Sangee Muzangu

ungalukkaaga

Home
Tibet dalai lama
ONRUPATTAAL UNTU VAAZU
Speak With Love
TuuRamagum UravukaL
For International Friends
KALAM
MUMBAI LOCAL
Unity or Disarray
Marutuva parvai
vanakkam nanparkalee
Teacher's Day
Ennaipatrri
tamil inaiya ezuththukal
Aanmeegapaarvai
ungal pathiugal
thamizukum oru vaazththu
India 60 years

 
மண்ணில் பிறந்த நாம் மண்ணோடு போகப்பொகிறோம், அதற்க்குள், நமது நினைவை வலாற்றில் பதித்து விட்டுச் செல்லலாம், நல்லவற்றை பேசுவோம், நல்லவற்றை காண்போம், நல்லவற்றை சிந்திப்போம்
நல்ல கனவுகள் நூறு காண்போம் , அதில் ஆறாவது பலிக்காதா
ச  ர  வ  ணா

உங்களின் கருத்துக்களை எனக்கு அனுப்புங்கள் உங்களின் எண்ணங்களை எழுதுங்கள்  உலகத்தின் பார்வைக்காக
அன்புடன் ச ர வ ணா
 

 

மாணவர்களே.. முதல் மதிப்பெண் பெறுவது எளிது..
[red[வெற்றிச்சாவி!

நூற்றுக்கு நூறு வாங்குவது முடிகிற காரியமா? ஒரே ஒரு கேள்விக்கு, பாதி பதிலை எழுதாமல் விட்டுவிட்டால்கூட போச்சே... தவிர, நான் ஒரு தடவைகூட 100/100 வாங்கினதில்லையே’ என்று யோசிக்காதீர்கள்.


நம்பிக்கை நிச்சயம் பலனளிக்கும்.

‘‘அப்படியானால் இதுவரை எனக்கு 100/100 கிடைக்காததற்கு காரணம் நம்பிக்கை இல்லாதது மட்டும்தானா?’’ என்கிறீர்களா?

ஒரு கதை... தன் குடிசைக்கு வெளியில், தெருவில் ஒரு பாட்டி எதையோ தேடிக் கொண்டிருந்தாள்.

அங்கே வந்த ஓர் இளைஞன் ‘‘என்ன தேடறீங்க?’’ என்றான்.

‘‘என் பெட்டிச் சாவியைத் தொலைச்சுட்டேன். அதான்...’’ ‘‘பாட்டி, சாவியை எங்கே போட்டீங்க? தெருவுக்கு இந்தப் பக்கமா, அந்தப் பக்கத்திலேயா?’’ என்றான் இளைஞன்.

‘‘வீட்டுல இருக்கிற அலமாரியிலேதான் எங்கேயோ அந்தச் சாவியை வெச்சேன்’’ என்றாள் பாட்டி.

‘‘தொலைச்ச இடத்துல தேடாம இங்கே ஏன் தேடறீங்க?’’

‘‘வீடு இருட்டா இருக்கு. தெருவிலேதானே வெளிச்சமா இருக்கு. அதான் வெளிச்சத்துல தேடறேன்’’ என்றாள் அந்தக் கிழவி!

செய்ய வேண்டியதைச் செய்யாமல், தொடர்பில்லாத வேறு முயற்சிகளைச் செய்துவிட்டு, ‘எனக்கு 100/100 கிடைக்காது’ என்று சொல்வதும் இதைப் போன்றதுதான்.


வாருங்கள், சரியான இடத்தில் தேடுவோம். நிச்சயம் கிடைக்கும் 100/100 பெறுவதற்கான வெற்றிச் சாவி.

அதற்கு உதவுவதுதான் இந்தக் கையேடு. இதில் பரிட்சையை எதிர்கொள்ளத் தேவையான குறிப்புகள் உள்ளன. பொறுமையாகப் படியுங்கள்.., ஒரு ‘பிளானர்’ கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை உபயோகப்படுத்துங்கள். கடைசிப் பக்கத்தில், இருக்கும் மாதப் படிப்புத் திட்ட பிளானரும் உங்களுக்கு உதவும். ஒரு குட்டி அறிவிப்பும் தரப்பட்டுள்ளது. அதை வெட்டி எடுத்து நீங்கள் படிக்கும் இடத்துக்கு அருகில் ஒட்டி வையுங்கள். ஓரளவு தொந்தரவைத் தவிர்க்கலாம்!

பரிட்சை என்பது பூதமல்ல, நமக்கு சவால் விடும் விளையாட்டுத் தோழன். அந்தப் பரிட்சையோடு சரியான முறையில் விளையாடி, 100/100 பெற்று ஜெயிக்க வாழ்த்துக்கள்!

1. மூளையைத் தீட்டுங்கள், திட்டமும் தீட்டுங்கள்

கச்சிதமாகத் திட்டமிடுவது பாதி வெற்றி பெற்றதற்குச் சமம்.

என்றென்று எவ்வளவு பாடம் படிக்க வேண்டும் என்பதை நன்கு திட்டமிட வேண்டும். மாலையில் ஐந்து மணி நேரம் படிப்பதாக இருந்தால் ஒவ்வொரு மணிநேரமும் எவ்வளவு படிப்பதாக இருக்கிறீர்கள்,

 
Mar 10(7 days ago)
எதைப் படிக்கப்போகிறீர்கள் என்பதைக்கூடத் திட்டமிடலாம்.

திட்டமிடுவது என்பது மிகவும் முக்கியமான கட்டம். அளவுக்கு மீறிய திணிப்பும் அதில் இருக்கக்கூடாது (ஒரு மணி நேரத்தில் மூன்று பாடங்கள் படித்து முடித்தே ஆக வேண்டும் என்பதுபோல). இதற்கு ஒரு முக்கிய ஆலோசனை, ‘முன்னதாகவே திட்டமிடுங்கள்’ என்பதுதான். அதாவது தேர்வுக்கு மிக நெருக்கத்தில் திட்டமிடாமல் அதிக நாட்கள் இருக்கும்போதே திட்டம் தீட்ட வேண்டும்.

2. சவால் விடுங்கள்

திட்டமிடத் தொடங்கும் முன்பாகவே நீங்கள் உயர்வாகக் கருதும் ஒரு சிலரிடம் வெளிப்படையாகவே சவால் விடுங்கள்... ‘இந்தத் தடவை பரிட்சையிலே 100/100 வாங்கியே தீருவேன்’ என்று! மற்ற ஊக்க சக்திகளோடு ‘‘சவால் விட்டுவிட்டோமே, அதை நிறைவேற்றியே ஆகவேண்டும்’’ என்கிற எண்ணமும் சேர்ந்து நம் லட்சியத்தை வேகப்படுத்தும்.


3. ஆசையுடன் படியுங்கள்.


கடும் வெயிலில் ஒரு சின்ன பையைத் தூக்கிக்கொண்டு நடந்து கொண்டிருந்தார் ஒருவர். அந்தப் பை அவருக்கு மிகவும் கனமாக இருந்தது.

அவருக்கு பக்கத்தில் ஒரு பத்து வயது சிறுமி நடந்து வந்துகொண்டிருந்தாள். நான்கு வயது சிறுவனை இடுப்பில் சுமந்துகொண்டிருந்தாள். அந்த சிறுவன் ஆரோக்கியமாகவே காட்சியளித்தான்.


பையைத் தூக்கி வந்தவருக்கு ஆச்சரியம்.அந்தச் சிறுமியிடம் கேட்டார்: ‘‘ஏனம்மா, இந்தப் பையனைத் தூக்கிக்கொண்டு வருவது உனக்குக் கஷ்டமாக இல்லையா?’’

இப்போது அந்த சிறுமியின் முகத்தில் வியப்பு. ‘‘அதெப்படி கஷ்டமாக இருக்கும்? இவன் என் தம்பி’’ என்றபடி அந்தக் குழந்தைக்கு ஒரு முத்தம் கொடுத்தாள்.

அறிவியலின்படி பை அதிகமாக கனக்கும் என்றோ, தம்பி போன்ற நெருங்கிய உறவினர்கள் குறைவாக கனப்பார்கள் என்றோ கிடையாது. ஆனால், அந்த எடையை நாம் உணர்வது மனதையும் பொறுத்த விஷயம்.

இன்னும் பத்து நிமிடங்களில் வீடு இடிந்து விழப்போகிறது... அதற்குள் முடிந்தவரை உங்களது உடைமைகளை எடுத்துக்கொண்டு வெளியேறலாம் என்றால் நிறைய கனமான பொருட்களையும் வெகுவேகமாக எடுத்துக்கொண்டு வெளியேறுவீர்கள். காரணம், அந்தப் பொருட்கள் மீது உங்களுக்குள்ள பற்று.


இதெல்லாம் இப்போது எதற்கு என்கிறீர்களா? பாடங்களை நீங்கள் விரும்பிப் படிக்கவேண்டும் என்பதற்காகத்தான். அப்போதுதான் அவை மனதில் பதியும் என்பதோடு அதை ஒரு சிரமமாகவும் நினைக்கமாட்டீர்கள்.
 
Mar 10(7 days ago)
இனி உங்களைப் பொறுத்தவரை ‘இது எனக்கு எப்போதுமே பிடித்த சப்ஜெக்ட்’, ‘இது எனக்கு இனி பிடிக்கபோகும் சப்ஜெக்ட்’ ஆகிய இரண்டே பிரிவுகள்தான்.


4. மேலே இருக்கட்டும் பார்வை.



ஒரு வகுப்பில் ‘‘ஓர் ஏழைக் குடும்பத்தின் நிலையைப் பற்றி ஆளுக்கு ஒரு பத்தி எழுதுங்கள்’’ என்றார் ஆசிரியர்.

லட்சாதிபதியின் மகன் ஒருவன் மிகவும் யோசித்து இப்படி எழுதினான்... ‘பாவம், சிவராமனின் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. அவர்கள் வீட்டில் ஒரே ஒரு காஸ் சிலிண்டர்தான் இருந்தது. அவர்கள் வீட்டில் உள்ள நான்கு அறைகளில் ஒன்றுக்கு ஏ.ஸி. வசதி இல்லை. அவர்கள் வீட்டு ஃப்ரிஜ்கூட ஒரு மாதமாக வேலை செய்யவில்லை. அதைச் சரி செய்யக்கூட அவர்களிடம் காசு இல்லை. அவர்கள் வீட்டு காருக்கு பெட்ரோல் போட்டுக்கொள்ளக்கூடப் போதிய பணம் இல்லை...’ என்ன செய்ய... அந்தச் சிறுவனுக்கு இதுதான் ரொம்பவும் ஏழ்மை என்று மனதில் பட்டிருக்கிறது.

உங்கள் பெற்றோர் எப்போதாவது இப்படிச் சொல்லியிருப்பார்கள்... ‘‘இல்லாததையே நினைச்சி வருத்தப்படாதே. நமக்கிருக்கிற வசதிகூட நிறையப் பேருக்கு இல்லை. அதை நினைத்துத் திருப்திப்படு.’’ மற்ற விஷயங்களில் இது சரியாக இருக்கலாம். ஆனால், மதிப்பெண்கள் பெறும் விஷயத்தில் இப்படி இருக்கக்கூடாது.

‘நம்மைவிட வகுப்பில் பதினைந்து பேர் கம்மி மார்க்தானே வாங்கியிருக்கிறார்கள்...’ என்று ‘போதும் என்ற மனம்’ இருக்கக்கூடாது. ஓட்டப்பந்தயத்தில் எப்படி நமக்கு முன்னால் செல்பவர்களை ஓவர்டேக் செய்ய வேண்டும் என்று உத்வேகம் இருக்க வேண்டுமோ அதேபோன்றுதான் மதிப்பெண் வாங்குவதிலும் இருக்கவேண்டும். ‘‘எதனால் அவர்கள் மட்டும் அதிக மதிப்பெண்கள் பெறுகிறார்கள்? நம்மாலும் ஏன் அப்படிப் பெறமுடியாது?’’ என்று முன்னால் இருப்பவர்களுடன் போட்டியிட்டு முன்னேறுவதுதான் உங்கள் குறிக்கோளாக இருக்க வேண்டும்.


5. குடையை எடுங்கள், மழையைத் தடுங்கள்!


தேர்வு நெருங்க நெருங்க ஆளாளுக்கு ‘அட்வைஸ் மழை’ பொழியத் தொடங்கி விடுவார்கள். யார் சொல்வதைக் கேட்க வேண்டும் என்பதில் தெளிவு தேவை. ‘‘கடைசி ரெண்டு பாடத்தையும் படிக்கவே வேண்டாம். வேஸ்ட்’’ என்று போகிற போக்கில் யாராவது சொல்வதையெல்லாம் நம்பினால் உங்கள் நூற்றுக்கு நூறு கனவு நனவாகாது.
 
Mar 10(7 days ago)


6. சிறு துளி...


ஆண்டுத் தேர்வுதான் இலக்கு என்றாலும்கூட நடுநடுவே கிடைக்கும் சின்னச் சின்ன வாய்ப்புகளையும் நழுவ விடவேண்டாம். ஒரு குறிப்பிட்ட பாடத்தில் அடுத்த நாள் கேள்வி கேட்கப்போவதாக ஓர் ஆசிரியர் சொன்னால்கூட முழுமையாகப் படித்துச் சென்று மாதத்தேர்வுகளிலும் முழு மதிப்பெண்களைப் பெற முனைப்பு காட்டுங்கள். இப்படி நீங்கள் பெறும் சின்ன சின்ன ‘நூற்றுக்கு நூறு’கள், பெரிய நூற்றுக்கு நூறு பெற நிச்சயம் உதவும்.


7. அனுபவம் பேசட்டும்.


அதே சமயம் சீனியர்களின் வார்த்தைகளை மதியுங்கள். உங்களிடம் அக்கறையுள்ள சீனியர்கள், ‘எந்தப் பாடங்களில் அதிக அளவில் கேள்விகள் கேட்பார்கள்’, ‘எப்படி எழுதினால் அதிக மதிப்பெண் கிடைக்கும்’ என்றெல்லாம் கூறும்போது கவனமாகக் கேட்டு மனதில் பதித்துக்கொள்ளுங்கள். அப்படியே ‘‘நீங்க பரிட்சையிலே எதிர்பார்த்து ஏமாந்தது எந்த விஷயத்தில்?’’ என்று கேட்டு வைத்துக்கொள்ளுங்கள். அதேபோன்ற ஏமாற்றம் உங்களுக்கு நேராமல் தவிர்க்கலாம்.


8. அடி அடியாய் முன்னேறலாமே!


சபரிமலை ஓர் உயரமான மலை. அதுவும் நெடும்பாதை வழியாகச் செல்லும்போது கடக்க வேண்டிய தூரம் மிக அதிகம். அப்படியிருக்க, எப்படி இவ்வளவு பேரால் ஒவ்வொரு வருடமும் அங்கு சென்று திரும்ப முடிகிறது? இரண்டு தெரு தள்ளியிருக்கும் கடைக்குப் போகவே ஸ்கூட்டரைப் பயன்படுத்துபவர்கள்கூட இவ்வளவு தூரம் நடப்பதை நினைத்து மலைத்துப்போகவில்லையே..!


பக்தி, குழுவாகச் செல்லுதல் போன்றவற்றைத் தவிர, வேறு ஒரு முக்கிய காரணமும் உண்டு. தலையில் இருமுடி இருக்கும் நிலையில் மலையில் ஏறும்போது அதிக அளவில் கழுத்தைத் திருப்பிப் பார்க்கமுடியாது. அதுவும் முன்னே இருக்கும் உயரப் பகுதிகளை, கழுத்தை உயர்த்திப் பார்ப்பது ரொம்பக் கஷ்டம். போதாக்குறைக்கு மலைப்பாதை என்பதால் ஒவ்வொரு அடியையும் பார்த்துப் பார்த்து வைக்க வேண்டும். ஆக, கவனம் முழுவதும் அடுத்த அடி வைப்பதிலேயே இருக்கிறது. தாற்காலிக இலக்கு, அடுத்த அடிதான் என்பதால் மலை உச்சி, அதை அடைவதற்கு தேவைப்படும் மொத்த உழைப்பு என்பதெல்லாம் மனதில் பதிவதில்லை. இதனால் தொலைவு பற்றிய பிரமிப்பு ஏற்படுவதில்லை.

கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்... ஒருநாளில் வீட்டுக்குள்ளேயே சமையல் அறைக்கும் கூடத்துக்கும் பிறபகுதிகளுக்குமாக அம்மா நடக்கும் தூரத்தைக்
 
Mar 10(7 days ago)
கணக்கிட்டால் அது எவ்வளவு அதிகமாக இருக்கும்! அப்படித்தான் ஓட்டல்களில் ஒவ்வொரு சர்வரும் டேபிளுக்கும் சமையலறைக்குமாக நடந்து சென்றுவரும் தூரமும். இவர்களுக்கு இதெல்லாம் மலைப்பு ஏற்படுத்தாததற்குக் காரணம், சின்னச் சின்ன நடைகளாக அவை அமைந்திருப்பதுதான்.

உங்களுக்கும் இது பொருந்தும். ‘நூற்றுக்கு நூறா! அதுவும் எல்லாப் பாடங்களிலுமா!’ என்று எண்ணி பிரமித்துக் கொண்டிருப்பதற்குப் பதிலாக அழகாகத் திட்டமிட்டு, அதன்படி அன்றன்று,குறிப்பிட்ட பாடங்களைப் படித்து முடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும்... நினைத்தது தானாக நிறைவேறும்.


9. தலை லேசாக இருக்கட்டும்..



நீங்கள் வகுப்பில் டாப் டென்னுக்குள் வருபவராக இருக்கலாம். ஆனால், தீபக் செய்த அசட்டுத்தனத்தை நீங்கள் ஒருபோதும் செய்துவிடாதீர்கள்.

தீபக் நன்றாக படிப்பவன். அவனைச் சுற்றி உள்ளவர்கள் ‘‘உனக்கென்னடா, படிக்காமலேயே பரிட்சை எழுதினாக்கூட ஃபுல் மார்க் வாங்கிடுவே’’, ‘‘தீபக், உன் மூளையிலேயே ஆயிரத்திலே ஒரு பங்கையாவது எனக்குக் கடன் கொடேன்’’ என்பதுபோல் கூறுவதுண்டு.

ஆசிரியர்களும் அவ்வப்போது தீபக்கைப் பாராட்டுவார்கள். ஒருமுறை தீபக் கூறிய சரியான பதிலால் மகிழ்ந்துபோன ஓர் ஆசிரியர் ’’எல்லாரும் தீபக்கைப் பாராட்டும்படி ரெண்டு நிமிஷம் எழுந்து நின்று கைதட்டுங்க’’ என்று கூறினார்.

இதனால் தீபக் உற்சாகம் அடைந்தான். இயற்கைதானே! ஆனால், துரதிஷ்டவசமாக அவனுக்குத் தலைக்கனம் வந்துவிட்டது. மற்றவர்களைவிட தனக்குதான் அதிகம் தெரியும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ளத் தொடங்கினான். அவ்வளவு ஏன்... தன்னுடைய ஆசிரியர்களைவிட, தான் புத்திசாலி என்று முடிவெடுத்தான்.

இதனால் பாடங்களில் போதிய கவனம் செலுத்தாமல் விட்டுவிட... அந்தமுறை தேர்வில் அவனுக்கு வெறும் ஐம்பது சதவிகிதம் மதிப்பெண்தான் கிடைத்தது.


நீங்கள் ஒருபோதும் தீபக் ஆகிவிடாதீர்கள். மற்றவர்களின் பாராட்டு மேலும் உங்களை உழைத்து முன்னுக்கு வரவைக்கவேண்டும். மாறாக, கர்வத்தில் முடங்கவைக்கக்கூடாது.

10. இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில்...


மற்றவர்களின் பாராட்டு நமக்கு கர்வத்தை தரக்கூடாது என்பதுபோலவே நம்மைச் சுருண்டுபோக வைக்கும் அளவுக்கு அவநம்பிக்கையாகப் பேசிக்கொண்டிருக்கும் சிலரை ஒதுக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
 
எவ்வளவு படிச்சாலும் அதிர்ஷ்டம்னு ஒண்ணு இருக்குடா’, ‘படிச்சதெல்லாம் பரிட்சையப்ப நினைவுக்கு வரும்னா நினைக்கிறே..? சான்ஸே இல்லை!’, ‘எல்லாப் பாடங்களையும் ஓரளவு படிக்கிறதுதான் புத்திசாலித்தனம். ஆழமாப் படிக்கிறோம்னு உட்கார்ந்தா கடைசியிலே எதையுமே படிச்சு முடிக்க முடியாமப் போயிடும்’ _ இப்படியெல்லாம் உங்களைச் சுற்றியிருப்பவர்கள் கூறினாலும் புன்னைகையோடு அவற்றையெல்லாம் உதறுங்கள். இதற்காக அவர்களிடம் விவாதம் செய்துகொண்டிருக்கவேண்டு� ��் என்பதில்லை. மனதுக்குள் உறுதியாக இருந்தால் போதும்.

‘என்னால் முடியும். நூற்றுக்கு நூறு என்பது வெறும் கனவில்லை. என் விடாமுயற்சியால் அதை நிச்சயம் சாதிப்பேன்’ என்று தொடர்ந்து நம்பிக்கையை விதைத்துக்கொள்ளுங்கள். அது வளர்ந்து நிச்சயம் கனி கொடுக்கும்.


11. அடடா... தப்பாச்சே!


ஜேம்ஸின் வகுப்பில் படிக்கும் குமார் நல்லவன்தான். ஆனால், நடுநடுவே அவன் மனதில் சாத்தான் ஆட்சி செய்யத் தொடங்கிவிடும். ஒரு பாடத்தைப் படிக்கத் தொடங்குவான். ஏதாவது ஓரிடத்தில் அது புரியாமல் போகும்போது திருட்டுத்தனமான ஒரு யோசனை அவன் மனதில் தோன்றும்... ‘இதை மட்டும் ஒரு சின்ன ’பிட்’டிலே எழுதிட்டுப் போய், பரிட்சையிலே பார்த்து எழுதிவிடலாமா..?’

பிட் அடிப்பது, ‘காப்பி’ அடிப்பது போன்ற எண்ணங்களை அடித்து விரட்டுங்கள். மற்றவர்கள் கண்டுபிடிப்பார்களா, சாமர்த்தியமாக அதைச் செய்யும் திறமை உங்களுக்கு இருக்கிறதா என்பது போன்ற கேள்விகள் எல்லாம் கிடக்கட்டும். யாருக்கும் தெரியாமல் இப்படி ‘சாதித்து’ விட்டாலும் நீங்கள் செய்த தவறான, அயோக்கியத்தனமான காரியம் உங்கள் மனதுக்குத் தெரியுமே... அதன்பின் உங்களை நீங்களே மதிக்கமாட்டீர்கள்!

ஆரோக்கியமான சிந்தனைகள் மட்டுமே உங்கள் மனதில் நிரம்பியிருக்கட்டும்.


12. வேகம் விவேகம்தான்!



சாலைகளில் செல்லும்போது ‘வேகம் விவேகம் அல்ல’ என்ற அறிவிப்பைப் பார்த்து இருப்பீர்கள். வேகமாக வண்டியை ஓட்டி, விபத்து ஏற்படக்கூடாது என்கிற எண்ணத்தில் செய்யப்பட்டிருக்கும் அறிவிப்பு அது.

ஆனால், படிப்பதில் வேகம் தேவை. ஒவ்வொரு வார்த்தையாக மெதுவாகப் படிக்கக்கூடாது. நாம் படிக்கும்போது ஒரு வரியைப் பார்க்கிறோம். அப்போது ஒரே சமயத்தில் மூன்று, நான்கு வார்த்தைகள் நம் கண்ணில் படும். அவற்றை ஒரே ‘தம்’மில் படிக்க வேண்டும்.
 
Mar 10(7 days ago)
ஆரோக்கியமான சிந்தனைகள் மட்டுமே உங்கள் மனதில் நிரம்பியிருக்கட்டும்.

12. வேகம் விவேகம்தான்!



சாலைகளில் செல்லும்போது ‘வேகம் விவேகம் அல்ல’ என்ற அறிவிப்பைப் பார்த்து இருப்பீர்கள். வேகமாக வண்டியை ஓட்டி, விபத்து ஏற்படக்கூடாது என்கிற எண்ணத்தில் செய்யப்பட்டிருக்கும் அறிவிப்பு அது.

ஆனால், படிப்பதில் வேகம் தேவை. ஒவ்வொரு வார்த்தையாக மெதுவாகப் படிக்கக்கூடாது. நாம் படிக்கும்போது ஒரு வரியைப் பார்க்கிறோம். அப்போது ஒரே சமயத்தில் மூன்று, நான்கு வார்த்தைகள் நம் கண்ணில் படும். அவற்றை ஒரே ‘தம்’மில் படிக்க வேண்டும்.

பாடங்களை அதிகமாகப் படித்து, மூளையும் சோர்வடையாமல் பார்த்துக்கொள்ள ‘ஒரு சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வார்த்தைகள்’ படிக்கப் பழகவேண்டும.


13. பழசு ரொம்ப முக்கியம்!

கடந்த வருடங்களில் எதுபோன்ற கேள்விகள் இடம்பெற்றன என்பதைப் பாருங்கள். பழைய கேள்வித்தாள்களைப் பெறுவதற்கு ஆசிரியர்களோ, சீனியர் மாணவர்களோ உதவக்கூடும்.

அவற்றிலுள்ள கேள்விகளைப் பார்க்கும்போது உங்களுக்கு ஒரு வியப்பு காத்திருக்கும். பாடத்தின் சில குறிப்பிட்ட பகுதிகள் மீண்டும் மீண்டும் விதவிதமான கேள்விகளாக அவற்றில் இடம் பெற்றிருக்கும். ‘‘மூணு வருஷம் இதைக் கேட்டுட்டாங்க. அதனாலே இந்த முறை வராது’’ என்று அலட்சியப்படுத்தாதீர்கள். தேர்வாளர்களுக்கு, இந்தப் பகுதி தொடர்ந்து முக்கியமானதாகப்பட்டு வருகிறது என்று புரிந்து கொண்டு அதையும் ஆழமாகப் படியுங்கள்.



14. வார்த்தைக்கு வார்த்தை வேறுபாடு உண்டு..


விடையை எந்த விதத்தில் எதிர்பார்க்கிறார்கள் என்பதில் தெளிவு தேவை.

எட்டாவது படிக்கும் தேவகி மிகவும் புத்திசாலி. அதுவும் ஆங்கிலம் அவளுக்கு மிகவும் பிடித்த சப்ஜெக்ட். ஆனாலும் ஐந்து மதிப்பெண்களை முழுமையாகப் பறிகொடுத்த சோகத்தில் இருக்கிறாள். அதுவும் அவளுக்கு நன்கு தெரிந்த கேள்விகள் அவை. என்ன ஆச்சு?

ANTONYM என்று ஒரு பகுதியில் கேட்டிருந்தார்கள். ANTONYM என்றால் எதிர்ப்பதம் என்பது அவளுக்குத் தெரியாமல் போய்விட்டது OPPOSITE என்ற வார்த்தைதான் அவளுக்குப் பழக்கம்).

சரியாகப் புரிந்துகொள்ளாத காரணத்தினால், கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளின் அர்த்தத்தைதான் கேட்கிறார்கள் என்று நினைத்து அப்படியே எழுதிவிட்டு வந்தாள்.
 
பிறகுதான் தெரிந்தது தன் தவறு.

கேள்வியில் உள்ள வார்த்தைகளின் பொருள்களை நன்கு புரிந்து கொள்ளுங்கள்.OPPOSITE, SYNONYM, ANTONYM ஆகியவற்றுக்கிடையே உள்ள வித்தியாசத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். கடந்த ஆண்டுகளின் கேள்வித்தாள்களைப் படிக்கும்போது கேள்விகளோடு, அவற்றை எந்தவிதத்தில் கேட்டிருக்கிறார்கள் என்பதையும் மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்.


15. பின்னால் இருக்குது சூட்சுமம்..


ஒவ்வொரு பாடத்தின் இறுதியிலும் உள்ள கேள்விகளுக்கு (அவை ஒற்றை வார்த்தை பதில் கொண்ட கேள்விகளாகவும் இருக்கலாம், விளக்கமான பதிலைக்கோரும் கேள்விகளாகவும் இருக்கலாம்) நன்கு விடை எழுதப் பழகிக்கொள்ளுங்கள். சில புத்தகங்களின் இறுதியில் ‘ரிவிஷன் தேர்வு’ என்ற தலைப்பில் கேள்விகள் கொடுத்திருப்பார்கள். அவற்றுக்கும் விடை அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

எல்லா ஆசிரியர்களுக்கும் ‘ஆண்டுத் தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்’ என்ற எண்ணம்தான் இருக்கும் (இது பாஸா _ ஃபெயிலா சம்பந்தப்பட்ட விஷயம் என்பதாலும், முழு ஆண்டுத்தேர்வுக்கு நிறைய படிக்க வேண்டியிருக்கும் என்கிற அனுதாபம் காரணமாகவும்). எனவே, மேலே சொன்ன பகுதிகளில் உள்ள கேள்விகளை, வார்த்தைகளைகூட மாற்றாமல் அப்படியே பரிட்சையில் கேட்பதற்கான வாய்ப்பு அதிகம்.


16. அதற்கு ஓரிடம்... இதற்கென்று ஓரிடம்..


சுந்தர் ரொம்பப் பெருமையாக சொல்லிக் கொள்வான்... ‘‘எனக்கு இந்த இடத்திலேதான் படிக்கணுங்கிறது இல்லை. எந்த இடத்திலேயும் படிப்பேன்’’ என்று.

உண்மைதான். பால்கனியில் படிப்பான். அறைக்குள் படிப்பான். கூடத்து சோபாவில் உட்கார்ந்து படிப்பான். டைனிங் டேபிளில் சாப்பிட்டுக்கொண்டே படிப்பான். படுக்கையில் படுத்துக்கொண்டே படிப்பான். எப்படிப் படித்தாலும் அவனுக்கு பாடங்கள் மனதில் பதிகின்றன என்பது நல்ல விஷயம்தான்.

ஆனால், இதில் வேறு ஒரு பிரச்னை. படித்து முடித்ததும் அங்கங்கே புத்தகங்களையோ நோட்டுப் புத்தகங்களையோ வைத்துவிடுவது அவன் வழக்கம். படிக்கும் நேரத்தைவிட இவற்றை தேடும் நேரம் அதிகமாக இருக்கும்.

‘‘அம்மா, என் பயாலஜி நோட்டுப் புத்தகத்தை பார்த்தீங்களா?’’ என்று பரிதாபமாகக் கேட்பான். அவன் அம்மாவும் அதை தேடி எடுத்து நீட்டுவாள். ‘‘இதே வேலையா போச்சு. நீயே தேடிக்க’’ என்று சிலசமயம் சிடுசிடுப்பதும் உண்டு.
 
புத்தகங்களையும் நோட்டுப்புத்தகங்களையும் குறிப்பிட்ட இடத்தில் வைக்கப் பழகிக்கொள்ள வேண்டும். குறைந்தது ஒரே அலமாரியில் அல்லது மேஜையில் இவற்றை அடுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இது மிகமிக முக்கியமான விஷயம்.

17. அப்பா, அம்மாவின் ஆதரவில்லாமலா?


