வந்துவிட்டாள். ஆனால் அந்த
ஆண்மகனே அடுத்த வாரமே வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து விட்டான்.
அந்த கவலையில் அவரின் தாயார் இறந்து விட அந்த பெண் சில நாட்கள் அங்கு இருந்து விட்டு அலுவலகத்தில் மாற்றல் கேட்டு இன்று மத்திய
பிரதேசம் தலைநகர் போபாலில் தனது சகோதரனுடன் தங்கி பணியாற்றி வருகிறார்.
இது படித்த உயர் குடி பிறந்த மாதம் 60000 ரூபாய் சம்பளம் பெறும்  ஒரு பெண்ணிற்க்கு ஏற்பட்ட ஒரு கதி , அந்த பெண்ணின் முன்னாள் கணவர்
கருநாடக மின் துறையில் பணிபுரியும் ஒரு அதிகாரி என்பது மேலும் ஆச்சிர்யத்திற்க்குறிய ஒரு விடயம்.
ஏழை பெண்களின் நிலை எவ்வாறு இருக்கும் என எண்ணிப்பாருங்கள்
ஒரு முறை அவருடன்  பணிபுரிந்த ஒருவர் அவரது தாயாரை மரியாதை நிமித்தமாக பார்க்க சென்ற பொழுது, அவர் கொண்டு சென்ற பழங்கள் பசுவிற்க்கு
இடப்பட்டது. மேலும் அவர் சென்ற உடன் வீடு கழுவபட்டது. ஏனேனில் அவர் எந்த சாதிக்காரரோ அவரை வீட்டில் கொண்டு வந்ததனால் வீட்டில் தீட்டு
பட்டு விட்டது என்ற காரணமாம்.
இந்தியா சுதந்திரம் பெற்று 60 வருடம் கடந்து விட்டது, இன்று நாம் ஒரு  பெண் சனாதிபதியாக்கப்பட்டுள்ளார்.  2 பெரிய மாநிலங்களின் (உத்திர பிரதேசம்)
ராஜஸ்த்தான்) பெண்கள் முதல் மந்திரியாகி உள்ளனர். ஆளுங்கட்சியின் தலைவர் ஒரு பெண்,  என பெருமையடித்துக்கொண்டு செல்லும் போது
நம்மை அறியாமல் பல கீர்த்தனாக்கள் இங்கு வாழ்கின்றனர்.
சமீபத்தில் தமிழக அரசின் ஒரு அறிக்கை 100/ 6 பெண்கள் மட்டும் தான் உயர்கல்வி பயில்கின்றனர். அவர்களும் தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள்,
பரம்பரை பணக்காரர்கள், மற்றும் ஆசிரியர்களின் குழந்தைகள் மற்ற 94 சதவிகித பெண்களின் நிலை என்ன
முற்போக்கு எண்ணம் மிகுந்த தமிழகத்திற்க்கே இந்த நிலை என்றால்,
மற்ற மாநிலங்களின் பெண்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று சிந்தித்து பாருங்கள்.
என்ன உண்மையிலேயே இந்த 60 வருடங்களின் இந்திய பெண்கள் முழு சுதந்திரத்தை அனுபவித்து விட்டார்களா?
 
ஆடுவோமே ப‌ள்ளு பாடுவோமே ஆன‌ந்த‌ சுத‌ந்திர‌ம்
அடைந்துவிட்டோமென‌ ஆடுவோமே!!!!!!!

 
 
2. சுதந்திரத்தின் சுவை (சட்டம் ஒழுங்கு)

இந்த வருடத்தில் மட்டும் நடந்த சம்பவங்கள்.
