Make your own free website on Tripod.com

Sangee Muzangu

Home
Tibet dalai lama
ONRUPATTAAL UNTU VAAZU
Speak With Love
TuuRamagum UravukaL
For International Friends
KALAM
MUMBAI LOCAL
Unity or Disarray
Marutuva parvai
vanakkam nanparkalee
Teacher's Day
Ennaipatrri
tamil inaiya ezuththukal
Aanmeegapaarvai
ungal pathiugal
thamizukum oru vaazththu
India 60 years
தமிழரின் தாகம் உலகெங்கும் தமிழோசை

clik type Tamil letters copy / Paste your new mail & sent

rajesaravana@yahoo.com
 
 
Dear friends pls go the two page display your window tamil fonts
thanks & regards
Saravanan Rajendran
mumbai
09819166580

Tamil fonts Help PLs Clik

tamil Ezuththu

இந்த பகுதியில் இருந்த‌ மாணவ மாணவிகளுக்கான கட்டுரை இந்த exam key  இனைக்கபட்டுள்ளது

exam key

INDIA 60 YEARS

pongal.jpg

பொங்கலோ பொங்கல்

 பொங்கல் முதல் நாள் உயிர் தந்த ஆதவனுக்கு, மறுநாள் கைகொடுத்த காளைகளுக்கு, மறுநாள் நம்மை ஈன்ற பொற்றோர்கள், மற்றும் நம் நினைவில் நிற்க்கும் நமது முன்னோர்கள், வரிசை படுத்தி நன்றி கூறும் இனம் தமிழினம்.
அதற்க்கு அவர்கள் தந்த விழா பொங்கல் விழா, இங்கே மற்ற இனத்தவரை மனம் புண்படுத்தும் ஊர்வலங்கள் இல்லை, காசை உண்மையிலேயே கரியாக்கும் பட்டாசுகளில்லை, கண்களை கெடுக்கும் வண்ணப்பொடிகள் இல்லை, மனித கோபுரம் அமைத்து கைகால்களை உடைத்துக் கொள்ளும் சட்டி உடை(கொவிந்தா) சாஷ்டாங்கங்கள் இல்லை,
பொங்கல் மட்டும் உண்டு அமைதி மகிழ்ச்சி,
 
அங்கே பணக்காரன் பட்டாசு வெடிக்க ஏழைகள் வேடிக்கை பார்ப்பார்கள்,
இங்கே எனது வீட்டில் கூட போங்கலோ பொங்கல் வாங்க வந்து சாப்பிட்டு போங்க என எழையும் அழைக்கும் பொங்கலிது.
 சாரிலி சாப்லின் கூட சிறுவயதில் கிரிஸ்துமஸ் கொண்டாட வழியின்று தவித்தான். ஆனால் இங்கே கதராடை போதுமடா அதுதான் உனக்கு புது வேட்டி சட்டை, என 100 ரூபாய்க்குள் கூட புத்தாடை வாங்கி அனிந்து கொண்டாடும் மகத்தான விழா.
பல நாடுகள் பல கலாச்சாரங்கள், ஆனால் அவர்கள் எல்லாம் இது போன்ற ஒரு பொது நிகழ்விற்க்காக திருவிழா கொண்டாடுகிண்றனரா. அனைத்திற்க்கும் ஒரு மத சாம்பிரதாய காரணங்கள்.
இல்லை யென்றால் கடைக்காரன் தனது வருமானத்தை ஈட்ட கொண்டாடும் விழா எகா மேற்க்குலக நாடுகள் கொண்டாடும் குளிர்கால கார்ணிவெல் திருவிழா
அங்கே மதுபாணங்கள் இந்த விழாக்களின் போது 50000 லிட்டர் வரை வழிந்தோடும்.
ஜப்பானியர்களின் வசந்த திருவிழா ஆனால் இது குளிர் தொலைந்து கோடை வருவதை வரவேற்று கொண்டாடுவது.
இத்தாலியின் முகமூடி திருவிழா, வேற்று ஒரு நாட்டவரை முகமூடி அனிந்து போர் புரிந்து வெற்றி பெற்றதை கொண்டாடும் விழா.