அப்பா _ அம்மாவுடன் முதலில் உட்கார்ந்து பேசுங்கள். அப்போது வீட்டில் உங்களுக்கு உள்ள சில இடைஞ்சல்களை சுட்டிக்காட்டுவதில் தவறில்லை. ஆனால், மரியாதையாகவும் வேண்டுகோளாகவும் உங்கள் தொனி இருந்தால் பலன் அதிகமாக இருக்கும். உங்கள் நலனில், நீங்கள் நூற்றுக்கு நூறு வாங்க வேண்டும் என்பதில், அவர்களைவிட யாருக்கு அதிக அக்கறை இருந்துவிடப்போகிறது? ‘‘நீங்க ரெண்டுபேரும் ஒருத்தருக்கொருத்தர் சத்தம் போடாம பேசிக்கிட்டா நல்லாயிருக்கும். அப்பத்தான் என்னால் அமைதியாகப் படிச்சு முழு மார்க் வாங்க முடியும்’’ என்பதைக்கூட நீங்கள் கூறலாம்.

‘‘நியாயம்தான். நாங்க எங்களைக் கொஞ்சம் மாத்திக்கிறோம். பரிட்சை முடியறவரை வீட்டுக்கு நிறைய விருந்தாளிகள் வராமப் பார்த்துக்கிறோம்’’ என்பதுபோல் அவர்கள் பதில் கூறலாம்.

மாறாக, ‘‘எங்களைச் சொல்லறியே... முதல்ல உன்னை மாத்திக்க. உன்னைச் சுத்தி கவனத்தைத் திருப்பும்படியான விஷயங்களை வெச்சிக்கிட்டு எங்களைச் சொல்ல வந்துட்டியே!’’ என்று சொன்னாலும் கோபம் வேண்டாம். அவர்கள் அப்படி என்ன குற்றம் சாட்டிவிடப் போகிறார்கள்? உங்கள் கவனத்தை திருப்பும்படியான விஷயங்கள் அப்படியென்ன இருந்துவிடப்போகிறது என்று பார்க்கவேண்டும்.



18. விட்டுத் தள்ளுங்கள்!


அஷ்டவதானி என்று சிலரைச் சொல்வார்கள். ஒரே நேரத்தில் எட்டு விஷயங்களை அவர்களால் செய்ய முடியும்!
எல்லோருக்கும் இது சாத்தியமில்லை.

எழுதிக்கொண்டிருக்கும்போ� ��ு வாசலில் யாராவது கூப்பிட்டால் எழுதுவதை நிறுத்திவிட்டுதான் போய்ப்பார்க்க முடியும். இரண்டு நண்பர்கள் இரண்டு வேறுபட்ட விஷயங்களைப் பற்றி உங்களிடம் ஒரே நேரத்தில் பேசினால் ஒருவரிடம் பேசிவிட்டுதான் மற்றவரிடம் பேசமுடியும். அவ்வளவு ஏன்... விழித்துகொள்வது என்றால்கூட தூக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

எனவே, ஒன்றை சிறப்பாகச் செய்வதென்றால் வேறு சிலவற்றை நிறுத்திக்கொள்ள வேண்டித்தான் இருக்கும். பாடங்களில் கவனம் செலுத்துவதென்றால் எவற்றைத் தவிர்க்க வேண்டும்? அவற்றை யோசியுங்கள்.
 
19. மாயத் திரை..

சில வெளிநாடுகளில், வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் டி.வி. போடுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறார்க� ��். படிப்பதிலிருந்து கவனத்தை திசை திருப்புவதில் டி.வி&க்கு முக்கிய பங்கு உண்டு. ஆண்டுத்தேர்வுக்கு சில மாதங்களுக்கு முன்னால் & அது பத்தாம் வகுப்பு அல்லது ப்ளஸ் டூ போன்ற பொதுத்தேர்வு என்றால் & கேபிள் கனெக்ஷனை தேர்வு முடியும்வரை நிறுத்திவைக்கச் சொல்லுங்கள். முடியாதபட்சத்தில் நீங்கள் படிக்கும் அறையில் டி.வி. சத்தம் வராதபடியாவது பார்த்துக் கொள்ளுங்கள்.


20. அக்கம் பக்கம் அணுகலாம..


பக்கத்து வீடுகளிலிருந்து எழும் ஓசை & அது டி.வி&யாக இருக்கலாம், வானொலியாக இருக்கலாம், தொடர்ந்து உரக்கப்போடும் சண்டையாக இருக்கலாம்... உங்கள் கவனத்தை அடிக்கடி திசைதிருப்பக்கூடும். நீங்களே அவர்களை அணுகி, தன்மையுடன் பேசினால் நிச்சயம் புரிந்து கொள்வார்கள். தங்களை மாற்றிக்கொள்வார்கள். இந்த விஷயத்தில் உங்கள் பெற்றோரின் ஆலோசனையையும் நீங்கள் நாடலாம்.


21. வல்லிசை என்பது வில்லன்தான்!


ஒரு வீட்டுக்குச் சென்றிருந்தபோது இசை காதைத் துளைத்தது. ‘‘என்னடா இது, அடுத்த வீட்டிலே இவ்வளவு சத்தமா ரேடியோவை வெச்சிருக் காங்களே?’’ என்றேன் நண்பனிடம்.

’’அடுத்த வீடு இல்லை. ஐந்து வீடு தள்ளி இருக்கிறவங்கதான் இப்படி முழு வால்யூமிலே அலறவிடறாங்க’’ என்று கூறி மேலும் அதிர்ச்சியடைய வைத்தான்.

மற்றவர்களை விடுங்கள்... உங்களில் சிலர் பெரிய அளவில் வானொலியையோ, சி.டி&யையோ, காஸெட்டையோ மிகவும் அதிகமான வால்யூமில் அலறவிட்டுக் கொண்டே படிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருப்பீர்கள். இது தவறான வழக்கம். படிப்பது மனதில் அழுத்தமாகப் பதியாது. விரல்கள் இசைக்கேற்ப தாளமிட்டுக் கொண்டிருக்கும். அந்தப் பாடலுக்கு திரையில் எப்படி ஆடினார்கள் என்பதில் மனம் தாவும். தேவையா இதெல்லாம்?

இதுபோன்ற திசை திருப்பும் விஷயங்களை தேர்வு முடியும்வரை தள்ளி வைக்கலாமே..!


22.‘ஃபாஸ்ட்டாக’ தொல்லையை வரவழைத்துக் கொள்ள வேண்டுமா?

ஃபாஸ்ட் ஃபுட் அயிட்டங்கள், பீட்ஸா, சமோசா, குளிர்பானங்கள் ஆகியவற்றை, தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு நிச்சயம் தீமைதான். தேர்வுக்குத் தயார் செய்யும் நாட்களிலாவது இவற்றைத் தவிர்க்கலாமே! வயிற்று வலியிலிருந்து நினைவுத் தடுமாற்றம்வரை பலவித
சிக்கல்களை நாமே ஏன் வரவழைத்துக்கொள்ள வேண்டும்?

வேறு வழியின்றி வெளியில் சாப்பிடவேண்டி வந்தாலும்கூட நல்ல சூடான உணவுவகைகளையே வாங்கிச் சாப்பிடுங்கள். சிலவகை பாக்டீரியாக்களாவது வெப்பத்தில் இறந்திருக்க வாய்ப்பு உண்டு.

23. ஹலோ தொல்லைகள்..


உங்கள் வீட்டில் தொலைபேசி இருக்கிறதா? அடடா! உங்களுக்கெறே செல்போன் இருக்கிறதா? அச்சச்சோ!

இப்படி அலறுவதற்கு காரணம் இருக்கிறது.

பல விஷயங்களுக்கு இவை மிகவும் உதவிகரமானவை என்றாலும், தேர்வு நெருங்க நெருங்க, இவையே பெரும் இடைஞ்சலாகவும் மாறிவிடும்.
‘ஹலோ நான் ரகு பேசறேன். இன்னிக்கு என்னடா படிச்சே? ஃபிசிக்ஸா? அதிலே என்ன பாடம்? ஐயே... அதையா படிச்சே? அதிலே இருந்து ஒரே ஒரு ரெண்டு மார்க் கேள்விதான் வரும். நான் அந்தப் பாடத்தையே படிக்காம விட்டுடலாம்னு இருக்கேன். நான் இன்னிக்கு என்ன செஞ்சேன் தெரியுமா? ‘ஸ்வதேஷ்’ படத்துக்குப் போயிருந்தேன். ஷாரூக்கான் சூப்பர்டா! ஆனால், படம் சுமார்தான். இதே டைரக்டர் முன்னாலே டைரக்ட் செய்திருந்த ‘லகான்’ ரொம்ப சூப்பரா இருந்துச்சு. அதுல கிரிக்கெட்தான் மெயின் ஸ்டோரி இல்லே? ஆமாம்... தினேஷ் கார்த்திக்கை டீம்லே இருந்து எடுத்துட்டாங்களாமே? இந்த கங்குலிக்கு தமிழ்நாடு ப்ளேயர்ஸ்னாவே கொஞ்சம் இளப்பம்தான்...’

இதுபோன்ற பேச்சுக்கள் எத்தனை விதங்களில் உங்கள் படிப்பைப் பாதிக்கும் என்று யோசியுங்கள்.

படிக்கும்போது செல்போனை ஆஃப் செய்து வைத்துவிடுங்கள்.

அடிக்கடி தொணதொணக்கும் நண்பன் என்றால் ‘‘அவன் கூப்பிட்டா, நான் வெளியே போயிருக்கேன் என்று சொல்லிடுங்க’’ என்று அப்பாவிடமும் அம்மாவிடமும் கூறுவதில்கூட தப்பில்லை.


24. கவனம்... நண்பர்கள்!


சுதாகருக்கு ஒரு நண்பர் குழு உண்டு. அவர்கள், அவன் படிப்பதற்கு இடைஞ்சலாக இருக்கிறார்கள். எப்போதும் விளையாட்டு, ஆசிரியர்களைக் கிண்டல் செய்வது, சினிமா... இப்படித்தான் அவர்கள் பொழுது கழிகிறது. மதிய உணவைச் சேர்ந்து சாப்பிடுவதாலும், அவர்களில் பலரும் அவன் வசிக்கும் தெருவிலேயே இருப்பதாலும் சுதாகருக்கு அந்தக் குழுவைவிட்டு விலகியும் வரமுடியாத நிலை.இப்போது சுதாகர் துணிந்து ஒரு முடிவு எடுத்தாக வேண்டும். மதியம் அவர்களோடு சாப்பிடலாம்.மற்றபடி படிப்பில் கவனம் செலுத்த விடாதவர்களைத் தவிர்ப்பதே நல்லது.

‘‘அவர் சர்.சி.வி. ராமன்டா... மேதையா வரப்போறார்’’
என்பதுபோல் கிண்டல் செய்பவர்களிடம் வீண் விவாதம்தான் செய்துகொண்டிருக்க வேண்டாம். புன்னகை செய்துவிட்டு காரியத்தில் கண்ணாக இருங்கள். முதலில் ஒருமுறை உங்கள் லட்சியத்தை அவர்களிடம் விளக்கிவிடலாம். புரிந்துகொள்ளவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம்.

25. யூகம் சரியாகலாம்..


ஒரு கேள்விக்கு பதில் எழுத வேண்டிய கட்டாயம். விடையின் இரண்டு பகுதிகளில் ஒன்று தெரியவில்லை. என்ன செய்யலாம்? சிலபேர் ‘எப்படியும் தப்பா இருக்க சான்ஸ் அதிகம். படிக்கிறவருக்கு என்னைப் பற்றித் தப்பான கருத்து வந்துடுமே’ என எண்ணி அந்தப் பகுதியை எழுதாமல் வந்து விடுவார்கள்.

அப்படிச் செய்யவேண்டாம். உங்கள் யூகம் சரியானதாகக் கூட இருந்துவிடலாமே. எனவே மறக்காமல் எழுதுங்கள். தவறாக எழுதினால் மதிப்பெண் குறைக்கப்படப் போவதில்லை. எனவே எழுத மறக்காதீர்கள். இது பிறவற்றுக்கும் பொருந்தும் (அதாவது பத்து கேள்விகள் கேட்கப்படும்போது ஒன்பது கேள்விக்குத்தான் விடை தெரியுமென்றாலும் பத்தாவது கேள்விக்கு Ôஒருவேளை இது பதிலாக இருக்கலாம்’ என்பதுபோல் ஏதாவதொரு பதிலை எழுதுங்கள்).


26. பின்னணியால் முன்னணி..


பிரசாத்துக்கு ஒரு சின்னக் குழப்பம். பலவித உலோகங்களை அவற்றின் தாதுப் பொருள்களிலிருந்து பிரித்தெடுப்பதைப் பற்றிப் படிக்கவேண்டும். எல்லாமே ஒன்றுபோல் தோன்றியது அவனுக்கு. இதனால் பரிட்சையில் மாற்றி எழுதிவிட்டால் என்ன செய்வது என்கிற சின்ன அச்சமும் உண்டானது.

அவன் என்ன செய்தான் தெரியுமா?

ஓர் உலோகம் பற்றிய பாடத்தை ஓர் அறையில் படித்தான். இன்னோர் உலோகம் பற்றிய பாடத்தை மொட்டை மாடியில் படித்தான். மூன்றாவதை வீட்டுக் கூடத்தில் படித்தான். நான்காவதை அருகிலுள்ள பூங்காவில்! இப்படிப் படித்ததனால், சந்தேகம் எழும்போது, தான் படித்த பின்னணியோடு ஒப்பிட்டுப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்வது அவனுக்கு எளிதாக இருந்தது.


27. விழிப்பு உணர்வு தேவை..


‘காலை மூன்றரை மணிக்கே எழுந்து ஒரு ரிவிஷன் செய்துவிட்டு, தேர்வுக்குக் கிளம்ப வேண்டும்’ என்று தீர்மானித்துக்கொண்டான் ராஜன். மூன்றரை மணிக்கு எழுப்புமாறு அம்மாவிடம் சொன்னான். அம்மா சம்மதித்த பிறகும், காலை மூன்றரை மணிக்கு அலாரம் வைத்துக் கொண்டான்காலை மூன்றேகால் மணிக்கு அம்மா அவனை எழுப்பினாள். ராஜனுக்கு தூக்கம் கண்களைச் சுழற்றியது. கடிகாரத்தைப் பார்த்தான். ‘இன்னும் கால்மணி நேரத்தில் அலாரம் அடிக்கப்போகிறது. அப்போது எழுந்து படிக்கலாமே’என்று நினைத்துக்கொண்டு மீண்டும் தூங்கிவிட்டான்.

அலாரம் மூன்றரை மணிக்கு அடிக்கத் தொடங்கியது. ஆனால், தூக்க சுகத்தைத் தொலைக்க விரும்பாத ராஜனின் கை, கடிகாரத்தின் தலையைத் தட்டி அலாரத்தை ஆஃப் செய்துவிட்டது.


ராஜன் விழித்துப் பார்த்தபோது ஐந்தரை மணி ஆகியிருந்தது!

ஆழ்ந்து தூங்கும்போது எழுந்திருப்பது என்பது யாருக்குமே கஷ்டமான விஷயம்தான். எனவே, வெறுமனே கண் விழித்துப் பார்த்து, மறுபடி தூங்கிவிடாமல், எழுந்துகொள்ளுமாறு இருக்கவேண்டும். டைம்பீஸைச் சற்று தள்ளி வையுங்கள். அதன் அலார ஒலியை நிறுத்த எழுந்து நடக்க வேண்டிவரும். இதனால் தூக்கம் கலையும், துடிப்பு பிறக்கும்.