 தங்களது நிலங்களை தனியார் ஆரம்பிக்கும்ஒரு கார் தொழிற்ச்சாலை தயாரிக்க அரசு எடுப்பதை
எதிர்த்து போராடிய கிராமமக்கள் மீது
போலீசாரின் துப்பாக்கி சூடு அரசின் கணக்கேடுப்பு சொல்கிரது .30 க்கும் மேற்பட்டோர்
உயிரிழந்தனர் என்று ஆனால் அங்கு ஒரு கிராமமே காணாமல் போனதாக தகவல் , சில
பொருளாதார வல்லுனர்களின் கருத்து என்ன வென்றால் மாநிலத்தின் தொழில் வளர்ச்சியை
தடுக்கும் முயர்சி இந்த மக்கள் போராட்டம் என சொல்லி அந்த பேச்சு முடியும் முன் ராஜஸ்த்தான்
குர்ஜார் இனத்தை சேர்ந்த மக்கள் தங்களை பிற்படுத்தபட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்
என வலியுறுத்தி நடத்தைய போராட்டம் வன்முறையாக மாற  காவல் துறை துப்பாக்கி சூட்டில்
100 க்கும் மேற்பட்ட மனிதஉயிர்பலி.
அங்கே ஏழை மகன் சிந்திய இரத்தம் காய்வதற்க்குள்,
தாங்கள் விவசாயம் செய்து பிளைக்க எங்களுக்கு நிலம் தாருங்கள் என கேட்டு போராடிய
 ஆந்திர மாநில   விவசாய்கள் மீது தூப்பாக்கி சூடு 10ற்க்கும் மேற்பட்ட உயிர்ப்பலி
ஏன் மக்களுக்காகத்தான் அரசாங்கம் மக்களின் தோழன் தான் காவல் துறையினர் அந்த
காவல் துறையினறே மக்களை குருவிகளை போல் சுடுவது எந்த வகையில் சரியானது
இங்கு என்ன மக்களாட்சி நடைபெறுகிறதா அல்லது சர்வாதிகாரமா,
1993 அன்று நடந்த மும்பை குண்டு வெடிப்பு 17 வருடங்கள் கழித்து தீர்ப்பு, இடைவெளியில்
பல குற்றவாளிகள் அயல் நாடு சென்று விட சிலர் திரும்ப வரா இடத்திற்க்கு சென்று விட
மீதமிருந்தவர்களில் சிலருக்கு தண்டனை காலம் முடிந்து விட சொற்ப்ப நபர்களுக்கு
சிறை மற்றும் மரணதண்டனை லேட்டனா தீர்ப்பேன்றாலும் நீதிகிடைத்து விட்டது என்று
யார் இன்று கொண்டாடினார்கள். அந்த குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு இது வரை
சரியான நிவாரனம் கிடைத்ததா,
ஸ¤ராவுத்தீன் அமீனா என்ற தம்பதியரை கடத்தி சென்று என்கவுண்டர் என்ற பெயரில்
கொலை செய்து விட்டு , அந்த அம்மணியை கற்பழித்து உயிருடன் எரித்து சாம்பலை
வயல்காட்டில் தூவிவிட்டு சென்றனர்.
சமூக விரோதிகள் அல்ல காவல்த்துறை உயரதிகாரிகள் தான் இந்த காரியத்தை செய்த புண்ணியவான்கள்
ஏதோ சில காவல் துறை அதிகாரிகள் கைது செய்யபட்டனர்.
அது சிலநாட்களாக டிவீ திரையில் இவர் கைது அவர் சஸ்பெண்ட் என செய்திகள் வந்தது. நாளைடைவில் அது
சூரியன் கண்ட பனியாய் மறைந்து போனது.  சட்டத்தின் பாதுகாவலர்களுக்கு சட்டத்தின் இடைவெளிகளில்
இருந்து புகுந்து வெளிவர சொல்லியா தரவேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட குஜராத் மாநில மக்களவை உறுப்பினர் தனது மனைவி மகனின் பாஸ்போர்ட்டில்
பஞ்சாபை சேர்ந்த ஒரு இளம்பெண்ணையும் சிறுவனையும் அயல் நாட்டிற்க்கு  அழைத்து சென்றார் ஆனால் விமான நிலையத்தில்
வைத்து பிடிபட்டுள்ளார்.  என்ன நடக்கிறது என்றே புரியவில்லை இத்தனைக்கும் அவர் பல முறை அயல் நாடு சென்றுள்ளார்
என்கிறது அவரின் பாஸ்போர்ட் எத்தனை நபர்களை இப்படி ஆட்கடத்தி இருப்பார்.