பிரேஸிலின் கார்னிவெல் டூரிச‌ம் பெருக்குவ‌த‌ற்க்காக‌ கொண்டாட‌ப்ப‌டும் விழா, இந்து ம‌த‌ விழாக்காளின் கார‌ண‌ங்க‌ள் ப‌ல‌ த‌மாசாக‌ இருக்கும், ஒரு விழாவிற்க்கு வீட்டுக்கு வீடு ப‌ல‌ கார‌ண‌ங்க‌ள் இருக்கும் (எ கா தீபாவ‌ளி)
ஒரு சில‌ விழாக்க‌ள் ஒற்றுமைக்கு ப‌ங்க‌ம் விளைவித்துவிடும், இஸ்லாமிய‌ர்க‌ள் ந‌ட‌த்தும் முக‌ராம் ப‌ண்டிகை ஊர்வ‌ல‌த்தின் போது அம்ம‌த‌த்தின் இரு பிரிவின‌ர் அடித்துகொள்ளும் செய்திக‌ளை அனைத்து வ‌ருட‌மும் உத்திர‌பிர‌தேச‌ம் ம‌ற்றும் சில‌ வ‌ட‌மாநில‌ங்க‌ளில் இருந்து வ‌ந்து கொண்டுதான் இருக்கும்.
ஆனால் த‌மிழ‌ர்திருநாளம் பொங்க‌ல‌ன்று சூரிய‌ன் என்ன‌ ம‌த‌ம் பார்த்த‌ ம‌ண்ணிற்க்கு வ‌லு சேர்க்கிறான்.குறிபிட்ட‌ ம‌தத்தின‌ர் ம‌ட்டும் கொண்டாட‌, அல்ல‌து குறிபிட்ட‌ ம‌த‌த்தவ‌ர்தான் உழ‌வுத்தொழில் புரிகின்ற‌ன‌ரா உல‌கில், இல்லையே ம‌னித‌ன் இய‌ற்க்கைக்கு தெரிவிக்கும் ம‌ரியாதையில் உதித்த‌ இந்த‌ பொங்க‌ல்.
அது ம‌ட்டுமா பெண்க‌ள் ம‌ன‌முடிந்து சென்ற‌வுட‌ன் உற‌வுப்பால‌ம் அவ‌ர்க‌ள் ம‌ர‌ணிக்கும் வ‌ரை தொட‌ர‌ வ‌ரும் பொங்க‌ல் ப‌டி பாட்டிக்கூட‌ மும்பாயில் உள்ள அவ‌ரின் த‌ள்ளாத‌ வ‌ய‌து தாத்தா அனுப்பும் பாச‌ப்படி பொங்க‌ல் ப‌டி,
இள‌வ‌ட்ட‌ங்க‌ள் த‌ன‌து க‌ன‌வு க‌ன்னியின் பார்வையில் விழ‌ த‌ன‌து வீர‌த்தை நிலைப்ப‌டுத்த‌ கொண்டாடுவ‌து தானே ச‌ல்லிக‌ட்டு (ம‌ஞ்சுவிர‌ட்டு) இப்ப‌டி வ‌கை பார்த்து ந‌டைபார்த்து ம‌க்க‌ள் ம‌ன‌ம் பார்த்து அத‌ற்கேற்ற‌ த‌ருன‌ம் பார்த்து கொண்டாடும் விழாவை சில‌ர் குறிப்பிட்ட‌ ம‌த‌ விழாவாக‌ வ‌ருனிக்கின்ற‌ன‌ர்.
சும்ம‌ மார்கேட் ட‌ல்லாகி போன‌வுட‌ன் அர‌சிய‌லுக்கு வ‌ந்து ப‌ண‌ம் ப‌ன்னுப‌வ‌ர்க்கேல்லாம்
வ‌ர‌வேற்பு வாழ்த்துறை, வ‌ண்ண‌விள‌க்குக‌ளில் தோர‌ண‌ங்க‌ள், மும்பை விமான‌ நிலைய‌த்திலிருந்து அவ‌ர‌து த‌ங்கும் விடுதிவரை ஆட்டுழிய‌ ஊர்வ‌ல‌ங்க‌ள். ஆபாச‌ ந‌ட‌ன‌ங்க‌ள்.
நாம் கொன்டாடும் விழா த‌மிழ‌ர் என்ற‌ உன்ன‌த இன‌த்தை உல‌கிற்க்கு அறிவிக்க‌ இந்த‌ அறிவிய‌ல் உல‌கில் நாம் இது போன்ற‌ விழாக்க‌ளை உதாசீன‌ப‌டுத்த‌ கூடாது. ப‌ல‌ போட்டிக‌ள் வைக்க‌லாம், பொங்க‌ல‌ன்று த‌மிழ‌ர்க‌ள் அனைவ‌ரும் ஒன்று சேர்ந்து ப‌ல‌ கூட்ட‌ங்க‌ள் பொது நிக‌ழ்வுக‌ள் என‌ கொண்டாடி ம‌கிழ‌லாம். கொண்டாடி ம‌கிழ்வோம்.
அனைவ‌ருக்கும் ச‌ர‌வ‌ணாவின் பொங்க‌ல் ந‌ல் வாழ்த்துக‌ள்


எனது இனிய தமிழ் மக்களே இந்த பகுதியில் மனிதருள் மகான்கள் எனற கட்டுறை உங்களுக்கா மலர்ந்திருக்கிறது , முதலில் உங்களின் குழந்தைகளுக்கு இவரை பற்றிய தகவல்களை சொல்லுங்கள், நாமும் இவர்களைபோல நடக்க முடியாவிட்டலும் இவர்களைபோல வாழ கற்று நல்லவைகளை நல்கி தீயவைகளை விலக்கி நான்கு பேரின் மனதில் சந்தோசத்தை உருவாக்கி வாழ்ந்தால் என்றும் நம்வாழ்வில் சுபதினம்