உங்கள் வீட்டில் தொலைபேசி இருந்தால் சீக்கிரம் எழுந்திருக்கக்கூடிய ஒரு நண்பனை குறிப்பிட்ட நேரத்தில் தொலைபேசியில் அழைக்கச் சொல்ல லாம். பக்கத்து வீட்டில் இருக்கும் நண்பன் என்றால் கதவைத் தட்டிக்கூட உங்களை எழுப்பி விட்டுப்போகலாம்.


28. நாக்கைக் கட்டிப் போடுங்கள்..


வெளியில், கண்ட தின்பண்டங் களையும் சாப்பிடக்கூடாது. வீட்டிலும்கூட அடிக்கடி நொறுக்குத் தீனி என்ற பெயரில் உள்ளே தள்ளக்கூடாது. அப்படியே இரு உணவு வேளைகளுக்கு நடுவே லேசாகப் பசியெடுத்தால் வீட்டில் செய்யப்பட்ட வெஜிடபிள் சாலட் மற்றும் பழங்கள் ஆகியவற்றை உண்ணலாம். எண்ணெய்ப் பண்டங்களைத் தவிர்த்துவிடுங்கள். அல்லது, மிகக்குறைவாக அவற்றை உண்ணுங்கள்.

அளவுக்கதிகமாக சாப்பிட வேண்டாம். அதை ஜீரணம் செய்வதற்காக உடலில் உள்ள பெரும்பாலான ரத்தம் வயிற்றுப்பகுதிக்கு அப்போது அனுப்பப்படும். இதனால் மூளைக்கு செல்ல வேண்டிய ரத்தம் (அதாவது ஆக்ஸிஜன்) குறைவதால், தூக்கம் கண்ணைச் சுழற்றும். பெரிய விருந்துக்கு பிறகு ‘ஆவ்’ என்று கொட்டாவி விடுவதும் கண்கள் செருகித் தூக்கம் வருவதும் இதனால்தான்.


29. தள்ளி நின்றால் தப்பில்லை..


உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் யாருக்காவது தொற்றுநோய் என்றால், தேர்வு நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், தொலைபேசியின் மூலம் அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறினால் போதுமானது. அப்படியே நேரில் போனால்கூட, சற்றுத் தள்ளி நின்றே பரிவு காட்டுவது நல்லது.
30. பயிற்சி மனதுக்கு மட்டுமல்ல..

விளையாடினால்தான் களைப்பு ஏற்படும் என்பதில்லை. தொடர்ந்து படிப்பதாலும் களைப்பு ஏற்படக்கூடும். எனவே, மூளைக்கு அவ்வப்போது புத்துணர்ச்சி ஊட்டவேண்டும். நிறைய காபி குடிப்பதால் மூளை உற்சாகம் அடைவது இல்லை. மாறாக, அதில் உள்ள நச்சுப்பொருள் உடலுக்குத் தீங்கு விளைவிக்கலாம்.

தினமும் சிறிது நேரமாவது வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யுங்கள். இதனால் ரத்த ஓட்டம் பெருகும். மூளைக்கும் அதிக ஆக்ஸிஜன் கிடைக்கும். களைப்பின்றிப் படிக்கலாம்.


31. கண் போல் பாதுகாக்க வேண்டும்..


அவ்வப்போது கண்களுக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுங்கள். இரண்டு கண்களையும் மூடிக்கொண்டு இரு உள்ளங்கைகளின் கீழ்ப்பகுதியாலும் கண்களுக்கு லேசான மஸாஜ் கொடுத்தால் இதமாக இருக்கும்.

கண்களை விரல்களால் மூடிக்கொண்டு உங்களுக்கு பிடித்த இயற்கைக் காட்சியைக் கற்பனையில் கொண்டுவந்தால் நல்லது. அந்த இடத்தில் நீங்களும் இருப்பதுபோல் எண்ணிக் கொண்டால் மேலும் நல்லது.

கண்கள் களைப்படையும்போது, வீட்டில் யாரையாவது சிறிது நேரம் பாடத்தை படிக்கச் சொல்லியும் காதில் வாங்கிக்கொள்ளலாம்.


32. ‘இல்லை’ சொல்லப் பழகு!


முழு மதிப்பெண்கள் உங்களுக்குக் கிடைக்க வேண்டுமென்றால், உங்களுடைய சில அடிப்படைத் தன்மைகளையே கூட மாற்றிக்கொள்ளவேண்டி வரலாம்.

‘‘டி.வி&யிலே இன்னிக்கு நல்ல படம். மறக்காம பாரு.’’

‘‘புதுப்படத்தோட சி.டி. வெச்சிருக்கேன். போட்டுக் கேக்கறியா?’’

‘‘இன்னிக்கி கிரிக்கெட் மேட்ச் நேரடி ஒளிபரப்பு. சேர்ந்து பார்த்து என்ஜாய் பண்ணலாமா?’’

‘‘எங்க வீட்டுகெல்லாம் வந்து எவ்வளவு நாளாச்சு... இந்த வெள்ளிக்கிழமை வந்துடு. எல்லாரும் ஜாலியா இருக்கலாம். திங்கட்கிழமை காத்தாலே திரும்பிடலாம்...’’ இதுபோன்ற அழைப்புகள் வரும்போதுதான் நீங்கள் இடவலமாகத் தலையாட்ட வேண்டும். உங்கள் மறுப்பைத் தன்மையான முறையில் தெரிவித்து விடுங்கள். ஏனென்றால் ஆண்டுத்தேர்வு வரை உங்கள் முதல் இலக்கு ‘தேர்வில் முழு மதிப்பெண்’ என்பதாக மட்டுமே இருக்க வேண்டும்.


33. மனப்பாடம் அவமானம் அல்ல..


மனப்பாடம் செய்வதை சிலர் கேலியாக விமரிசனம் செய்வார்கள். புரிந்துகொள்ளாமல் மனப்பாடம் செய்வதுதான் தப்பு. சிலமுறை மீண்டும் மீண்டும் படித்தால் ஒரு பகுதி உங்களுக்கு மனப்பாடம் ஆகிவிடும் என்றால்
அப்படிச் செய்வது நல்லதுதான். பரிட்சையின்போது யோசிக்கிற நேரம் மிச்சமாகிவிடும். மனப்பாடம் செய்வது பாதியில் மறந்துவிட்டது என்றால்கூட, புரிந்துகொண்டுதான் நெட்டுரு அடித்தீர்கள் என்பதால், யோசித்து, மீதியை உங்கள் வார்த்தைகளிலேயே எழுதிவிடலாம்.

முக்கியமாக கணித மற்றும் அறிவியல் ஃபார்முலாக்களை மனப்பாடம் செய்யத்தான் வேண்டும்.


34. உடனுக்குடன் ‘ஓவர்’!


சர்க்கஸில் ஒருவர் தன் தலைக்குமேல் ஒவ்வொரு கோப்பையாக போட்டுக்கொள்வார். ஒன்றின்மீது ஒன்றாக அவை நெட்டுக்குத்தாக நிற்கும். இப்படி, பத்து கோப்பைகளை அவர் பேலன்ஸ் செய்வதைப் பார்த்து பார்வையாளர்கள் கைதட்டுவார்கள். மக்களை மகிழ்விக்கும் விஷயங்களில் இவை எல்லாம் சரி. ஆனால், வாழ்க்கையில் எதையுமே அவ்வப்போது செய்துவிடுவதுதான் நல்லது. ஃபீஸ் கட்ட இன்னும் இரண்டு நாட்கள் இருக்கிறது என்றால் அதைத் தள்ளிப்போடாமல் இன்றே கட்டிவிடுவதுதான் நல்லது. இது படிக்கும் விஷயத்துக்கு இன்னும் பொருந்தும்.

அவ்வப்போது பாடங்களைப் படித்துவிட்டால் எழும் சந்தேகங்களையும் தீர்த்துக்கொள்ள முடியும். தேர்வுக்கு முன் படிப்பது ரிவிஷனாக மட்டுமே அமையும்.


35. படம் பார்த்து பாடம் சொல்லுங்கள்..


இந்தப் படத்தில் தவறு செய்யும் இருவர் யார்? கரெக்ட்... டீச்சர் பாடம் நடத்தும்போது பேசிக்கொண்டிருக்கும் மாணவர்கள்தான் அவர்கள் என்பதைச் சரியாகவே கண்டுபிடித்துவிட்டீர்கள�. அந்த இருவரில் ஒருவராக நீங்களும் வகுப்பறையில் இருப்பதுண்டா என்று உண்மையாக யோசித்துப் பாருங்கள்.

வகுப்பில் பாடங்களைக் கவனிக்காததால் ஆசிரியர் கூறுவது நம் மனதில் பதியாமல் போய்விடுகிறது. சிலசமயம் தேர்வில் கேட்கப்படும் கேள்விக்கான பதிலை நாம் படித்திருக்கவில்லை என்றாலும்கூட வகுப்பில் ஆசிரியர் அதை நடத்தியபோது கவனித்திருந்தால் அந்த பதிலை சரியாகவே எழுத வாய்ப்பு உண்டு. வகுப்பில் கவனமாக இருந்தால் அன்று மாலை அந்தப் பாடத்தைப் படிக்கும்போது அது ஒரு ரிவிஷன்போலவே இருக்கும். தேர்வு நெருங்கும்போது செய்யப்படுவது இரண்டாவது ரிவிஷன். ஆக, சரியான விடையை முழுமையாக எழுதும் வாய்ப்பு மிக அதிகம்.தவிர, நீங்கள் வகுப்பறையில் பாடம் நடத்தும்போது அடிக்கடி பேசிக்கொண்டிருப்பவர் என்பதை டீச்சர் கண்டுபிடித்துவிட்டால், உங்கள் மீது அவருக்கு எரிச்சல் உண்டாவது இயற்கை.
உங்களுக்கு ஒருவர்மீது ரொம்ப கோபம். கத்துவீர்களா? ரத்த அழுத்தம் கூடும். உடல் வெவெடக்கும். மனதுக்குள்ளேயே வைத்து மருகுவீர்களா? அப்போது மனம் அதையே சிந்திக்கும். வேறு ஒன்றிலும் கவனம் போகாது. கோபமே வராமல் இருப்பதற்கு நாம் ஞானிகள் அல்ல. ஆனால், அதை எவ்வளவு சீக்கிரம் கட்டுப்படுத்துகிறோம் என்பது நம் கையில்தான் இருக்கிறது.

ஏதோ ஒரு தருணத்தில் புத்தி தடுமாறி, கோபம் என்கிற பெரும் நோய்க்கு அடிமையாகி, இன்று பழிச் சொல்லுக்கும் ஆளாகியிருப்பவர் அந்த ஆசிரியை மட்டும்தானா? நம்மில் சிலருக்கும்கூட அந்த அனுபவம் உண்டுதானே!

எனக்கு நன்கு அறிமுகமான பெண்மணி ஒருவர்... சட்டென்று இரங்கிவிடும் மனதிலாகட்டும்... வாரிக் கொடுக்கும் குணத்திலாகட்டும்... தாராளமான மனுஷிதான். கோபப்படுவதிலும் அப்படியே! என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் வார்த்தைகளை வாரி இறைத்துவிடுவார். ஆறாத காயங்களை பலரின் மனதிலும் ஏற்படுத்தியிருக்கின்றன அவரது வார்த்தைகள். எவருமே அவரது இரக்க சுபாவத்தைப் பாராட்டி நான் பார்த்ததில்லை... ‘ஐயோ! அந்தம்மாவா? அதுக்கு எந்நேரம் என்ன புத்தி இருக்கும்னு யாருக்குத் தெரியும்? கொஞ்சம் தள்ளியேதான் நிக்கணும்ப்பா’ என்பார்கள், வெறுப்பாக.

எனக்குத் தெரிந்த இன்னொரு பெண்மணியும் உண்டு. அலுவலகத்திலோ, வீட்டிலோ... யார் என்ன சீண்டினாலும் பொறுமையிழக்க மாட்டார். ‘‘உங்களுக்குக் கோபமே வராதா?’’ என்று அவரிடம் கேட்டேன். ‘‘வருமே. ஆனா, அந்த சமயத்துல ‘டக்’னு அந்த இடத்தை விட்டுப் போயிடுவேன். கோபமெல்லாம் குறைஞ்ச பிறகு, சம்பந்தப்பட்டவங்க எனக்கு நெருக்கமானவங்களா இருந்தா அவங்ககிட்டயே போய், ‘நீங்க என்னை ரொம்பக் கஷ்டப்படுத்திட்டீங்க. உங்க இடத்துல நான் இருந்து நீங்க நடந்துக்கிட்ட மாதிரியே நான் நடந்திருந்தா உங்களுக்கு எப்படி இருக்கும்?’னு கேட்பேன். அவ்வளவுதான்... அதுக்குப் பிறகு, எப்பவுமே அதுமாதிரி நம்மகிட்ட நடந்துக்க மாட்டாங்க. என்னைக் கோபப்படுத்துனவங்க எனக்கு நெருக்கமானவங்களா இல்லாத பட்சத்துல அதைப் பத்தி விவாதிப்பதையே தவிர்த்துடுவேன்’’ என்றார் அவர்.

கோபத்தை விரைவில் அடக்க முடிந்தால் படிப்பதில் முழுமையாக கவனம் செலுத்தலாம்.

37. தப்பு, தப்பல்ல! 37. தப்பு, தப்பல்ல!


சிலபேர் வாரத்தேர்வு, மாதத்தேர்வு போன்றவற்றில் ஏதேனும் தவறு செய்து மதிப்பெண் குறையும்போது அதற்காக வருத்தப்பட்டுக்
Mar 10(7 days ago)

கொண்டே இருப்பார்கள். என்ன தப்பு செய்தீர்கள் என்பதை அறிந்துகொண்டு அதைத் திருத்திக்கொளுங்கள். சரியாக பதில் தெரிந்தும் எழுதும் விதத்தில் தவறாக வந்துவிட்டதா? அல்லது நினைத்தை எழுதாமல் வேறு எதையாவது எழுதிவிட்டீர்களா? வாக்கியம் அமைப்பதில் தவறா? திருத்திக்கொள்ளுங்கள். முன்னேற்றம் அடைவீர்கள்.

மாதத்தேர்வில் ‘ஙிமீtஷ்மீமீஸீ tலீமீ tலீக்ஷீமீமீ’ என்று சேகர் தொடங்கியிருந்த ஒரு வாக்கியத்தை சுழித்திருந்தார் ஆசிரியர். இருவரைப் பற்றி இப்படிக் குறிப்பிடும்போதுதான் ஙிமீtஷ்மீமீஸீ என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும். இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் எனும்போது கினீஷீஸீரீ என்ற வார்த்தையைத்தான் பயன்படுத்த வேண்டும் என்றார். இதனால் ‘நூற்றுக்கு நூறு’ போச்சு.

சேகர் இப்போது மகிழத்தான் வேண்டும்.

தான் செய்த ஒரு தவறை சேகர் இப்போது தெரிந்துகொண்டதால் அந்தத் தவறை ஆண்டுத்தேர்வில் அவன் செய்யமாட்டான். அப்போது முழு மார்க் கிடைக்குமே!


38. வாங்க மறக்காதீர்கள்..


புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் எல்லாம் வாங்கிவைத்திருப்பீர்கள். வீட்டில் ஒரு கரும்பலகையும் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். படித்து முடித்த பாடங்கள் மறக்காமல் இருக்கிறதா என்பதற்காக பாயிண்டுகளை எழுதிபார்ப்பதற்கும், அறிவியல் பாடங்களை வரைந்து பழகுவதற்கும் இது மிகவும் நல்லது.


39. தெய்வம் துணையிருக்கும்..


ஆலயங்களுக்கு அவ்வப்போது செல்லுங்கள். மனப்பூர்வமாக வேண்டிக்கொள்ளுங்கள். ‘‘நான் நன்றாகப் படிக்கிறேன். எனக்கு முழு மதிப்பெண் கிடைக்க நீ அருளவேண்டும்’’ என்று பிரார்த்திக்கொள்ளுங்கள். ‘‘நான் நன்றாகப் படித்த பகுதிகளைத்தான் தேர்வில் கேட்க வேண்டும்’’ என்பது போன்ற வேண்டுதல்களும் இயல்பானதுதான் தப்பில்லை.