அதன் பிறகு டீ வீ செனல்களில் ஆந்திரா, மத்திய பிரதேசம் என பல அரசியல் வாதிகள் இப்படி செய்திருக்கின்றனர்
என ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டது. ஆனால் இன்று அவருக்கு ஜாமீன் கிடைத்து விட்டது.
அரசியல் வாதிகள் மட்டுமல்ல பணக்காரர்கள் கூட சட்டத்தை பாக்கேட்டில் வைத்துகொள்ள இடமுண்டு என்பதை
பெரைரா என்ற ஒரு இளவயது நபரின் மூலம் நிறுபனமாகி உள்ளது. மும்பை புறநகரான பாந்திராவில் இரவு கேளிக்கை
ஆடி விட்டு நல்ல போதையில் காரை ஓட்டி சென்று பாதைஓரம் படுத்திருந்த மக்களின் மீது ஏற்றி 3 மனித உயிர்களை
பலிவாங்கியவரை,, அவர் குடிபோதையில் வண்டி ஓட்டியுள்ளார்!! ஆனால் அவர் என்ன செய்கிறார் என்பது அவருக்கே
தெரியாத போது ,அவருக்கு சட்டம் எப்படி தண்டனை கொடுக்க முடியும் . என வாதாட சட்டமும் ஆமாம் சாமி என
தலையாட்டி விட்டு,  குடிபோதையில் வண்டி ஓட்டியதற்க்கான தண்டனையாக சொற்ப்ப தொகையை தண்ட தொகையாக
பெற்றுக்கொண்டு அவரை வீட்டிற்க்கு அனுப்பி விட்டது.
ஆனால் ஏழைகளுக்கு நீதி என்பது அறிதாகிவிட்ட காலம். இந்தியா டுடே சொல்கிறது நாட்டில் மொத்தம் 13 ஆயிரத்திற்க்கும் 
மேற்பட்ட கைதிகள் விசாரனை கைதிகளாக பல வருடங்கள் சிறையில் வாடுகிண்றனர். காரணம் அவர்களால் வக்கீலுக்கு பணம்
செலுத்தும் வசதி இல்லை.
ஒரு பெல்ட் தொழிலாளி ஒருவர் அவர் பணிபுரிந்த பட்டரையில் நடந்த திருட்டிற்க்கா 3 வருடங்களாகியும் இன்னும் சிறையில் வாடுகிறார்
இத்தனைக்கும் அவர்மீது குற்றம் நிறுபிக்க படவில்லை. அவர் செய்த குற்றம்.  அன்று  பட்டரையிலிருந்து வெளியேறிய கடைசி நபர் அவர்தான்.
பாவம் அந்த குடும்பம் எத்தனை இன்னல்களை சந்திக்கிறது .
பல்கோடிகளை சுருட்டிய ஒரு கூட்டுறவு வங்கியின் சேர்மேன் பகலொரு விழாவும் இரவெல்லாம் பார்ட்டி என கேளிக்கை புரிந்து கொண்டிருக்கிறார்
நயீம் சேக் பொண்ற தினக்கூலிகள் சொற்ப்ப பணம் காணவில்லை என்ற பெல்ட் பட்டரை அதிபரின் புகாரின் பேறில் விசாரனைகைதியாக
3  வருடங்களாக சிறைவாழ்க்கை
உண்மையில் இந்த 60 வது வருட சுதந்திர காலத்தில்  சட்டம் அனைத்து குடிமகனுக்கும்  சுந்திர காற்றை நிம்மதியாக சுவாசிக்க விட்டு விட்டதா  ???????