siirkaazi.jpg

மனிதருள் மகான்கள் .
மறைந்த திரு வெங்கலகுரலோசை பாடகர் சீர்காழி கோவிந்த ராஜனின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்.
சந்திரோதயம் படப்பாடல் பதிவிற்க்காக தனது ஊரான சீர்காழியிலிருந்து திருச்சி வந்து சென்னை செல்வதற்கா
 திருச்சி பேருந்து நிலையத்தில் இரவு சென்னை செல்லும் விரைவு பேருந்தில் செல்ல
திருச்சி வந்தவர் இரவு அதிக நேரமாகிவிட்டதால் பேருந்திலேயே கலைப்பில் உறங்கிவிட காலை
சென்னை சென்றவருக்கு ஒரு அதிர்ச்சி அவரின் உடமைகள் அனைத்தும் களவு போய்விட்டது.
நடத்துனரிடம் கேட்டதற்க்கு அவர் மயிலாடுதுறையில் வண்டி 15 நிமிடம் நின்றது அதில் களவு
போயிருக்கும் அங்குள்ள காவல்துரையில் புகார் கொடுக்கலாம் என்றார். ஆனால் சீர்காழியோ
காலை நடக்க இருக்கும் ஒலிப்பதிவிற்க்கான அனைத்து குறிப்புகளும் அதில் இருந்தது. அதுஇல்லாமல்
எனக்கு இன்று பாடல் பாடுவது சிரமம் என நினைத்து சென்னையில் உள்ள ஒரு விடுதியில்
ரூம் எடுத்து காலை கடன்களை முடித்துக்கொண்டு அரங்கம் சென்று தன் நிலையை சொல்லி
இன்றைய ஒலிப்பதிவை தள்ளிவைக்க வேண்டியதுதான், என்று நினைத்து. 9மணி அளவில் வள்ளுவர்
கோட்டம் அருகிலுள்ள அந்த ஒலிப்பதிவு அரங்கத்தை அடைந்தவர். அப்பொழுது ஒரு நடுத்தர வயதுடைய
ஒரு நபர் அந்த அரங்கத்தின் வயிற்காவலரிடம் ஏதோ விவாதிப்பது, தெரிந்து என்ன என்று விசாரிக்க
சென்றவருக்கு ஒரு அதிர்ச்சி திருச்சி சென்னை பேருந்தில் கானாமல் போன அவரது உடமைகள்
அந்த நடுத்தர வயது நபரின் கைகளில் இருந்தது கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தார்.இந்த பை உன்னிடம்
எப்படி வந்த்ததப்பா என விசாரிக்க அந்த நபர் சொன்னார்  ' ஐயா நான் ஒரு திருடன் எனது பிழைப்பே
பேருந்தில் அசந்து உரங்கிக்கொண்டிருக்கும் பயனிகளின் உடமைகளை கொள்ளையிட்டு பிழைப்பு நடத்துவதுதான்
அப்படி நேற்று நான் திருடிய பொருட்களை பார்த்துக்கொண்டிருக்கும் போது உங்களின் உடமைகளை
கண்டேன் மாலும் அதில் இருந்த நோட்டு புத்தகத்தில் இன்றைய நிகழ்ச்சி குறிப்பு பாடல்கள் என எல்லாம்
இருந்தது. என்னால் உங்களுக்கு எந்த சிரமமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக சென்னை பஸ்பிடித்து
இங்குவந்தேன் ஐயா என்றார் அவர், அதைகேட்ட சீர்காழி உள்லம் நேகிழ்ந்து ஏனப்ப இப்படி திருட்டு பிழைப்பு
பிழைக்கிறாய் , உழைத்து சம்பாதிக்க வேண்டியதுதானே, என்றதற்க்கு அவர் ஐயா, எனக்கு சிறுவயதில்
மூளைகாய்ச்சல் ஏற்பட்டு ஒரு கை சூப்பி போய்விட்டது, யாரும் என் நிலையை பார்த்து வேலை தராததால்
நான் திருட்டு தொழிலுக்கு வந்தேன் என்றார். சீர்காழி அவருக்கு அந்த அரங்கத்தில் முன்னால் உள்ள
டீக்கடையில் அவருக்காக சிபாரிசு செய்து வேலை வாங்கிதந்தார். அன்றிலிருந்து சென்னை வரும்
ஒவ்வொரு பயனத்திலும் அவரை பார்த்து நலம் விசாரிப்பது வழக்கம். ஒருமுறை அவர் சென்னை வந்திருக்கும் போது
அந்த நபர் கடந்த ஒருவாராமாக வேலைக்கு வரவில்லை என அந்த டீக்கடை ஓனர் சொல்ல அவர் மனம் பதறி
மீண்டும் அவர் திருட்டு தொழிலில் இரங்கிவிட்டாரோ என நினைத்து அவரது சொந்த ஊரான வேலூருக்கு சொன்று அவர் வீட்டை
விசாரித்து அவரது இருப்பிடம் சென்றதும் சீர்காழியை கண்ட அந்த மனிதர் மிகவும் மனம் நொகிழ்ந்து கண்கலங்கி விட்டார்
ஐயா என்னை காணவா இவ்வளவு தூரம் வந்தீர்கள் என்று கேட்க இல்லையப்ப எங்கே மீண்டும் நீதிருட்டு தொழிலுக்கு
போய்விட்டாயோ நான் உன் மீது வைத்த நம்பிக்கை பொய்த்துவிட்டதோ என நினைத்துவிட்டேன் என்றார். அதற்க்கு அவர்
இல்லை ஐயா என்னுடைய முதல் குழ்ந்தைக்கு மூளைக்காய்ச்சல் வந்து விட்டது. அதற்க்கு மருத்துவம் பார்க்க வேண்டும்
டீக்கடை முதலாளியிடம் செலவுக்கு பணம் கேட்டால் கொடுக்க மறுத்தார், அதனால் தான் சொல்லாமல் வந்து விட்டேன்.
குழந்தைக்கு மருத்துவ செலவிற்க்கு பனம் போதவில்லை, எனக்கு கவலையாக இருக்கிறது, எனது குழந்தையும் என்னை
போல் ஆகிவிடுவானோ என சொன்னதும் சீர்காழி அவர்கள் கவலைபடாதே முருகன் இருக்கிறான்,
என்று சொல்லி அந்த குழந்தைக்கு திருச்சி விழுப்புரம் அரசு மருத்துவமனையில் வைத்து அனைத்து மருத்துவ செலவையும்
தானே ஏற்றுக்கொண்டார்.
அந்த அவருக்கும் திருச்சியிலேயே அவரது மைத்துனருக்கு சொந்தமான ஜவுளிக்கடையில்  வேலையில் அமர்த்தினார்
மற்றவர்களுகெல்லாம் இது பொதுவான மனிதாபிமான செயலாக தெரியலாம், ஆனால் அன்று அவர் கவனித்த அந்த குழந்தை
இன்று I A S அதிகாரியாக தமிழக கல்வித்துரையின் இயக்குனராக வந்திருக்கிறார் என்றால், அந்த மனிதாபிமானம்
தான் காரணம் அதைவிட அந்த அதிகாரி தனக்கு பணி நியமனம் கிடைத்த உடன் சீர்காழியில் உள்ள அவரின் வீட்டிற்க்கு
சென்றார், ஆனால் சீர்காழி அவர்கள் மறைந்து 2இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. ஆயினும் அவரது மனைவியாருக்கு
மரியாதை செலுத்த சென்ற அவர் தன் வந்த காரணத்தை சொன்னதும், அப்படியாப்பா இதைபற்றி அவர் கடைசி வரை
எங்களிடம் சொன்னதே இல்லை என்ற பதில் தான் வந்தது, இருப்பினும் அன்னாரது திருவுறுவ படத்திற்க்கு
அஞ்சலி செலுத்திவிட்டு வந்தார். அதாவது இவ்வளவு பெரிய உதவி தனது குடும்ப உருப்பினர்களுக்கு கூட தெரியாமல்
செய்த்து அவரின் நற்குனங்களுக்கு சான்றாகும், வரும் தலைமுரக்கும் நல்ல உதாரனத்தை தந்து விட்டு மறைந்தார்
அந்த மாமனிதர்
அவரின் பாடலை கேட்கும் போதெல்லாம் அது உதட்டில் மட்டும் பாடிய பாடல் அல்ல, உள்ளத்திலிருந்து வரும் பாடல் என்பது
தெளிவாகிறது.
"தாயாகிஅன்பு பாலுட்டி வளர்த்தாய்,
தந்தையாகி எந்தன் சிந்தை தெளிர்த்தாய்,
குருவாகி எனக்கு நல்லிசைதந்தாய், ஞானகுருவாகி எனக்கு நல்லிசை தந்தாய்
திருவே நீஎன்றும் என் உள்ளம் நிறைந்தாய்,"