‘இதனால் என்ன பலன்? கோயிலுக்குப் போகவில்லையென்றால் சாமி மதிப்பெண்களைக் குறைத்துவிடுவாரா? இரண்டு வெவ்வேறு பகுதிகளைப் படிக்காத மாணவர்கள் சாமியை வேண்டிக்கொண்டால், யாருக்கு அவர் அருள் செய்வார்?’ என்பது போல் கேட்கக்கூடாது.

இதெல்லாம் இறைவனைப் பொறுத்த விஷயங்கள் அல்ல. நம் மனதைப் பொறுத்த விஷயம். ‘‘கடவுள் நம்மைக் கைவிடமாட்டார். நூற்றுக்கு நூறு வாங்க வைப்பார்’’ என்கிற நம்பிக்கை மனதுக்கு தெம்பை கொடுக்கும். ‘பரிட்சை ஜுரம்’ வராமலிருக்கும்.


40. தேர்ந்தெடுப்‘பேனா’?
பதில் தெரியாவிட்டால்தான் பரிட்சையில் எழுதும்போது தடை ஏற்பட வேண்டும் என்பதில்லை. பேனா சரியாக எழுதாவிட்டாலும் இதே நிலைதான். ஏற்கெனவே நன்கு பழகிய பேனாவையே தேர்வு எழுதப் பயன்படுத்துங்கள். இரண்டு பேனாக்கள் போதாது. மூன்று பேனாக்களையாவது தேர்வு எழுதும்போது எடுத்துச் செல்லுங்கள். மற்றவர்கள் சொல்வதற்காக இல்லாமல் பால்பாயிண்ட் பேனா, ஃபவுண்டன்பேனா ஆகிய இரண்டில் எது தடையில்லாமல் எழுத வருகிறது, நீண்ட நேரம் கைவலிக்காமல் எழுத முடிகிறது என்பதை யோசித்துப் பார்த்து முடிவு செய்யவும்.

41. வாங்கித்தான் ஆகவேண்டும்..


ஒரு முழு நீள ஸ்கேல், அரையடி ஸ்கேல் இரண்டையும் எடுத்துச் செல்லவும். சின்ன ஸ்கேல் வரைபடங்களுக்கு உதவும். பெரிய ஸ்கேல் மார்ஜின் போட உதவும். தரம் குறைந்த பால்பாயிண்ட் பேனாவால் மார்ஜின் கோடு போடும்போது நடுவில் இங்க் பரவிவிடும் அபாயம் உண்டு. பென்சில் அல்லது தரமான பால்பாயிண்ட் பேனாவால் கோடு போடவும். சிலசமயம் மார்ஜின் கோடு போட்ட பேனாவால் எழுதும்போது ஓட்டம் சரியாக இருக்காது. அதிகப்படி பேனா தேவை.


42. வரைபடப் பயிற்சி தேவை... தேவை!


பலரும் ஒன்றை செய்து பார்ப்பதில்லை. உலக வரை படங்களில் பாகங்களைக் குறித்து பிராக்டீஸ் செய்ய வேண்டும். இதற்காகச் செலவாகும் ஒரு சில ரூபாயைப் பெரிதுபடுத்தாமல் சில ‘மேப்’களை வாங்கி சரித்திரம் மற்றும் புவியியல் பாடங்களில் வரும் மேப் கேள்விகளுக்கான பதில்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். பிறகு பாடத்தில் இருக்கும் பகுதிகளோடு ஒப்பிட்டுப் பார்த்து சரிசெய்து கொள்ளுங்கள்.


43. ஒன்றுபட்டால் உண்டா வாழ்வு?


வாழ்வு உண்டு. மதிப்பெண் உண்டா என்பது நீங்கள் எப்படிப்பட்டவர்களுடன் ‘குரூப் ஸ்டடி’ செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. பத்து பேர் சீரியஸாக படிக்கும்போது ஒருவர் ஜாலியாக ஜோக் அடித்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், பரிட்சைக்குப் படிக்கும்போது இதனால் கவனம் சிதறுமே! எனவே, இதுபோன்ற கோமாளிகளை, படிக்கும் குழுவில் சேர்த்துவிடாதீர்கள். சேர்ந்து படிக்கும்போது ஒரு நண்பராவது உங்களைவிட புத்திசாலியாக இருந்தால்தான் உங்களுக்குச் சந்தேகம் ஏற்படும்போது அதைத் தீர்த்துக்கொள்ள முடியும்.


44. ஒரே நேரத்தில் ஒரே பாடம்?
வானத்தில் பறவைகள் ஒன்றாக, அழகானதொரு டிஸைனில் பறந்துகொண்டிருப்பதைப் பார்த்து வியந்திருப்போம். ஆனால், குரூப் ஸ்டடி அப்படியல்ல. ஒரு பாடத்தை எல்லோரும் முடித்த பிறகுதான் முதலில் முடித்தவரும் அடுத்த பாடம் படிப்பது என்பதெல்லாம் முட்டாள்தனம். அவரவர், தான் படிக்காத பாடத்தைப் படிக்க வேண்டும். சந்தேகம் வந்தால் கேட்டுத் தெளிவு பெறவேண்டும். இதுதான் சரியான முறை.

உங்கள் நண்பர் ஒருவர் சரியான தொணதொணப்பு. அவரோடு சேர்ந்து குரூப் ஸ்டடி செய்தால் நிமிடத்துக்கு ஒருமுறை சந்தேகம் கேட்டுக்கொண்டிருப்பார் என்றால், பரிட்சை நெருங்கும்போது அவருடன் சேர்ந்து படிக்க வேண்டாம். நண்பனை நட்டாற்றில் விடலாமா என்று கேட்கிறீர்களா? தேர்வு நெருங்கும்போது கொஞ்சம் சுயநலமாக இருப்பதில் தப்பில்லை, நண்பர்களே...

45. ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம்!


நாமே நமக்குள் சில ஒப்பீடுகளைச் செய்துகொள்வது பயன்தரும்.

பக்கத்தின் கீழ்பகுதியில் உள்ள அட்டவணையில் தேர்வுகளில் 100/100 வாங்கும், உங்களுக்கு நன்கு அறிமுகமான மாணவர்களின் பெயர்களை எழுதுங்கள். அவர்களால் நிறைய மதிப்பெண்கள் வாங்க முடிந்த காரணத்தை அடுத்துள்ள கட்டத்தில் எழுதுங்கள். மூன்றாவது மற்றும் நான்காவது கட்டங்களில் எந்தக் காரணங்களால் இவர்களால் நூற்றுக்கு நூறு வாங்க முடிந்ததோ அந்த காரணங்கள் உங்களிடம் இருக்கிறதா, இல்லை என்றால் ஏன் என்பதை எழுதுங்கள்.

என்ன எழுதியாச்சா? இப்போது நீங்கள் குறிப்பிட்டுள்ள காரணங்களில் எதிர்மறையான காரணங்கள் உண்டா என்பதை முதலில் பார்க்கலாம். அதாவது ‘டீச்சருக்கு அவனைப் பிடிக்கும்’, ‘அவளுக்கு எப்போதும் அதிர்ஷ்டம்’ என்பன போன்றவை. ‘அதிர்ஷ்டம் தேவை’ என்ற எண்ணம் வந்துவிட்டால், தேர்வுக்குத் தயராகும்போதெல்லாம் ‘அதிர்ஷ்டம் இருந்தால்தான் 100/100 கிடைக்கும். என்ன படித்து என்ன பயன்?’ என்று உள்மனம் யோசிக்கத் தொடங்கிவிடும். கவனம் சிதறி, படிப்பது மனதில் தங்காது.


இப்போது பிற காரணங்களைக் கவனியுங்கள். உதாரணமாக, நண்பன் எப்போதும் 100/100 மதிப்பெண்கள் பெறுவதற்கு இப்படி நீங்கள் குறிப்பிட்டிருக்கலாம்.

(அ) அன்று சொல்லிக் கொடுக்கப்படும் பாடங்களை அன்றே படித்துவிடுவான்.

(ஆ) பரிட்சையில் எதிர்பாராத கேள்வி வந்தாலும் சரியான விடையை எழுதிவிடுகிறான்.

(இ)பாடத்தில் சந்தேகம் ஏற்பட்டால் உடனுக்குடன் தெளிவுபடுத்திக்கொள்கிறான்அப்படியானால், நீங்கள் ஏன் அதுபோல் செய்வதில்லை? ஏதோ காரணத்தால் இதுவரை அவற்றை நடைமுறைப்படுத்தவில்லை என்றால், இனியாவது அப்படிச் செய்யலாமே!


ஒருவேளை நீங்கள் எழுதிய காரணங்கள் இப்படியும் இருக்கலாம்.

(அ) அவனுக்கு படிப்பதற்கு தனி அறை இருக்கிறது.

(ஆ) அவன் அப்பாவும் அம்மாவுமே நன்கு படித்தவர்கள். எனவே, அவனுக்குப் பாடத்தில் சந்தேகம் ஏற்பட்டால் உடனுக்குடன் அதை நீக்கிக்கொள்ள முடிகிறது.

இதுபோன்ற காரணங்களை உங்களுக்குப் பொருந்துமாறு செய்துகொள்வதில் பெரிய பிரச்னை இருக்காது. படிப்பதற்கு தனியறை கொடுக்க முடியாவிட்டாலும் தனி இடம் நிச்சயம் கொடுப்பார்கள்.

அப்பா, அம்மா அதிகம் படிக்காதவர்களாகவோ அல்லது அலுவல் காரணமாக பாடங்களை விளக்கப் போதிய நேரம் கிடைக்காத வர்களாக இருந்தாலோகூட கவலையில்லை. ஏதாவது ஒரு நல்ல ஆசிரியரிடம் டியூஷன் வைத்துக்கொள்ளலாமே!


46. எழுத்து... தலையெழுத்து?


வேகமாக எழுதும்போது கையெழுத்து அழகாக இருக்காதுதான். ஆனால், தெளிவாக இருக்க வேண்டும் இல்லையா? கிறுக்கலான, படிக்கவே சிரமம் தரும் கையெழுத்தைப் படிக்க நேரிடும் தேர்வாளருக்கு ‘‘இந்த மாணவருக்கு கொஞ்சமாவது மார்க்கை குறைத்தால் தப்பில்லை’’ என்பதுபோல் யோசிக்கத்தோன்றும்.

அழகான கையெழுத்து வாய்க்கப் பெறாதவர்கள் கூட நீங்கள் படித்த பாடத்தின் சுருக்கத்தை அக்கறையாக எழுதிப்பாருங்கள். மனதிலேயே ஒரு ரிவிஷனும் ஆச்சு... கையெழுத்தும் தெளிவாச்சு.


47. ‘படித்தவர்’களாக இருந்தால் போதாது.


பல மாணவர்கள் செய்யும் தவறு, எதையும் எழுதிப்பார்க்காததுதான். கணிதத் தேர்வுக்காகக்கூட இவர்கள் கணக்குகளைப் போட்டுப்பார்க்க மாட்டார்கள். தனக்கு வழிமுறை நன்றாகத் தெரியும் என்ற நம்பிக்கை. ஆனால், இதில் ஒரு சிக்கல் ஏற்பட வாய்ப்பு உண்டு. பரிட்சையின்போது தேவைப்படும் வேகத்தில் இவர்களால் எழுத முடியாமல் போகலாம் (பயிற்சி இல்லையே!). அதனால்தான் ‘‘எல்லாத்தையும் எழுத நேரமே இல்லை’’ என்று அங்கங்கே கையை உதறிக்கொள்கிறார்கள். எழுதிப் பழகிக்கொள்ளுங்கள்.


48. நான்கில் எது?


‘மல்ட்டிபிள் சாய்ஸ்’ கேள்விகள் இப்போது கேட்கப்படுகின்றன. சரியான விடை உறுதியாகத் தெரியாதபோது என்ன செய்வது? நீங்கள் மறக்காமல் செய்ய வேண்டியது ஒன்று உண்டு. அப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்காமல் விட்டால் நிச்சயம் நூற்றுக்கு நூறு கிடைக்காது ஏதோ ஒரு பதிலை எழுதியே ஆகவேண்டும்.


முதலில் கேள்வித்தாள் முழுவதையும் கவனமாக படியுங்கள். சிலசமயம் மல்ட்டிபிள் சாய்ஸ் கேள்விக்கான விடை வேறு ஏதாவது கேள்வியிலேயே கூட இருக்க வாய்ப்புண்டு.


எடுத்துக்காட்டு&


பாபரின் மகன் யார்? அ.அக்பர் ஆ.ஹ§மாயூன் இ.ஷாஜகான் ஈ.ஒளரங்கசீப் என்ற கேள்விக்கு விடை தெரியாதிருக்கையில், வேறு ஏதாவது ஒரு கேள்வியில் ‘பாபரின் மகன் ஹ§மாயூன் எப்படி இறந்தார்?’ என்று இருக்கலாம்.

இவ்வளவு நேரடியாக இல்லையென்றாலும் ‘தன் தாத்தா பாபரைவிட அக்பர் பெரும்புகழ் பெற்றார். எதனால் என்பதை விளக்குக’ என்று கேள்வி இருக்கக்கூடும்.


பாபரின் மகன் அக்பரா, ஹ§மாயூனா என்பதில் உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டிருந்தால், மேற்படி கேள்வியால் அது தீர்ந்திருக்கும். ஹ§மாயூன் என்ற சரியான பதிலை எழுதிவிடலாம்.



49. நீக்குங்கள்&கிடைத்துவிடும்..


சரியான விடை எது என்று தெரியாவிட்டாலும் தவறான விடைகளை நீக்கிவிட்டாலே கூட சிலசமயம் விடை கிடைத்துவிடும். இதைப் புரியவைக்க இதோ ஓர் (ரொம்ப எளிமையான) உதாரணம்.

ஜவஹர்லால் நேரு எந்த ஆண்டு இறந்தார்?

அ.1945 ஆ.1964 இ.1996 ஈ.1938

நேரு இறந்த வருடம் உங்களுக்கு சரியாகத் தெரியாவிட்டால்கூட நீங்கள் இப்படி யோசித்தால் விடை கிடைத்துவிடுமே! ‘நான் பிறப்பதற்கு முன்பே நேரு இறந்துவிட்டார். எனவே, 1996 நிச்சயம் சரியான விடை அல்ல. இந்தியாவின் முதல் பிரதமர் நேரு என்பது எனக்குத் தெரியும். இந்தியா சுதந்திரம் பெற்றது 1947&ஆம் ஆண்டு. எனவே, 1945, 1938 இரண்டும் சரியல்ல... இவ்வளவு யோசித்தால் போதுமே... மீதமிருக்கும் 1964தான் விடை என்பது புரியுமே!


50. நெருக்கத்தை கவனியுங்கள்..


‘மல்டிபிள் சாய்ஸ்’ கேள்விக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் அநேகமாக ஒரே மாதிரி இருந்தால் அவற்றில் ஒன்று சரியான விடையாக இருப்பதற்கு வாய்ப்பு அதிகம்.


எடுத்துக்காட்டு &


எந்த ஆண்டில் நடைபெற்ற ஒலிம்பிக் பந்தயத்தில் தடகள வீரர் ஜஸ்ஸி ஓவன்ஸ் நான்கு தங்கப் பதக்கங்களை வென்றார்?

அ.1936 ஆ.1940


இ.1984 ஈ.1920

இவற்றில் முதல் இரண்டு விடைகளும் அடுத்தடுத்த ஒலிம்பிக் வருடங்களாக, மிகவும் நெருக்கமாக இருப்பதைக் கவனித்தீர்களா? இவற்றில் ஒன்றே விடையாக இருக்க வாய்ப்பு மிகவும் அதிகம்
51. பெரும்பாலும் சரிதான்..