இன்னும் 10 நாட்கள் தான் உள்ளன 60 ஆம் ஆண்டு  இந்திய சுதந்திர தினக்கொண்டாட்டங்கள் ஆரம்பிக்க
 கொன்டாடை பெண்ணே கொண்டாடை பெண்ணே
சுத‌ந்திர‌ம் வ‌ந்த‌தென‌ கொன்டாடை பெண்ணே
குச‌ராத்தி ம‌ராட்டி, பெங்காலி
மேலும் பீஹாரி க‌ஸ்மீரி
ம‌த‌ராஸி(தென் இந்திய‌ர்) எல்லோரும்
சேர்ந்து வாங்கித்த‌ந்த‌ சுத‌ந்திர‌த்தை
கொண்டாடடி பெண்ணே
 

 

                   சுதந்திரத்தின் சுவை கல்வி வேலைவாய்ப்பு
இடம் மதுரை ரேஸ்கொர்ஸ் மைதானம் நேரம் சரியாக 11 :30 தை கடிகாரம் காட்டுகிறது, பாரவையாளர் அரங்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாக இளைஞர்கள் வந்தமர துவங்குகிறார்கள்.
அனைவரின் கைகளிலும் ஒரு எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் என்னும் ஆங்கில வேலைவாய்ப்பு பத்திரிக்கை மேலும் சில புத்தகங்கள். வேயில் தனது வேகத்தை
காட்ட துவங்குகிறது. புதூரிலிருந்து கோர்ட் செல்லுபவர்கள் அந்த மைதானத்தில் பாதைவழியாக குறுக்கு வழியில் செல்பவர்களும், மேலும் ஐஸ் வண்டிகாரர்களை
தவிர வேறு யாரும் இல்லை ,
அந்த இளைஞர்கள் யார் அவர்கள் இங்கு என்ன செய்கிறார்கள். கொஞ்சம் கேட்போமா, ஹலோ வணக்கம் அண்ணா:,,முதலில் ஒரு ஏளன வெறுமையான
பார்வை மீண்டும் பேப்பரில் மூழ்குகிறார்.  மீண்டும் ஒரு இடைஞ்சல் கொடுத்து பார்த்தால் என்ன என எரிச்சலுடன் ஒரும் கேள்வி அவரிடமிருந்து வருகிறது.
இல்லை அண்ணே கொஞ்சம் பேசலாமா புதூர் காரன் தான், 12 வரைக்கும் படித்திருக்கிறேன் வேலை எதும் கிடைக்க வில்லை அதுதான் சும்ம இங்க
வந்து உட்கார்ந்திருக்கிறேன், வீட்டில் இருந்த அம்மா அப்பாவோட கரைச்சல் தாங்க முடியவில்லை என ஒரு உதார் விட, அவரிடமிருந்து சிரிப்பு
வருகிறது,
 தம்பி என்ன படித்திருக்கிறாய்  
நான்: 12 ஆம் வகுப்பு சார்
இங்க பாரு என அவரின் பையிலிருந்த பட்ட படிப்பிற்க்கான சாண்றிதழ் ஒரிஜினல் காண்பிகிறார் சுந்தரேசன் முதுகலை ஆங்கிலம் முதல் வகுப்பில்
தேறியவர் என அவரது சான்றிதழ் சொல்கிறது. அங்கு  உட்கார்ந்திருப்பவர்கள் அனைவரும் பட்ட படிப்பு பெற்ற வர்கள் வேலை தேடி அசந்து போனவர்கள்
வீட்டில் பெற்றோரின் வேதனைகளை கண்டு கண்ணீர் விட முடியாமல் இங்கு வந்து வேற்று வானத்தை பார்த்து கற்பனை வாழ்வில் மிதப்பவர்கள்
இது ஒரு கற்பனை அல்ல நிஜ நிகழ்வு.