jpchandrababu.jpg

மனிதருள் மகான்கள் (4)
உனக்காக எல்லாம் உனக்காக இந்த உடலில் உயிரும் ஒட்டியிருப்பதும் உனக்காக
எதுக்காக கண்ணே எதுக்காக நீயும் இப்படி அப்படி தள்ளி யிருப்பது எதுக்காக
இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் இந்த நடிகரின் துள்ளும் நடிப்பை பார்த்ததும்,
சிரிக்கும் அந்த
சந்திரபாபு இந்த மனிதரை ஏன் மகான் என்கிறேன் இவர் என்ன செய்தார் மகானத்துவதிற்க்கு என்று கேட்பவர்கள்
முதலில் அவருடைய வாழ்க்கையை கொஞ்சம் திரும்பி பார்த்தால் தெரியும். 
கல்லூரி மாணவரான அவர் தன் கல்லூரி படிப்பு முடிந்ததும். திரைத்துறையில்  ஆர்வம் கொண்டு முதலில் நாடகங்களில்
நடிக்க ஆரம்பித்தவர். திரைப்படத்துரையில் சாதிக்கும் பொருட்டு சென்னை வந்தவரை எப்பொழுதும் போல் சென்னை
முதலில் தன்னுடைய இருகரம் நீட்டி வரவேற்க்க வில்லை வந்த அன்றே முகம் தெரியா நபரிடம் ஏமாற்றப்பட்டார்.
ஏமாற்றத்தின் காரணமாக மனமுடைந்த அவர் தனக்கு திரைத்துறையும் தன் பங்கிற்க்கு அவரை மனம் வேதனை பட வைக்க
அவர் தற்க்கொலைக்கு முயன்றார். முடிவில் சென்னை காவல்த்துறை அவரை தற்க்கொலைக்கு முயன்ற குற்றத்தால்
அவரை கைது செய்து நீதிமன்றத்தில் கொண்டு சென்று விசாரனை கூண்டில் ஏற்றியது .
அங்கே நீதிபதி அவர்கள் சந்திர பாபுவிடம் தம்பி ஏன்  நீ தற்கொலை செய்ய முயர்ச்சித்தாய் , அது தவறல்லவா என்று
சொன்னதும் அதற்க்கு சந்திர பாபுவின் பதிலோ ஐயா தீயில் எரியும் உயிர்களுக்கு மட்டுமேதெரியும்  எரியும் உடலில்
ஏற்ப்படும் வலி , தூரமிருப்பவர்கள் வேடிக்கை பார்க்க மட்டும் தான் பார்க்க முடியும் .
அதுபோல் எனது வேதனை எனக்குதான் தெரியும் சட்டங்களும் , திட்டங்களுக்கும் ஒரு மனிதனின் வேதனைதனை
எங்கே உணரும் என்று உணர்ச்சிகரமாக சொல்லி தனது தரப்பு வாதத்தை வழக்கறிஞர் இல்லாமலேயே வாதாடியவர் தனக்கு நீதிபதி
மன்னிப்பு கொடுத்து , இனியும் இது போன்று செய்யாதே , என அன்பு கட்டளையிட்டு அவரைவிடுவித்தார்.
இன்று நாம் கானும் திரைப்படங்களில் சிறிய சிறிய வேடங்களில் வந்து போகும் நகைச்சுவை நடிகர்களுக்கெல்லாம்
அவர் மகானல்ல கடவுள். ஆமாம் அவர் திரைத்துறைக்கு வருவதற்க்கு முன்பு நாடகங்களில் ஒரு பபூன் வருவது போல்
படம் முழுவதிலும் ஒரு நகைச்சுவை நடிகர் வந்து செல்வார் .
ஆனால் சந்திர பாபு திரைத்துறைக்கு வந்த பிறகு நம்மை போல் ஏன் பல நல்ல திரம் படைத்த நகைச்சுவை நடிகர்கள்
தங்கள் திறனை பாழக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் தான் நடிக்கும் படங்களிலும் சரி தனக்கு தெரிந்த
தயாரிப்பாளர்களிடமும் சரி ,தன்னிடம் வரும் புதுமுகங்களை அறிமுகப்படுத்தி அவர்களுக்கும் வாய்ப்பளித்து
பல புதிய நகைச்சுவை நடிகர்களின் வீட்டில் வருமையை தீர்த்த நாயகன்.
மறைந்த சுருளிராஜன், தேங்காய் ஸ்ரீனிவாசன் மற்றும் தற்போதும் சந்திர பாபுவின் நன்றிக்கடனுக்கு சாட்சியாக
நிற்க்கும் திரு லூஸ் மோகன் , குமரிமுத்து , திருச்சி செல்வன்( கரகாட்டக்காரன்) என பல முகங்கள் .
மறைந்த கலைவாணர் அவர்கள் சிரிப்புடன் சிந்தனையை சொன்னாலும் அவரால் மூட நம்பிக்கை மற்றும் பகுத்தறிவு
கொள்கைகளை அவ்வளவாக திரைக்கு கொண்டுவர முடியவில்லை ஏனேன்றால் அன்று திரைத்துறையில் மூட நம்பிக்கை
அவ்வளவு ஆழமாக வூடுருவீருந்தது, ஒரு பிரபல பழைய தயாரிப்பாளர் , தனது வீட்டில் பல்லி ஒளி எழுப்பினால் மட்டுமே
படப்பிடிப்பிற்க்கு புரப்படுவாராம் அந்த அளவிற்க்கு மூடநம்பிக்கையில் மூழ்கி இருந்த சமயத்தில் கலைவாணர் அவர்கள்
பகுத்தறிவை வளர்க்கும் எண்ணம் இருந்தாலும் அவரால் கொஞ்சம் அடக்கித்தான் வாசிக்க முடிந்தது.
ஆனால் சந்திரபாவுவோ துணிந்தவர் மூட நம்பிக்கைகளை மட்டுமில்லாமல் தான் சார்ந்தவர்கள்  ஈடுபாடு கொண்டிருந்த