‘பெரும்பாலும்’, ‘ஏறத்தாழ’ போன்ற வார்த்தைகள் ஏதாவது ஒரு விடையில் இருந்தால் அது சரியான விடையாக இருக்க வாய்ப்பு அதிகம்.



52. மூளையைத் தட்டிப் பாருங்கள்.



இப்படி ஒரு கேள்வி கேட்கப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம்.

ராபர்ட் கிளைவ் ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியில் எந்தப் பதவியில் முதன்முதலாகச் சேர்ந்தார்?

அ.கவர்னர் ஆ. வைஸ்ராய் இ.தளபதி ஈ.எழுத்தர்


விடை உங்களுக்குத் தெரியவில்லை என்றாலும் கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசித்தால் இதைக் கண்டுபிடித்து விடலாம். மற்றவர்களைப்போல் இல்லாமல் ராபர்ட் கிளைவ் சேர்ந்த பதவிக்கும் இறுதியில் அவர் வகித்த பதவிக்கும் பெரிய வித்தியாசம் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் அவரை குறித்து மட்டும் இதுபோன்ற ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. தவிர, எந்த உயர் பதவியில் ராபர்ட் கிளைவ் குறித்து நாம் கேள்விப்படுகிறோமோ அது இப்படி ஒரு கேள்வியாக வர வாய்ப்பில்லை. இப்போது விடைகளை மீண்டும் ஒருமுறை மனதில் ஓட்டிப்பாருங்கள். யெஸ்... எழுத்தர் என்பதுதான் சரியான விடை!

இதே பாணியில் கீழே உள்ள கேள்விக்கு பதில் அளியுங்கள் பார்க்கலாம்.

1990&91ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டித்தொடரில் ஆன்டி ஜோன்ஸ் எத்தனை சதங்கள் அடித்தார்?

அ.மூன்று சதங்கள் ஆ.ஒரு சதம் இ.சதம் ஏதும் இல்லை ஈ.இரண்டு சதங்கள்


முதல் விடையைத் தவிர மற்றவற்றில் எந்த தனிச்சிறப்புமில்லை என்கிற காரணத்தினாலேயே நீங்கள் முதல் விடையைத் தேர்ந்தெடுக்கலாம். இப்படிப்பட்ட தேர்வுகள் பெரும்பாலும் சரியாகவே இருக்க வாய்ப்பு உண்டு.


53. உள்ளுணர்வு!



நிச்சயமான விடை என்பது தெரியாதபோது சிலசமயம் உங்கள் உள்ளுணர்வு சொல்லும் விடையைத் தேர்ந்தெடுக்கலாம். எப்போதோ அதை நீங்கள் படித்திருந்து அடிமனதில் அது தங்கியிருந்து இப்போது வெளிப்பட்டிருக்கலாம். இதையெல்லாம் படித்ததும் உங்களுக்கு ஒரு நியாயமான சந்தேகம் வரலாம். ‘விடை தெரியாவிட்டாலும் அதைச் சரியாக யூகிக்கலாம் என்று விதவிதமான டெக்னிக்குகளை சொல்லித்தருகிறீர்களே, இதெல்லாம் கேள்வித்தாளை உருவாக்குபவர்களுக்குத் தெரியாதா? ஒழுங்காகப் படித்தவர்கள் மட்டுமே விடையளிக்க முடிவது போல கேள்வியைத் தயாரித்துவிட்டால் என்ன செய்வது?’ கவலை வேண்டாம். ஆண்டுத் தேர்வுகளில் ஆசிரியர்களின் நோக்கம்,  மாணவர்களை சிக்கவைத்து மதிப்பெண்ணை குறைப்பதாக இருக்காது. மாணவர்களுக்கு உதவுவதுதான் அவர்களின் நோக்கமாக இருக்கும்.

54. கணக்குப் பாருங்கள்..


கணிதத்தேர்வு எழுதும்போது சில விஷயங்களில் கவனம் வேண்டும். விடைகளை எழுதும்போது அவற்றின் அளவைகளையும் குறிப்பிட்டிருக்கிறீர்க� ��ா என்பதை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள். உதாரணமாக, உங்கள் விடை நீளத்தை குறிக்கிறது என்றால், விடையாக கிடைத்த அளவுடன் மீட்டர் அல்லது சென்டிமீட்டர் என்பதைக் குறிப்பிட வேண்டும். பரப்பளவு என்றால் சதுர மீட்டர்.

இதுபோன்ற அறிவுரையைக் கேள்விப்பட்ட மாலினி, தன் கணிதத்தாளை ரிவைஸ் செய்யும்போது வெகுவேகமாக விடையின் இறுதியில் மீட்டர் என்று எழுதினாள். இரண்டு நீளங்களுக்கு இடையே உள்ள விகிதத்தை எழுதச் சொல்லும் கேள்வி அது. விகிதத்துக்கு ஏது அளவு? அதனால் அந்தக் கேள்விக்கான மதிப்பெண்ணை இழந்தாள்.

எனவே, எதை எழுதுவது என்பதுடன் எதை எழுதாமல் இருப்பது என்பதிலும் தெளிவு தேவை.


55. புள்ளிக்குப் பிறகு...


கணித் தேர்வில் எவ்வளவு தசம ஸ்தானங்கள்வரை கணக்கிடுவது என்பதில் குழப்பம் வரலாம். பொதுவாக, புள்ளிக்குப் பிறகு இரண்டு இடங்களுக்கான எண்ணிக்கைகளை எழுதினாலே போதுமானது (5.73, 125.32 என்பதுபோல்). ஒரு கேள்வியில் கொடுக்கப்பட்டிருக்கும் எல்லா எண்களிலுமே புள்ளிக்குப் பிறகு மூன்று இடங்கள் கொடுக்கப்பட்டிருந்தால் உங்கள் விடையும் அதுபோலவே இருக்கலாம்.

சிலர் மிகவும் நீளமாக தசம ஸ்தானங்களை எழுதிக்கொண்டே போவார்கள் (10.3273546831 என்பதுபோல). இதனால் நேரம் வீணாகிறது என்பதோடு தாளைத் திருத்துபவரின் எரிச்சலையும் சம்பாதித்துக்கொள்ள நேரிடும்.


56. இடையில் வராது!


பாதிக் கணக்கில் புள்ளிக்கு பிறகு பல இடங்கள் இருக்கும்படி ஒரு கணக்கு அமைந்தால், நீங்கள் அந்தக் கணக்கை சரியாக போட்டிருக்கிறீர்களா என்பதை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துக்கொள்வது நல்லது. ஏனென்றால் இப்படி நீளமான, தசமத்துக்குப் பிந்திய எண்ணிக்கையெல்லாம் பொதுவாக விடையில் வேண்டுமானால் வரலாமே தவிர இடையில் வருவதில்லை.



57. இடது வலது!


கணிதத் தேர்வின்போது ரஃப்பாக நீங்கள் செய்யும் கணக்குகளுக்கு, தாளின் வலப்பக்கத்தை விட்டுவிடலாம்.

அதாவது இடப்புறமாக சின்ன மார்ஜின், நடுவே உள்ள பெரிய பகுதியில் தெளிவான வழிகள் மற்றும் விடைகள். வலப்புற ஓரத்தில் நாம் ரஃப்பாகப் போடும் கணக்குகள், சரியா?

58. தெளிவாக...


ரஃப்பாகப் போடும் கணக்குகளையும் தெளிவாகவே போடவேண்டும். தேர்வாளருக்கு ஒரு நல்ல கருத்து உண்டாகும். தவிர, கோழிக்கிறுக்கலாகப் போட்டால் நாமே எண்களை மாற்றிப் புரிந்துகொள்ள நேரும்.


59. இரண்டுக்கும்...


அதேபோல் ஒரு கணிதக் கேள்வியில் இரண்டு பகுதிகள் இருந்தால் இரண்டு விடைகளையும் அடிக்கோடிட மறக்காதீர்கள்.


60. துணை சமன்பாடு!


ஒரு விடையில் மூன்று துணை சமன்பாடுகள் வருகின்றன (ஷிuதீ மீஹீuணீtவீஷீஸீs). இவற்றைப் பொருத்தி இறுதி விடையைக் கண்டுபிடிக்க வேண்டுமென வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு துணை சமன்பாட்டையும் தெளிவாக எழுதி அடிக்கோடிட்டுக் கொள்ளுங்கள். தவறு நிகழ்வதை இது தடுக்கும். திருத்துபவருக்கும் ஈஸி!


61. வருடம் அவசியம்!


வரலாற்றுப் பாடங்களுக்கான விடைகளில் வருடங்களைக் குறிப்பிட மறக்காதீர்கள். கேள்வியில் வருடம்தேவை என்று குறிப்பிடவில்லை என்றால்கூட இது அவசியம்.


62. அடியில் கோடு இருக்கட்டும்..


பொருளாதாரம் போன்ற பாடங்களில் நிறைய தியரிகளாகவே இருக்கும். பக்கம் பக்கமாக, பத்தி பத்தியாக எழுதும்போது விடையின் முக்கிய சொற்றொடர்களை அடிக்கோடிட்டால் திருத்துபவர், அனைத்துப் பகுதிகளிலும் கவனம் செலுத்தி அதிக மதிப்பெண்கள் தர வாய்ப்பு அதிகம்.



63. ஓவியராக மாறுங்கள்..


இயற்பியல் பாடங்களில் வரைபடங்கள் மிக அவசியம். ஒரு பரிசோதனையைக் குறிப்பிடுமாறு கேள்வியில் குறிப்பிடப்பட்டிருந்தால� �� ‘படம் வரைந்து’ என்ற வார்த்தைகள் கேள்வியில் இல்லையென்றால்கூட நீங்கள் படம் வரைந்ததுதான் ஆகவேண்டும்.



64. மையமே நல்லது..

வரைபடங்களை, தாளின் நடுப்பகுதியில் வரைவது நல்லது. பளிச்சென்று இருக்கும். பாகங்களைக் குறிப்பிட, நுணுக்கி நுணுக்கி எழுவதையும் இது குறைக்கும்.

65. ஸ்கேல் தேவையா, இல்லையா?


நிச்சயம் இந்த பதிலில் வரைபடத்துக்கு மதிப்பெண் உண்டு என்று படும் வரைபடங்களை ஸ்கேலின் துணை கொண்டு தெளிவாக வரையவேண்டும். தலைப்பு கொடுக்க மறக்க வேண்டாம் மாறாக ’ரஃப் வரைபடங்கள்’ என்றால் ஸ்கேல் இல்லாமல் தோராயமாக வரையலாம்.

66. பொருத்தம்..


Ôபொருத்துக’ வகைக் கேள்விகளில் அப்படியே கேள்வியை எழுதிவிட்டு அம்புக்குறிகளால் பொருத்தக் கூடாது. இப்படிச் செய்தால் முழு மதிப்பெண்கள் கிடைக்காமல் போகலாம்.

கி) திரவ உலோகம்& வீவீவீ) பாதரசம் ஙி) பாக்ஸைட்& வீ) அலுமினியம் சி) இதுவும் கார்பன்தான்& வீவீ) வைரம், என்கிற வகையில் எழுதினால்தான் நல்லது.


67. காதுக்கும் பங்கு கொடுங்கள்..


‘வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்’ என்பார்கள். வாய்விட்டுப் படித்தால் மேலும் மனதில் பதியும் என்பதும் உண்மை. காரணம், கண்கள் வாக்கியங்களில் மேய, வாய் அதைப் படிக்க, காதுகள் அதைக் கேட்க, பல விதங்களில் மனதால் அதைப் பதியவைத்துக்கொள்ள முடிகிறது. எனவே, சத்தமாக இல்லாவிட்டாலும் வாய்விட்டுப் படிப்பது நல்லதுதான்.


68. தயாராகுங்கள்..


கல்லூரிப் படிப்பை முடித்துவிட்ட உங்கள் அண்ணன் ‘‘ஏண்டா நீ பரிட்சைக்குப் படிக்கும்போது திடீர்னு பவர்கட் ஆனா என்ன செய்வே?’’ என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? ‘‘நல்லதே நினைக்கத் தெரியாத ‘சேடிஸ்ட்’டுடா நீ’’ என்று கடுகடுக்கிறீர்களா? அவன் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். நீங்கள் தயாராக இருக்க வேண்டும். வீட்டிலுள்ள எமர்ஜென்ஸி விளக்கை தினமும் சார்ஜ் செய்து வைத்துக்கொள்ளுங்கள். தடிமனான மெழுகுவத்திகள் பக்கத்தில் இருக்கட்டும். தீப்பெட்டியும்தான்.


69. டைட்டானிக் ஆகாமலிருக்க...


சில வீபரீதங்கள் நடந்துவிடுமோ என எண்ணி உடல் நலத்திலும் கவனமாக, முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதுவும் நடக்காது என்ற குருட்டு தைரியம் சரி அல்ல. அதேசமயம் ஏதோ நடந்துவிடுமோ என்ற நடுக்கமும் அதைத் தொடர்ந்து எதுவும் செய்யாமல் கிலியில் மூழ்கிவிடுவதும் சரியல்ல. தேவை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான்.

டைட்டானிக் கப்பலின் உட்பகுதி நீர்புகாத பதினாறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இவற்றில் நான்கில் நீர் புகுந்தபோதும் கப்பலின் மிதவைத் தன்மை பாதிக்கப்படாது என்கிற வகையில் வடிவமைக்கப்பட்டிருந்ததால் இது ‘மூழ்கடிக்க முடியாத கப்பல்’ என்றே விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால், பனிப்பாறை ஒன்றில் இந்தக் கப்பல் மோதியபோது ஐந்து பகுதிகள் தெறித்துப்போயின. கப்பல் மூழ்கியது.

பனிப்பாறையில் மோதாமல் மேலும் எச்சரிக்கையாகக் கப்பலோட்டிகள் செயல்பட்டிருக்கலாமே... இதற்கு வடிவமைப்பவர் என்ன செய்ய முடியும் என்கிறீர்களா? 2,284 பயணிகளுக்கான கப்பல் அது என்றாலும் ஏதாவது விபரீதம் ஏற்பட்டால் 1,178 பயணிகள் தப்பிக்கும் வகையில்தான் படகுகளின் எண்ணிக்கை இருந்தன. அலட்சியத்தால் ஏற்பட்ட அலங்கோலம் இது. உரிய நோய்த்தடுப்பு ஊசிகளைப் போட்டுக் கொள்ள நினைவுபடுத்தத்தான் இதைச் சொல்கிறோம்.

70. காக்க... காக்க!



ஆண்டுத் தேர்வுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இருக்கலாம். ஆனால், எங்கே போனாலும் கையில் ஒரு பாடப் புத்தகத்தையோ நோட்டுப் புத்தகத்தையோ வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நாம் எதிர்பாராத விதத்தில் காத்திருக்க வேண்டிவரலாம். அது பேருந்து நிறுத்தமாக இருக்கலாம். மருத்துவரின் கிளினிக்காக இருக்கலாம். இப்படிக் காத்திருக்கும் நேரத்தை வீணாக்க வேண்டாமே...



71. அதில் ஓகே... இதில்?


ஊகூம்... பேருந்து நிலையத்தில் நிற்கும்போது படிக்கலாம் என்றோமே தவிர பேருந்துக்குள் படிப்பது கண்ணுக்குக் கெடுதல் என்பதை மறந்துவிடாதீர்கள். ரயில் பயணம் என்றால் பரவாயில்லை.




72. உன்னை எண்ணிப் பாரு..


உங்களையே நீங்கள் விமரிசித்துக்கொண்டதுண்டா ?