இந்தியாவின் மிகப்பெறிய பொது நிறுவனங்களின் ஒன்றான காப்பீட்டு கழகத்தின்(LIC) பணியாளர் தேர்வு ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது
நடந்தது அதன் பிறகு இன்னும் அதில் வேலைக்கான பணியாட்கள் அதிகாரிகள் தேர்வு நடைபேறவே இல்லை. இந்தியா முழுவது குறைந்த பட்சம்
1 லட்சத்திற்க்கும் அதிகமான அதிகாரிகளின் பதவி LIC நிறுவனத்தில் காலியாக உள்ளது . என்றால் மற்ற பணிகளுக்கான பதவி எவ்வளவு இருக்கும்
சமீபத்தில் பல்கலைகழக நிறுவனத்தின் துவக்க பள்ளி ஆராய்ச்சி மையம் நடத்திய அறிக்கையில் இந்தியா முழுவதும் 4.5  லட்சத்திற்க்கும்
மேற்பட்ட பள்ளிகளின் ஆசிரியர்களே   கிடையாது. தமிழகத்தில் மட்டும் இதன் எண்ணிக்கை 30,000 தண்டும் ஏன் ,
ஒருபுறம் வேலையில்லா திண்டாட்டம் என்றால் மறுபுரம் காலியாக உள்ள பதவிகள். வருடத்தில் 70000 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பட்ட, பட்டய
  தேர்வு பெற்றவர்கள் வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் யார் வேலை தருவார்கள். இவர்கள் எல்லாம் என்ன திறமையற்றவர்களா
மக்கள் தொகை பெருக பெருக நிர்வாகத்தின் வேலைப்பழுவும் அதிகமாகும் அப்படி வேலைப்பழு அதிகமாகும் பொழுது அதற்க்கு தீர்வு கான
புதிய பல பதவிகளை ஏற்படுத்தி பணியாளர்களை நியமனம் செய்தால் போதும் எளிதாக தீர்வுகணப்பட்டு விடும். ஆனால் செய்வது யார்
இல்லாத ஒன்றிற்க்காக இருப்பதை இடித்துவிட்டு நாட்டில் கலவரத்தை உருவாக்க திறமை இருக்கிறது. செய்யாத ஒரு காரியத்தை செய்தார்கள்
அதனால் உடைக்காதே என்று ஆர்பாட்டம் நடத்த தெறிந்தவர்கள். இந்த வேலையில்ல படித்த இளைஞர்களை மனதில் கொண்டு ஏதாவது
போராட்டம் நடத்தி இருக்கின்றார்களா?
பணக்கார மேல்வர்கத்தின் குழந்தைகள் படிக்கிறார்கள். படிக்கிறார்கள் , உயர்கல்வியில் தொழிற்படிப்பில் எளிதாக இடம் கிடைக்கிறது.
படிப்பு முடிந்தவுடன் வேலையும் எளிதாக கிடைத்து விடுகிறது. எங்கும் எந்த தடையும் இன்றி அவர்களின் வாழ்க்கை ஓடிவிடுகிறது.
ஆனால் ஏழைமற்றும் நடுத்தர வர்கத்தின் குடும்பத்தின் நிலை என்ன , குழந்தை பிறந்தவுடன் அவனுக்கு எந்த பள்ளியில் சேர்ப்பது
என்ற சிக்கலில் துவங்குகிறது. கையில் வசதியில்லை , ஆங்கில பள்ளிகளின் சேர்க்க அதனால் மாநகராட்சி பள்ளியிலும் , மிஷினரி பள்ளியிலும்
அவனது(அவளது) படிப்பு ஆரம்பமாகிறது. அங்கும் தரமான கல்விதான் பயிற்றுவிக்கின்றார்கள். திறமை கொண்டு படிக்கிறான்.
10 வகுப்பு வரை அவர்களது பேற்றோர்கள் தினறிக்கொண்டு கல்வி பயிற்றுவிக்கிறனர். பையனும் எந்த கவலையுமின்றி படிக்கிறான்.