அரசியலையும் விட்டு வைக்கவில்லை. பொதுவாக அவராகவே பாடல் எழுதி அவராகவே பாடிவிடுவார், ராகம் கூட அவரே
போட்டுவிடுவார். ஆரம்பநாட்களில் அவரின் பாடல்கள் புகழ் பெற்று விடவே அவரின் பாடலை முதலீடு செய்யும் தயரிப்பாளர்கள்
ஏற்றுக்கொள்ள மற்றவரேல்லாம் வாய்க்குள் முனங்கிக்கொண்டே அமைதிகாக்க வேண்டிய தாயிற்று.
காங்கிரஸின் ஆட்சி மாறி திராவிட கட்சிகள் வளர்ந்த காலத்தில் அவரி பாடலான
" சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுசன் பெரிய மனுசன் செயல பார்த்து சிரிப்பு வருது'
என்ற பாடலில் வரும்
மேடையேறி பேசும் போது ஆறுபோல பேச்சு
கிழே இறங்கி போகும் பொழுது சொன்னதெல்லாம் போச்சு,
 என்று அரசியல் வாதிகளையும்
நல்ல கணக்க மாத்தி கள்ள கணக்க எழுது
நல்ல நேரம் பார்த்து நன்பரை ஏமாத்து
என்று தன்னுடன் இருந்து கொண்டே நம்மை ஏமற்றும் நன்பர்களை பற்றியும் பாடலின் வாயிலாக எடுத்துச் சொன்னவர்.
அவரின் வெள்ளை மனதை பலர் தன்னுடைய சொந்த நலன்களுக்காக பயன்படுத்தி அவரை எமாற்றி பிழைத்தனர்.
ஒரு முறை ஒரு படப்பிடிப்பின் போது தன்னுடம் வேலைபார்க்கும் ஒரு நபர் தன்னுடைய அன்னையாருக்கு உடல் நிலை சரியில்லை
எனக்கு கொஞ்சம் பணமிருந்தால் கொடுத்து உதவுங்கள் என்று சொல்ல வரும் தயங்காமல் கையில் உள்ள பணத்தை
கொடுக்க அன்று மாலை அந்த நபர் குடித்து விட்டு ஊர் சுற்றுவதை கண்டு வருந்தினார்.
இப்படி பலருக்கு அவன் பொய் சொல்கிறான் என்று தெரிந்தும் அவர் தன்னிடம் கேட்பவர்களுக்கு இல்லை என்ற சொல்லை
தன் உயிறுள்ள வரை சொன்னதில்லை.
அவருக்கு மதுரையைசேர்ந்த ஒரு ஆங்கிலோ இந்திய பெண்ணை பார்த்து மனமுடித்து வைத்தார்கள் . ஆனால் காலம் அவரை
பொருமையுடன் விட்டு வைக்கவில்லை. குடிப்பழக்கத்தினால் உடல் நிலை மோசமாகி மருத்துவமனையில் இருந்த போது கூட
தன் மனைவியிடம் எம்மா கொஞ்சம் பணம்மிருந்தா கொடு , பாவம் என்னை பார்க்க வரும் நபர்கள் கண்டிப்பாக சந்திர பாபுவிடம்
பணம் கிடைக்கும் என்று தான் வருவாங்கே , அவிங்ககிட்ட நான் எதும் இல்லைன்னு சொல்ல முடியாது. என்ன செய்ய நான்
பழகிய கூட்டம் அப்படி என்று சொல்லி வருத்தப்பட்டார். சில வருடங்களுக்கு முன்பு இறந்த ஒரு சிரிப்பு நடிகர் , கடைசி நேரத்தில்
கூட சந்திரபாபு தனது மனைவியிடம் சொல்லியதைபோல் மருத்துவமனையில் இருக்கிறார் என்று கூட பார்க்காமல் பணம்
கேட்டு வாங்கி சென்றார் . சில நாட்கள் உடல் நலமில்லாமல் இருந்த சந்திரபாபு, நாடோடி மன்னனில் குழந்தையை கூட சிரிக்க வைத்த
சந்திரபாபு, சிவாஜியுடன் இரண்டு வேடமிட்டு நடித்து , அழுமூஞ்சிகளையும் , சிடு மூஞ்களையும் மீண்டும் மீண்டும் பார்த்து சிரிக்கத்தூண்டிய
அந்த சந்திர பாபு,
ஒன்னுமே புரியலே உலகத்திலே , ஒன்னுமே புரியலே உலகத்திலே
என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது, ஒன்னுமே புரியலே உலகத்திலே
என்று பாடி தனது குரல்வளத்தால் மனதை தொடும் பாடலும் தர முடியும் என நிறுபித்து
பிறக்கும் போதும் அழுகின்றார் இறக்கும் போதும் அழுகிண்றான்
ஒருநாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மனிடனே
என்று நம்மை எல்லாம் கண்கலங்க ம்விட்டு விட்டு
அவர் மட்டும் சந்தோம் கல்லரை தோட்டத்தின் தெற்க்கு மூலையில் ஒரு ஆங்கிலேய  மத போதகரின் கல்லரைக்கு அருகில் ஆழ்ந்த மீளா உறக்கத்தில்
ஆழ்ந்துவிட்டார்.
அவர் கண்டிப்பாக மேலோட்டமாக பார்க்கும் நமகெல்லாம் ஒரு மறைந்த சிரிப்பு நடிகராக இருக்கலாம் ஆனால் இன்றும் கரகாட்டக்காரன்
போண்ற பல படங்களில் சிரிய சிரிய வேடங்களில் நடித்து தனது குடும்பத்தை காப்பாற்றும் ஒரு சீன் நடிகர்களுக்கு அவர் மகான் மட்டுமல்ல
கடவுளும் தான்.
கடைசியாக உங்களிடம் சரவணாவின் ஒரு கேள்வி இவரை நான் மாகன் வரிசையில் சேர்த்தது.  சரியா தவறா
 