இங்கே கூறப்பட்டுள்ள ஆலோசனைகளை ஏற்று, பின்பற்றத் தொடங்கும்போது நடுநடுவே உங்களையே விமரிசித்துக்கொள்வது அவசியம். ‘அட, திட்டமிட்டபடி படிக்கிறேனே, சபாஷ்!’ என்பதுபோலவோ, ‘வேகமா படிக்கிறேனே தவிர, முழுக்கப் புரிஞ்சிகிட்டுப் படிக்கலையே...’ என்பதுபோலவோ விமரிசனம் இருக்கலாம். அந்த விமரிசனத்தின்படி உங்களிடம் ஏதாவது குறை தென்பட்டால் அதை உடனடியாக சரிசெய்து கொள்ளுங்கள்.


73. மாறுதலில் தப்பில்லை..


திட்டமிடுவது, அட்டவணை போட்டுக்கொள்வது என்பதெல்லாம் அவசியம். அதைவிட அவசியம்,அதன்படி நடப்பது என்பது உண்மைதான். ஆனால், ஒரு சில மாறுதல்கள் தேவைப்பட்டால் அவற்றைச் செய்துகொள்வதில் தவறில்லை.

தினசரி அட்டவணையைப் பின்பற்றும்போது நடைமுறையில் சில மாறுதல்கள் அவசியம் என்று படலாம். அதனால் மொத்தத் திட்டமும் மாறிவிடாது என்கிற பட்சத்தில் இந்த சிறு மாறுதல்களில் தவறில்லை.


74. வகுப்பே ஏற்றது..

தினசரி பாடங்களில் எழும் சந்தேகங்களை நண்பர்களிடம் கேட்டுத் தெளிவு பெறலாமா?அல்லது பள்ளி முடிந்தபிறகு டீச்சர் அவரது அறையில் தனித்திருக்கும்போது கேட்டுத் தெரிந்து கொள்வதா? இவை எல்லாவற்றையும்விட சிறப்பான வழி ஒன்று இருக்கிறது. அது, பாடம் நடத்தும்போதே வகுப்பில் சந்தேகம் கேட்பது. ஏனோ நிறைய மாணவர்கள் இதற்குக் கூச்சப்பட்டுக்கொண்டு சந்தேகத்தை மனதிலேயே வைத்துக் கொள்கிறார்கள். சந்தேகம் கேட்கும் மாணவனை ஆசிரியருக்குப் பிடிக்காது என்பதில்லை. அவனது அக்கறை அவருக்கு மகிழ்ச்சியையே தரும். தவிர, பாடத்தின் ஒரு பகுதியில் சந்தேகம் எழுந்தால் பின்னால் வரும் பகுதிகளிலும் அந்த சந்தேகம் தொடர்ந்து கொண்டேயிருக்கும். எனவே வகுப்பிலேயே சந்தேகங்களைக் கேட்கலாம். பிற மாணவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.

75. ஊதித் தள்ளுங்கள்..


பரிட்சைக்குத் தயாராகும்போது ஒரு படபடப்பு வரலாம். ‘இன்னும் படிக்க வேண்டியது (அல்லது ரிவைஸ் செய்ய வேண்டியது) நிறைய இருக்கிறதே... எப்படி முடிக்கப் போகிறோம்?’ என்ற பதற்றம். தேர்வு மையத்துக்குள் நுழையும்போது இந்தப் படபடப்பு மேலும் பலமடங்கு அதிகமாகலாம். அப்போது ஆழமாக மூச்சுவிட்டுப் பழகுங்கள். அப்படி மூச்சை வெளியே விடும்போது உங்கள் கவலைகளையும் சேர்த்து வெளியே ஊதிவிடுவதாக எண்ணிக் கொள்ளுங்கள். படபடப்பு குறைந்து அமைதி வரும்.


76. ஓய்வென்பது இதுதான்..


தேர்வுக்குப் படிக்கும் நேரத்தில் கூட இடையிடையே ஓய்வு இருக்கலாம். ஏதோ ஓரிரு நிமிடங்களுக்கு மட்டுமே நிஜமான ஓய்வு. மற்றபடி ‘பிடிக்காத பாடத்திலிருந்து பிடித்த பாடத்தைப் படிப்பதுதான் ஓய்வு’. இப்படித்தான் பொருள் கொள்ளவேண்டும் ஓய்வுக்கு!


77. கும்பகர்ணனாக வேண்டாம். லட்சுமணனாகவும் வேண்டாம்!


தலைப்பைப் படித்துவிட்டு ஆச்சரியப்பட வேண்டாம். ராமாயணத்தில் தொடர்ந்து தூங்குபவன் கும்பகர்ணன். வனவாசத்தின்போது தொடர்ந்து பதினான்கு வருடங்கள் சிறிதும் தூக்கமின்றி அண்ணன் ராமனுக்குக் காவல் இருந்தாராம் லட்சுமணன்.

சகோதர பாசத்தில் லட்சுமணன் அப்படி செய்தது சரி. ஆனால், தேர்வு நாட்களுக்கு நடுவே தொடர்ந்து கண் விழித்துக்கொண்டு கொஞ்சமும் தூங்காமல் இருந்துவிடக்கூடாது.

இரவு பத்து மணிக்குத் தூங்கிவிட்டு காலை நான்கு மணிக்கு எழுந்திருப்பதோ, நள்ளிரவைத் தாண்டி ஒரு மணிக்கு தூங்கிவிட்டு காலை ஆறு மணிக்கு எழுந்து படிப்பதோ உங்கள் விருப்பம். ஆனால், தூங்காமல் இருந்துவிடாதீர்கள்.
சிறிதும் தூங்கவில்லையென்றால் அடுத்த நாள் தேர்வின்போது தலைசுற்றல் ஏற்படவோ, பதில் ஒன்றும் நினைவுக்கு வராமல் போகும் நிலை வரவோ செய்யலாம்.

மற்றபடி எந்தவித உடல்நலக்கோளறும் இல்லாதவர்கள் இரவில் தூங்கப்போவதற்கு முன் ஒரு முறை குளிக்கலாம். தேர்வு நாட்களில் ஆனந்தமாக அனுபவித்துக்கொண்டும் குளிக்கலாம். முடிந்தால் அப்போது பாட்டுப் பாடலாம், விசில்கூட அடிக்கலாம்.

மனதுக்குக் கொஞ்சம் உற்சாக டானிக் ஏற்றிக்கொண்ட மாதிரி இருக்கும்.

78. புலம்பலை நிறுத்துங்கள்...


காக்கைக்கும் கழுகுக்கும் ஒருமுறை பந்தயம்... யார் முதலில் இமயமலையை அடைவது என்று. இரண்டும் பறக்கத் தொடங்கின. கிட்டதட்ட ஒரே வேகத்தில் சென்று கொண்டிருந்தன.


அப்போது கீழே இருந்த ஒரு மனிதனின் பிணத்தைக் கழுகு பார்த்தது. அந்த பிணத்தின் அருகே யாருமில்லை. அதைச் சுவைக்க வேண்டும் என்ற ஆசை ஒரு கணம் ஏற்பட்டாலும் ஜெயிப்பதுதான் முக்கியம் என்று தீர்மானித்து, தொடர்ந்து பறந்தது.

மேலும் சிறிது நேரம் செல்ல, தெருவில் இறந்து கிடந்த ஓர் எலியின் மீது காகத்தின் கண்கள் பதிந்தன. அதனால் ஆசையை அடக்க முடியவில்லை. இறங்கிவந்து, எலியைச் சுவைத்தது. பின் நிமிர்ந்து பார்த்தபோது கழுகு வெகு தொலைவில் பறந்துகொண்டிருப்பது தெரிந்தது. காகம் இடிந்துபோனது. ‘‘ஐயோ... முட்டாள்தனம் செய்துவிட்டேனே!’’ என எண்ணியபடி தொடர்ந்து அரைமணி நேரம் அழுதது. அப்போது அந்தப் பக்கமாக வந்த சிட்டுக்குருவி, காரணம் கேட்டது. பிறகு ‘‘தவறு செய்துவிட்டாய்தான். ஆனால், அதற்காக அதையே நினைத்துக்கொண்டிருப்பதா� ��் பலன் உண்டா? இப்போது வெற்றி வாய்ப்பு மேலும் குறைந்துவிட்டதே. உடனே பறக்கத் தொடங்கு’’ என்றது. காக்கையும் பறக்கத்தொடங்கியது. ஆனால், கழுகு இமயமலையை அடைந்து, கால்மணி நேரத்துக்குப் பிறகுதான் காக்கையால் செல்ல முடிந்தது. அப்போது காகத்திற்கு தாங்க முடியாத சோகம். ‘எலியை தின்றுவிட்டு உடனே பறக்கத்தொடங்கி இருந்தால்கூட முன்னால் வந்திருப்போமே... அரைமணி நேரம் அழுததால்தானே இந்தத் தோல்வி!’

திட்டமிட்டபடி ஒருநாள் படிக்கமுடியவில்லை என்றால் அதையே நினைத்துக்கொண்டு அடுத்தடுத்த நாட்களிலும் கவனத்தை சிதறவிடக்கூடாது. ஒருநாள் போனது போகட்டும் என சமாதானம் செய்து கொண்டு தொடர்ந்து வரும் நாட்களில் திட்டமிட்டபடி படிக்க வேண்டும்.


79. மாறுதல் அவசியம்..
எப்போது பார்த்தாலும் படித்துக்கொண்டே இருக்க நான் என்ன ரோபோவா?’ என்று கூறுபவர்களுக்கு... இல்லவே இல்லை! நீங்கள் நிச்சயம் இயந்திர மனிதன் இல்லை. நடுநடுவே விளையாட்டு, இனிய இசை என்று கொஞ்சம் கவனத்தைத் திருப்பலாம். தவறில்லை.

ஆனால், தேர்வு இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வந்துவிடும் எனும் நிலை இருக்கும்போது வெளியில் சென்று விளையாட வேண்டாம். இப்படித்தான் ஒருமுறை விஜயசாரதி, தேர்வுக்கு முன் தினம் கிரிக்கெட் விளையாடப் போனான். ‘‘மணிக்கணக்கில் படித்துக்கொண்டிருக்கிறே� ��். ஒரு சின்ன ரிலாக்ஸேஷன், சரியாக அரைமணி நேரத்தில் வந்துவிடுவேன்’’ என்றபடி கிளம்பினான். அவன் அப்பா இதற்கு சம்மதித்தார் என்றாலும் அம்மாவுக்கு விருப்பம் இல்லை. ‘‘அதெப்படி அரைமணி நேரத்தில் கிரிக்கெட் ஆடிவிட்டு வரமுடியும்?’’ என்றாள்.


ஆனால், சரியாக அரைமணி நேரத்தில் விஜயசாரதி வீட்டுக்கு வந்து சேர்ந்தான். தனியாக அல்ல. அவனை இரண்டுபேர் தாங்கிப் பிடித்து அழைத்து வந்தார்கள். அவன் முகத்தில் பெரும் வேதனை. ‘‘என்னடா ஆச்சு?’’ என்று அவன் அப்பாவும் அம்மாவும் பதறினார்கள்.

நடந்தது இதுதான். தன்னை நோக்கி வந்த பந்தை வேகமாக அடித்துவிட்டு, எதிர்முனையை நோக்கி விஜயசாரதி ஓடியபோது பாதியில் விழுந்துவிட்டான். வலக்காலில் கடும் சுளுக்கு.

ஐஸ் ஒத்தடம் கொடுத்தார்கள். மருத்துவரிடம் அழைத்துச் சென்று காட்டினார்கள். ஆனால், கால் சரியாக சில நாட்கள் ஆகிவிட்டன. இந்த வலியின் காரணமாக பாடத்தில் முழுமையாக கவனம் செலுத்த முடியாமல் போய்விட்டது அவனுக்கு. பாவம்!

80. முன்னதாக அறியுங்கள்..


சிலசமயம் பத்தாவது மற்றும் ப்ளஸ் டூ பொதுத்தேர்வுகளை உங்கள் பள்ளியில் இல்லாமல் வேறொரு தேர்வு மையத்தில் எழுத வேண்டியிருக்கலாம். பரிட்சைக்கு ஒருநாள் முன்பாவது அங்கு சென்று பார்ப்பது நல்லது. செல்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பதைப் பற்றிய தெளிவு கிடைக்கும். எது உங்கள் தேர்வு அறை என்பதையும்கூடத் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது (இந்த ஆலோசனை, உங்கள் பள்ளியிலே நீங்கள் தேர்வு எழுதுகிறீர்கள் என்றால்கூடப் பொருந்தும்). தேர்வுக்கு சில நிமிடங்களுக்கு முன் அறையை கண்டுபிடிக்க டென்ஷனோடு அலைவதைத் தவிர்க்கலாம்.


81. நீர் என்ன செய்யவேண்டுமென்றால்...


தேர்வுகளின்போது மறக்காமல் தண்ணீரை எடுத்துச் செல்லுங்கள். காய்ச்சி ஆறவைக்கப்பட்ட தண்ணீர் தேர்வு மையங்களில் வைக்கப்பட்டிருக்கும் நீர் குடிப்பதற்கு ஏற்றதாகக்கூட இருக்கலாம். ஆனால் எதற்கு ரிஸ்க்?

82. பருத்தியே தேவை..


‘எதுக்குதான் இந்தக் கோடை நாட்களிலே முழுப் பரிட்சை வைக்கறாங்களோ?’ என்று வெறுப்பாகக் கூறினான் கார்த்திகேயன். வேறொன்றுமில்லை... தேர்வின்போது வியர்த்துக் கொட்டி, அவன் கையிலுள்ள வியர்வை, தேர்வுத் தாளிலும் பட்டு போதும் போதுமென்றாகிவிட்டது.


தேர்வு நாட்களை மாற்றி அமைப்பது நம் கையில் இல்லையென்றாலும் வேறு சில நடவடிக்கைகளை எடுத்துக்கொள்வது நம் கையில்தான் உள்ளது. வியர்வையை உறிஞ்சக் கூடியது பருத்தி உடைகள். எனவே, அவற்றையே அணிந்து தேர்வுக்குச் செல்லுங்கள். கைக்குட்டைகளைவிட சிறிய துவாலைகளை எடுத்துச் செல்லலாம். அவையும் பருத்தியினால் ஆனவையாக இருக்கட்டும்.


83. ஒத்திப் போடலாமா?


‘பத்து மணிக்குப் பரிட்சை. ஒன்பதரைக்குக் கிளம்பிடணும். சைக்கிள்தானே, கால்மணி நேரத்தில் போயிடலாம்’ என்று திட்டமிட்டாள் அபர்ணா. மணி ஒன்பதரை ஆனபோது இன்னும் பத்து நிமிஷம் படித்துவிட்டுக் கிளம்பலாம். ஒருவழியாக ஒன்பதே முக்காலுக்குக் கிளம்பினாள். அன்று அவள் போகும் பாதையில் ஒரு சாலையை முழுவதுமாகத் தோண்டி வைத்திருந்தார்கள். மாற்றுப்பாதை வழியாகப் போகவேண்டியிருந்தது. அந்தச் சாலையில் அன்று யாரோ வி.ஐ.பி. செல்வதால் பத்து நிமிடங்களுக்கு போக்குவரத்தை நிறுத்திவைத்துவிட்டார்க� ��். அன்று பத்து நிமிடங்கள் தாமதமாகத் தேர்வு எழுத நுழைந்தாள் அபர்ணா. அந்தப் பதற்றத்தில் கேள்வித்தாளை வாங்கியபிறகும் கால் மணி நேரத்துக்கு எழுதத் தொடங்க முடியவில்லை அவளால். எதிர்பாராதவை நடக்கலாம் என்பதை மனதில் கொண்டு, குறைந்தது அரை மணிநேரமாவது முன்னதாக தேர்வு மையத்தில் இருக்குமாறு கிளம்புங்கள். தேர்வு மையத்திலிருந்து வீட்டின் தூரம் அதிகமாக ஆக அரைமணி நேரம் என்பது மேலும் அதிகமாக வேண்டும்.