ஆனால் பத்தாம் வகுப்பை தாண்டிய பிறகு அவனின் தலைவிதி ஆரம்பமாகிறது. 12 ஆம் வகுப்பில் தேர்கிறான் அங்கிருந்து அவனுக்கு
ஏழரை நாட்டு சனி ஆரம்பமாகிறது.
ஆமாம் முதலில் தொழிற்க்கல்விக்கு முயல்கிறான் அங்கு அவனது மார்க் முக்கியமல்ல அவனது பேற்றோரின் பேங்க் பேலன்ஸ் முக்கியமாகிறது.
கலைக்கல்லூரிதான் அவனுக்கும் ஆதாரவாகிறது ஆனாலும் , பட்டம் பெற்ற பிறகு வேலை என்ற உத்திரவாதமின்றி தனது இளங்கலை மற்றும் முதுகலை
பட்டங்களை பெற்று விடுகிறார். அதன் பிறகு அவன் வேலை தேடி பல நிறுவனங்களுக்கு அலைகிறான். அங்கும் பணம் தான் பேசுகிறது.
இருந்த கொஞ்ச நஞ்ச பணங்களை பட்டபடிப்பிறக்கு செலவழித்து விட அவனுக்கு அடைக்கலம் தருவது. மைதானங்கள். மதுரை காந்திமீசியம்,
தமுக்கம் மாநகராட்சி பூங்கா, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடை சாத்திய பிறகு முன்பெல்லாம் தூரத்தில் இருந்து வரும் பக்தர்கள், மற்றும்
சாதுக்கள் தான் அங்கே அமர்ந்திருப்பார்கள். ஆனால் இன்றைய நாட்களில் வேலையில்லா இளைஞர்கள் அமரும் இடமாகிவிட்டது. என்ன செய்ய
வீட்டில் வருமையின் காரனமாக மின் விசிரிகூட இல்லை( அதைகூட அடகு வைத்து படிக்க செலவழித்தாகி விட்டது), மதுரை போன்ற நகரங்களின்
வேயிலின் தாக்கம் தீர இது போன்ற இடங்கள்தான் குளுமை தரும் , நாலுபேரை பார்க்கும் போது, மனதுக்கு கொஞ்சம் நிம்மதி கிடைக்கும் இந்த
எதிர்காலத்தை தொலைத்து விட்ட இளைஞர்களுக்கு ,
இது மதுரை மட்டும் ஒரு உதரணமாக சொல்லிருக்கிறேன். தமிழகத்தில் எத்தனை நகரம் மாவட்டம், இந்தியா முழுவதும் என்று நீங்களே கணக்கிட்டு
கொள்ளுங்கள்.
இவர்களின் நாளை என்ன தெரியுமா வயது 28 ற்க்கும் மேல் கடந்தாகிவிட்டது. இனியும் வேலை தேடி அலைந்தால் புண்ணியமில்லை,
அதனால் இவர்கள் பேட்ரோல் நிலையங்களிலிலும் , தனது தந்தை பணிபுரிந்த பிரிண்டிங் பிரஸ்களிலும் , உரக்கடைகளிலும், சிமீண்ட் குடோன்களிலும் ,
பற்பொடி, அலுப்பு மருந்துகளுக்கான  மார்கேட்டிங் என ஒதுங்கிவிடுகின்றனர். அதன் பிறகு திருமணம் குழந்தை குட்டி என மீண்டும் அடங்கிவிட
துவங்கிவிடுகின்றனர்.
ஆனால் அவர்களின் மனதுக்குள் எழுந்த ஏக்கம் மட்டும் அவர்களின் கல்லரையில் அடங்கி விடுகிறது.
 
 

SELVATHUL SELVAM SEVICH SELVAM ACHELVAM
SELVATHTHUL ELLAAM THALAI

ஸ்வேதா மேகம் சிந்தும் ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தேடுகிறேன்