கற்க கசடற கற்றபின்
வள்ளுவர் தாத்த கல்வியை பற்றி சொல்லும் போது கற்க என்று சொன்னாரே தவிர எதுவரை என்று சொன்னாரா,இன்றும் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மானவர்கள் தங்களது எதிர்காலம் பற்றி சிந்தனையுடன் படிப்பது குறிப்பிட்ட பருவம் வரும் வரை தான் அதாவது சிலர் 6ஆம் வகுப்பிற்க்கு பிறகு கருத்து கொண்டு படிப்பது, உண்டு சிலர், 12 ஆம் வகுபிற்க்கு பிறகு வழிக்கு வருவதும் உண்டு.
 
 ஆனால் சிரமேற்க்கொண்டு படிப்பவர் தான் பெற்ற கல்வியால் மற்றவருக்கு ஏதாவது செய்ய முடியுமா என்று எண்ணுபவர் எத்தனை பேர்.
 
இன்று இரண்டு நபர்களை நாம் கானலாம்
 
 
இணையத்தின் மூலம் நான் பல தங்கமான நன்பர்களை பெற்றிருக்கிறேன் அதில் இருவரை பற்றி பார்க்கலாம்
ஒருவர் மத்திய வணத்துறையின் கீழ் வரும் மண்ணியல் ஆய்வுத்துறையின் துணைஇயக்குனர் அவரது பெரிய மத்திய அரசு பதவியின் காரணமாக அவரது பெயரை வெளியிடுவது மரபகாது.
 
மற்றோருவர் திரு ஆனந் பொன்னுசாமி  ஆஸ்திரேலியவில் பிரபல் நிறுவனத்தில் பணிபுரிபவர்.
 