84. முழுக்கப் படியுங்கள்..


கேள்வித்தாள் கொடுக்கப்பட்டவுடன் ஆர்வமாக முதல் பக்கத்தில் இருந்த கேள்விகளைப் படித்தாள் சந்திரா. உற்சாகமடைந்தாள். பதில் தெரிந்த கேள்விகள்தான். விறுவிறுவென எழுதத் தொடங்கினாள். முதல் பக்கத்தின் கடைசியில் ஒரு கேள்வி கேட்டிருந்தார்கள். விரிவான பதில் தேவைப்படும் கேள்வி அது. சுமாராகத்தான் அந்த பதில் அவளுக்குத் தெரியும். ஓரிரு பாயிண்ட்டுகள் மறந்துபோய்விட்டிருந்தன.
தெரிந்தவரை எழுதினாள். கேள்வித் தாளின் அடுத்த பக்கத்தைப் பார்த்தவளுக்கு அதிர்ச்சி. காரணம், பின் பக்கத்தில் ‘அல்லது’ என்ற வார்த்தைக்குப் பிறகு வேறொரு கேள்வி கொடுக்கப்பட்டிருந்தது. இந்தக் கேள்விக்கான பதில் சந்திராவுக்கு நன்றாகத் தெரியும். இரு கேள்விகளில் ஒன்றை எழுத வேண்டும் எனும்போது அவ்வளவாக பதில் தெரியாத கேள்விக்கு விடை எழுதியதற்குக் காரணம் கேள்வித்தாளை முழுமையாகப் படிக்காததுதான். இந்தத் தவறை நீங்கள் செய்யாதீர்கள்.

85. தப்பில்லை, கேளுங்கள்..


தேர்வின்போது ஒரு கேள்வி புரியவில்லை, கேள்வியை எந்தப் பொருளில் எடுத்துக் கொள்ளவேண்டும் என்பது புரியவில்லை & என்றால் தேர்வுக் கண்காளிப்பாளரிடம் மெதுவான குரலில் பணிவாக அதைக் கேட்கலாம். நினைவு வைத்துக்கொள்ளுங்கள் & கேள்விக்கான பதிலை நீங்கள் கேட்பதாக அவர் எண்ணிக்கொள்ளக்கூடாது. அப்போது அவர் உங்களுக்கு உதவ வாய்ப்பு அதிகம்.


86. ஒன்று அதிகமாக... ஓகே?


சிறு கேள்விகளில் பத்து கொடுத்து எட்டுக்கு விடை எழுதச் சொல்கிறார்கள் என்று வையுங்கள். ஏழு கேள்விகளுக்கு பதில் தெரிந்திருக்கிறது. எட்டாவதாக எந்தக் கேள்வியைத் தேர்வு செய்வது என்பதில் ஒரு சிக்கல்... காரணம், இரண்டு கேள்விகளுக்கான பதில்கள் உங்களுக்குத் தெரிந்திருந்தாலும் அவை முழுமையான பதில்களா என்பதில் சந்தேகம். இந்தச் சூழ்நிலையில் இரண்டையுமே எழுதிவிடலாம். தப்பில்லை. கருணையுள்ள தேர்வாளர் என்றால் தவறாக அதிகப்படி கேள்வியை எழுதியதாக எண்ணி அவற்றில் முழுவதும் சரியான விடையை மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால், கவனம் இருக்கட்டும். இதுபோன்ற டெக்னிக்கை ஏதாவது ஒரு பகுதிக்கு மட்டும் & அதுவும் சிறிய கேள்விகளுக்கானவற்றில் மட்டும் & பயன்படுத்துங்கள். இல்லாவிட்டால் தேர்வாளர் உங்கள் நோக்கத்தைப் புரிந்துகொண்டு எரிச்சலடையலாம். அது மதிப்பெண்ணைக் குறைத்தாலும் விடலாம்.


87. தள்ளிப் போடவேண்டாம்..


சிலர் தங்கள் பதில்களின் முக்கிய பகுதிகளை அடிக்கோடிட நினைப்பார்கள். எல்லா பதில்களையும் எழுதி முடித்தபிறகு இறுதியில் செய்துகொள்ளலாம் என்று முடிவெடுப்பார்கள். வேண்டாம். கடைசியில் எல்லா விடைகளையும் படித்துப் பார்க்க ஒருவேளை நேரமில்லையென்றால் இதைச் செய்ய முயாமல் போகும். ஒரு பதிலின் ஐந்து முக்கியப் பகுதிகளில் இரண்டை மட்டும் அடிக்கோடிட்டால்,மற்றவை தேர்வாளரின் கவனத்தை ஈர்க்காமல் போய் மதிப்பெண் குறைந்துவிடவும் வாய்ப்பு உண்டு.

88. நீட்டி முழக்க வேண்டாம்..


‘நைட்ரஸ் ஆக்ஸைடின் தன்மைகள் இரண்டைக் கூறு’ என்று கேள்வி. இரண்டு மதிப்பெண்களுக்கான கேள்வி அது.

உங்களுக்கு அந்த ரசயானப்பொருளின் எட்டுத்தன்மைகள் தெரியும் என்றால் எட்டையும் பட்டியல் இடவேண்டாம். ஏதாவது இரண்டு தன்மைகளைக் குறிப்பிட்டால் போதுமானது. தேவையில்லாமல் எழுதப்படும் பதில்களுக்கு மதிப்பெண் கிடையாது என்பதோடு உங்களுக்கும் நேரம் விரயம், திருத்துபவருக்கும் இதனால் எரிச்சல் வரலாம்.

ஒருவேளை கேள்வி இப்படியிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ‘நைட்ரஸ் ஆக்ஸைடின் முக்கிய தன்மைகள் இரண்டினைக் கூறுக’.


அப்போது நீங்கள் ஏதேனும் இரண்டு தன்மைகளை எழுதிவிட்டு வந்தால் போதாது. முக்கியமான தன்மைகளில் இரண்டைத்தான் குறிப்பிட வேண்டும்.

‘மூன்று முக்கியமான தன்மைகள் நினைவுக்கு வருகிறதே... அவற்றில் எதை விடுவது என்று தெரியவில்லையே’ என்று குழம்பினால் மூன்றையும் எழுதிவிடுங்கள்.

அந்த ரசாயனப் பொருளின் ஒரு முக்கியமான தன்மையும், ஒரு முக்கியமில்லாத தன்மையும் மட்டுமே நினைவுக்கு வந்தால் ‘முக்கியமான தன்மையைத்தானே கேட்டிருக்கிறார்கள்’ என்று நினைத்துக்கொண்டு அதை மட்டும் எழுத வேண்டாம். உங்களுக்குத் தெரிந்த இரண்டு பதில்களையும் எழுதிவிடுங்கள். ‘இதுவும் இந்த மாணவருக்கு முக்கியமாகப் பட்டிருக்கிறது’ என்று தேர்வாளர்கள் எண்ணி முழு மதிப்பெண் வழங்கக்கூடும்.


89. ஒரே ஒரு அடி & போதும்


பிழை வந்தால், எராஸெக்ஸ் போன்ற வெள்ளை பெயிண்ட்டினால் அழிக்கக் கூடாது. சிலர் தவறாக எழுதிவிட்ட வார்த்தை தெரிந்துவிடக்கூடாது என்று அதன்மீது இங்க்கினாலேயே மெழுகுவார்கள். இதனால் மறுபக்கம் உள்ள எழுத்துக்களைத் தெளிவாகப் படிக்க முடியாது. ஒரே ஒரு அழுத்தமான குறுக்குக் கோடு போதும்.


90. இதுபரவாயில்லை..


சிவப்பு மசியால் அடிக்கோடிட வேண்டாம். சொல்லப்போனால் தலைப்புகள், துணைத் தலைப்புகள் ஆகியவற்றை வேறு மசியில் எழுதினாலே போதுமானது. அதாவது பொதுவாக நீலநிற மசியில் எழுதினால் மேற்சொன்னவற்றை, கறுப்புநிற மசியால் எழுதலாம். இப்படி எழுதுவது பார்வைக்கும் அழகாக இருக்கும்.


91. அது கேள்வித்தாள் மட்டும்தான்!
வெளியே வந்தபிறகு ஒப்பிட்டுப் பார்க்க வசதியாக பதில்களை கேள்வித் தாள்களில் எழுதிவரும் பழக்கம் பலருக்கு உண்டு. பொதுத் தேர்வுகளில் கேள்வித் தாளில் எதையும் எழுதக் கூடாது. மீறி எழுதினால் (பாதித் தேர்வில் வெளியேற்றப்படுவது உள்பட) அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும்.

92. அடுத்ததை அடுத்ததில்...


ஒரு தாளில் முக்கால்வாசிக்கும் சற்று அதிகமாக எழுதிவிட்டீர்கள். அடுத்து ஒரு விரிவான பதிலை எழுதவேண்டுமென்றால் அடுத்த பக்கத்தில் தொடங்கலாமே. விடை எடுப்பாகத் தெரியும்.




93. கேள்வி ஃபார்முலா..




ஒவ்வொரு கேள்வியையும் நன்றாகப் படியுங்கள். ‘சிலப்பதிகாரம் ஐம்பெருங்காப்பியங்களில் சிறந்தது & விளக்குக’ என்ற கேள்விக்கும் ‘ஐம்பெருங்காப்பியங்களில� �� ஒன்றான சிலப்பதிகாரம் சிறந்தது & விளக்குக’ என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. முதல் கேள்விக்கு நீங்கள் பிற காவியங்கள் குறித்தும் எழுதி அவற்றைவிட சிலப்பதிகாரம் எப்படி மேம்பட்டது என்பதை எழுத வேண்டியிருக்கும்.


அரைகுறையாகக் கேள்விகளைப் படித்துவிட்டுப் பதில் எழுதத் தொடங்குவது என்பது பெரிய அளவில் மதிப்பெண்களைக் குறைக்க வைக்கலாம். பிறகு உண்மை அறியும்போது பதறுவதைவிட முதலியே இதில் கவனம் செலுத்துவது புத்திசாலித்தனம்.


94. அடுத்ததைப் பாருங்கள்..


ஒரு கேள்விக்கான பதிலை எழுதத் தொடங்கிவிட்டீர்கள். பாதி எழுதும்போது அதற்கு மேல் எவ்வளவு யோசித்தும் மீதி பதில் நினைவுக்கு வரவில்லை என்றால் நிறைய நேரத்தை அதை யோசிப்பதிலேயே செலவிடாதீர்கள். அங்கே கொஞ்சம் இடத்தை காலியாக விட்டுவிட்டுப் பிற கேள்விகளுக்கு பதில் எழுதத் தொடங்குங்கள். அந்த பதிலை கடைசியில் எழுதிக்கொள்ளலாம்.


95. காலியாக விடுங்கள்..


ஒருவார்த்தை பதிலாக அமைந்த கேள்விகளில் பெரும்பாலும் சாய்ஸ் இருக்காது. கேள்விகளின் வரிசையிலேயேதான் விடைகளை எழுதவேண்டும். அது திருத்துபவருக்கு எளிதாக இருக்கும். (பொதுத் தேர்வுகளில் ஒவ்வொரு கேள்விக்குமான மதிப்பெண்களை அவர் ஒரு தாளில் எழுதிக் காட்ட வேண்டும்.) பத்து கேள்விகளில் ஆறாவது கேள்விக்கான விடை நினைவுக்கு வரவில்லை என்றால் ஐந்தாவது, ஏழாவது கேள்விகளுக்கிடையில் ஆறாவது பதிலை எழுதுவதற்காக காலியிடம் விடுங்கள். அந்தக் காலியிடம், ஒரு பதிலை எழுதவேண்டும் என்பதை
உங்களுக்கு நினைவுறுத்துவதாகவும் இருக்கும்.
96. மீண்டும் படிச்சுப் பாருங்க..

பலமுறை ஆசிரியர்களிடம் கேட்ட இந்த இந்த அறிவுரையைக் கடைப்பிடிப்பதுண்டா? பதில்களை எழுதி முடித்தவுடன் தவறாமல் அவற்றை ஒருமுறை படித்துப் பாருங்கள். அப்போதுதான் தெரியாமல் செய்த பிழைகள் புரியும். மூன்று மணிநேரத் தேர்வு என்றால் அதை இரண்டே முக்கால் அல்லது இரண்டரை மணிநேரத் தேர்வு என்று மனதில் பதிவு செய்துகொண்டு மீதி நேரத்தை ரிவிஷனில் செலவிட வேண்டும்.


97. தள்ளிப் போடாதீர்கள்..


தேர்வின்போது ‘இயற்கையின் அழைப்பு’ வந்தால் தேர்வாளரிடம் கேட்டுக் கொண்டு டாய்லெட் சென்று வந்துவிடுங்கள். இல்லையென்றால் கவனம் சிதறி, ரிலாக்ஸ்டாக பதில்களை எழுத முடியாமல் போய்விடும்.


98. பதிய வைத்தீர்களா?


உங்கள் பதிவு எண்ணை விடைத்தாளில் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் எழுதியிருக்கிறீர்களா என்பதை சரிபார்த்துக் கொண்ட பிறகு அதைக் கண்காணிப்பாளரிடம் கொடுங்கள். வேறெங்கும் பதிவெண்ணை எழுதக் கூடாது என்று குறிப்பையும் பின்பற்றவேண்டும்.


99. பக்கம் பார்த்து...


விடைகள் மொத்தம் எவ்வளவு பக்கங்கள் எழுதப்பட்டிருக்கின்றன என்பதை எண்ணிப் பாருங்கள். அதை மறவாமல் முதல் பக்கத்தில் எழுதுங்கள்.

100. வேண்டாம் விவாதம்..


எழுதி முடித்த தேர்வு குறித்து இரு பரிட்சைகளுக்கு நடுவே பிற மாணவர்களோடு சேர்ந்து ஆராய்ச்சி செய்ய வேண்டாம். சிலசமயம் நீங்கள் சரியான விடை எழுதியிருந்தால்கூட பிறர் தாங்கள் எழுதிய (தவறான) விடையே சரியானது என்று சாதிக்கும்போது மனவருத்தம் ஏற்பட்டு அடுத்த தேர்வுக்கு தயார் செய்துகொள்ள முடியாமல் போய்விடும்..

மீண்டும் ஒரு விஷயத்தை நினைவுபடுத்துகிறோம்...


புத்தாண்டில் நமக்குக் கிடைத்த டைரியில் குறிப்புகள் எழுதுவோம். கொஞ்ச நாளிலேயே அந்தப் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவோம். இப்படி இருக்கக்கூடாது பரிட்சைக்காக நாம் எடுக்கும் முயற்சிகள்.


அன்பு மாணவச் செல்வங்களே.. இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால் தேர்வில் நிச்சயம் பெரும் முன்னேற்றம் காண்பீர்கள்..
வாழ்த்துகள்..!வாழ்த்துகள்..
வாழ்த்துகள்..வாழ்த்துகள்..!.

 

ennutan paasungal ;) ezuthungal

tangatamil ulakaththtiRkku sella

Tamizan kuzumathin nuzaiavayel

 
உஙகளுக்கு நேரம் கிடைக்கும் போது இதன் நிறை குறைகளை சுட்டிக்காட்டுங்கள், எனது பணி மேலும் சிறக்க உதவும்
 
யாகூ குழும உறுப்பிணர்கள்  இந்த பகுதியை தேர்ந்தேடுக்கவும்
 
 
 
 
கூகிழ் குழும உறுப்பினர்கள்
  இந்த பகுதியை தேர்ந்தெடுக்கவும்

ஸ்வேதா மேகம் சிந்தும் ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தேடுகிறேன்