கற்க கசடற கற்றபின் தர்மபுரிமாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய வரட்சியான கிராமத்தில் பிறந்தவர்
அவரது பெற்றோர்கள் இருவரும் செங்கல் சூளை கூலித்தொழிலாளர்கள்.
எல்லா குழந்தைகளை போல் இவரும் பள்ளிசெல்லும் பருவம் வந்ததும் கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் படிக்கிறார் விளையாட்டாக வருடங்கள் ஓடிவிடுகிரது. 10 ஆம் வகுப்பு வருகிரது இரண்டு பாடங்களில் கணிதம்(அது நமக்கும் வராதுங்க) ஆங்கிலம் இரண்டு பாடங்களிலும் தேர்வு பெற தவறிவிட பேப்பரில் இவரது நம்பர் வரவில்லை. இதற்க்காக கவலை படாமல் சும்மா சுற்ற ஆரம்பித்தவர், தனது தாய் தந்தை சென்ற செங்க‌ல் சூளையில் வேலைக்கு செல்ல‌ அங்கு தான் இதுநாள் வ‌ரை த‌னது பெற்றோர்க‌ள் ந‌ம‌க்காக‌ எவ்வ‌ள‌வு பாடுப‌டுகிறார்க‌ள் என்ப‌தை உண‌ர்ந்தார்,
இத‌ற்க்கு முடிவு க‌ட்ட‌ வேண்டும் என்ற‌ என்ன‌த்துட‌ன் த‌ன‌து வ‌குப்பு ஆசிரிய‌ரின் அறிஉறைப்ப‌டி மீண்டும் த‌ன‌து க‌ல்வியை தொட‌ர்கிறார்.
இரண்டு பாட‌ங்க‌ளிலும் தேற்ச்சி பெற்ற‌ பின் மீண்டும் அறிவிய‌ல் பாட‌ப்பிறிவில் உய‌ர்க‌ல்வி 12 வ‌குப்பில் தேர்ச்சி பெற்ற‌வுட‌ன் அர‌சு க‌லைகல்லூரியில் இள‌ங்க‌லை இய‌ற்பிய‌ல் , பிற‌கு சென்னை ப‌ல்க‌லைக‌ழ‌க‌த்தில் முதுக‌லை தேர்சி பெற்ற‌ பிற‌கு மேற்ப்ப‌டிப்பு ப‌டிக்க‌ டெல்லி சென்று ம‌ண்ணிய‌ல் துரையில் ஆராய்ச்சி மான‌வ‌னாக‌ ந‌ல்ல முறையில் தேர்ச்சி ப‌ல‌ன் ம‌த்திய‌ அர‌சாங்க‌த்தின் வ‌ன‌த்துரையில் ம‌ண்ணிய‌ல் பிரிவில் வேலை கிடைக்க‌ அங்கும் த‌ன‌து ப‌ணிசிற‌ப்பாக‌ செய்து ம‌ஹார‌ஸ்டிரா, ம‌த்திய‌ பிர‌தெச‌ம் ம‌ற்றும் குச‌ராத் மாநில‌த்தின் ம‌ண்ணிய‌ல் பிரிவின் துணை இய‌க்குன‌ராக‌ ப‌த‌வியேற்ற‌ம் பெற்று இன்று க்ர்ச‌த் என்னும் மும்பைக்கு அருகில் உள்ள‌ ந‌க‌ர‌த்தில் ம‌ண்ணிய‌ல் துரையின் த‌லைமை அலுவ‌ல‌க‌த்தில் ப‌ணிபுரிந்து வ‌ரும் இவ‌ர் அங்குள்ள‌ வ‌ன‌வாழ் ம‌க்க‌ளின் குழ‌ந்தைக‌ளுக்காக‌ அவ‌ர்க‌ளின் க‌ல்வித்திற‌ன் வ‌ள‌ம் ப‌ட‌ தன்னால் ஆன‌ உத‌விக‌ள் செய்து வ‌ந்தார். ஆனால் என்ன‌ செய்ய‌ ஒருசில‌ அமைப்புக‌ள் அவ‌ர்குழ‌ந்தைகளுக்கு ம‌ற‌மாற்ற‌ம் செய்விக்கிறார் என்ற‌ கார‌ன‌த்தை காட்டி அவ‌ர‌து ந‌ற்ப்ப‌னிக‌ளுக்கு த‌டைவிதிக்க ப‌ல‌ கார‌ன‌ங்க‌ளால் அவ‌ருக்கு இடைஞ்ச‌ல் கொடுக்க‌ அவ‌ர் த‌ற்போழுது வேறு மாநில‌த்திற்க்கு மாற்ற‌ல் வேண்டு நிற்க்கும் நிலை,
நான் அவ‌ரிட‌ம் சார் வெளிநாடு போய் வேலை பார்க்க‌லாமே என்றேன் அத‌ற்க்கு அவ‌ர் ச‌ர‌வ‌ணா என‌க்கு என்ன‌வோ ம‌ன‌ம் வ‌ர‌ம‌றுக்கிற‌து.
வ‌ன‌ப்ப‌குதியில் ப‌ல‌ குழ‌ந்தைக‌ளை பார்க்கும் போது இவ‌ர்க‌ளுக்கு க‌ல்வி கிடைக்க‌ ஆவ‌ன‌ செய்தால் நாம் ப‌ல‌ ந‌ல்ல‌ அதிகாரிக‌ள், பொரியிய‌ல் வ‌ல்லுன‌ர்க‌ள், ம‌ருத்துவ‌ர்க‌ளை உருவாக்க‌லாமே என்றார்.
என‌க்கு உண்மையில் பெருமையாக‌ உள்ள‌து. ந‌ம‌து த‌மிழ‌ர் ஒருவ‌ர் க‌டைநிலையில் இருந்து இவ்வ‌ள‌வு உய‌ர்ந்த‌ ப‌த‌விக்கு வ‌ந்தும் பிற‌ரைப‌ற்றி சிந்திக்கும் இவ‌ரைப்போல் ப‌டித்த‌ த‌மிழ் இளைஞர்க‌ள் அனைவ‌ருக்கும் இருந்தால் ஒரு அழ‌கான‌ வ‌ள‌மான‌ த‌மிழ் நாட்டை கான‌லாமே என்ற‌ ஏக்க‌ம்( இன்னும் இவ‌ர் ஊர் சென்றால் த‌ன‌து தாய் த‌ந்தைய‌ருக்கு உத‌வி செய்யும் ப‌ழ‌க்க‌ம் இவ‌ர‌து காய்த்துபோன‌ கைக‌ளை க‌ண்டாலே சொல்லும்) நான் இவ‌ரிட‌ம் சார் அம்மா அப்பாவை உட‌ன் வைத்துக்கோள்ள‌மே என்றால் அவ‌ரோ ச‌ர‌வ‌ணா நானும் ப‌ல‌ முறை அழைத்து பார்த்துவிட்டேன் அப்பா வேலையை விட‌ மாட்டேன் கிறார் அம்மாவோ அவ‌ருக்கு துனையான‌ நான் இல்லாவிட்டால் யார‌ப்பா, நீ ச‌ம்பாதிக்கிறா வேலையாட்க‌ள் எல்லாம் இருக்கிறார்க‌ள். உங்க‌ அப்பாவிற்க்கு என்னை விட்டால் யார் என்கிறார்க‌ள்.
இன்னும் அவ‌ர் த‌ன‌து ம‌ண்ணிய‌ல் துரையில் ஆராய்ச்சி முனைவ‌ர் ப‌ட்ட‌த்திற்க்காக‌ பூனா ப‌ல்க‌ழை க‌ழ‌க‌த்தில் ப‌யின்று கொண்டிருக்கிறார்.
 
க‌ற்ற‌ பின் நிற்க்க‌ அத‌ற்க்கு த‌க‌
 
திரு ஆன‌ந்த‌ பொன்னுசாமி
ஒரு சாதார‌ன‌ தொழிலாளிக்கு ம‌க‌வாக‌ திருச்சி கொள்ளிம‌லை சார‌லில் உள்ள‌ ஒரு கிராம‌த்தில் பிற‌ந்து க‌ல்விக‌ற்று க‌ண‌ணித்துறையில் உய‌ர்க‌ல்விக‌ற்று ஆர‌ம்ப‌ கால‌த்தில் சொற்ப்ப‌ ச‌ம்ப‌ள‌த்தில் ப‌ணிபுரிந்து இன்று ஆஸ்திரேலியாவில் ஒரு பிர‌ப‌ல‌ நிறுவ‌ன‌த்தில் ப‌ணிபுரிந்து வ‌ரும் இவ‌ர் தான் ம‌ட்டும‌ல்லாது ச‌முதாய‌ நோக்கோடு ஒரு டிரேஸ்ட் ஒன்றை திரு இராதாகிருஸ்ன‌ன் அவ‌ர்க‌ளின் பெய‌ரில் ஆர‌ம்பித்து அத‌ன் வாயிலாக‌ ப‌ல‌ருக்கு க‌ல்விப‌ணி அளிப்ப‌து உண்மையில் நாம் பெருமித‌ம் கொள்ள‌வைக்கும் காரிய‌ம்,
 
இன்று ப‌ல‌ர் ப‌டிக்கின்ற‌ன‌ர், ப‌த‌விபெற்ற‌ பிற‌கு ப‌ல‌ அய‌ல்நாடுக‌ளில் ப‌ணிபுரிந்து குடும்ப‌ம் குடித்த‌ன‌ம் என்று அம‌ர்ந்துவிடுகிண்ற‌ன‌ர். அவ‌ர்க‌ளை ப‌ற்றி குறையொன்றும் சொல்ல‌வில்லை ஆனால் திரு ச‌க்காரியா, ஆன‌ந் போன்ற‌வ‌ர்க‌ளுக்கு ம‌ட்டும் எழும் அந்த‌ ஆசைக‌ள் ஏன் எல்லொருக்குமெழ‌வில்லை என்ப‌து ந‌மகெல்லாம் தொன்றும் ஒரு எண்ண‌ம்
 
 
 
 

வேட்டுக்கிளியல்ல தமிழன், தமிழினம் ஒரு வேற்றிபுலி

"என்று தனியும் எங்களின்    சுதந்திர தாகம்"

உங்களின் கருத்துக்கள் எனக்கு மேலும் இந்த படைப்புக்கு வழி செய்யும் உங்கள் விமர்சனங்களை எழுதுங்கள் அனைவரின் பார்வைக்கு உங்களுக்கான பகுதியில் வைக்கப்படும்

தூக்கன்னாங் குருவிகள் கூட தன் உறவிற்க்காக அழகான ஐம்பது  கூடுகள் கட்டும் நாம் நமது மனித நேய உறவிற்க்காக என்ன செய்தோம்
எத்தனை கலங்கிய கண்களுக்கு ஆறுதலாய் இருந்தீர்கள்,
எத்தனை பசித்த வயிற்றிற்க்கு உணவிட்டுள்ளிர்கள்,
 

GUESTBOOK click

ஸ்வேதா மேகம் சிந்தும் ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தேடுகிறேன்