Sangee Muzangu

ahimsaayitham
Home
Tibet dalai lama
ONRUPATTAAL UNTU VAAZU
Speak With Love
TuuRamagum UravukaL
For International Friends
KALAM
MUMBAI LOCAL
Unity or Disarray
Marutuva parvai
vanakkam nanparkalee
Teacher's Day
Ennaipatrri
tamil inaiya ezuththukal
Aanmeegapaarvai
ungal pathiugal
thamizukum oru vaazththu
India 60 years

தக்க சமயத்தில் தாக்கிய அகிம்சாயுதம்

odalail.jpg

tibet.gif

சீன ஆதிக்கத்திலிருந்து திபெத் விடுதலை பெற வேண்டுமென திபெத்தியர்கள் மீண்டும் ஆங்காங்கே போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள்.

இது நாள்வரை அமைதி காத்து ஆங்காங்கே சிறு போராட்டம் மட்டும் நடத்தி வந்த திபெத்தியர்கள் திடீரேன போர்க்கொடி உயர்த்த காரணம் என்ன.

முதலில் நாம் திபெத்தின் வரலாற்று பின்னனியை அறிவோம். திபெத் முதலில் சுயேச்சை நாடா, அல்லது சீனாவின் ஒரு பகுதியா யார் இந்த தலாய் லாமா என்ற பல கேள்விகளுக்கு வரலாற்று மூலமாக விடை காண்போம் .

 

கிருஸ்தவ சகாப்த்ததிற்க்கு முன்பே திபெத்திய அரச வமிசத்தினரின் தனி ஆட்சிக்கு உட்பட்ட நாடகவே இருந்து வந்தது. இந்தியாவின் மூன்றில் ஒரு பங்கு பரப்பளவை கொண்ட அப் பீட பூமிப் பிரதேசத்தில் கி பி எழாம் நூற்றாண்டின் பிற்ப்பகுதியில் லோதான் புத்த மதம் பரவியது. அதற்க்கு முன்பாக பான்(இலை) எனும் இயற்க்கை வழிபாடே வழக்கில் இருந்தது.

கி பி பதினான்காம் நூற்றாண்டில் ட்ஜோங்கபா என்ற திபெத்திய புத்த குரு தோன்றனார். அப்போழுது வழக்கிலிருந்து வேவ்வேறு புத்த மத பிரிவுகளில் சூத்திரங்களையும் யோக முறைகளையும் ஒருங்கினைத்து ஒரு தனிப்பெரும் புத்த மத மரபினரை தோற்றுவித்தார்.

அதுதான் கிலுக் அல்லது கிலுக்பா எனும் பிரிவினர் இவர்கள் தமது மதச் சின்னமாக மஞ்சள் தொப்பி அனிய பணிக்கப் பட்ட காரணத்தால் மஞ்சள் சமயத்துறவிகள் என அழைக்கப்படலாயினர். வேகுவிரைவில் ஏராளமான புத்த லாமாக்களும் பொது மக்களும் இந்த புத்த மதத்திற்க்கு ஆதரவு அளிக்க துவங்கினர்.

மஞ்சள் மதபிரிவு

இந்த புதிய மதப்பிரிவின் ஆதி குருவான டஜொங்கபா மரணத்தருவாயில் தனது அண்ணன் மகனான கொடுங்டாப் பை மதக்கோட்பாடுகளுக்கேற்ப்ப வளர்த்து அவரை மஞ்சள் புத்த சமயத்தின் மதகுருவாக தலைமை பீடத்தில் அமர்த்தினார்.

அந்த மதகுருதான் முதல் தலாய் லாமா(மஞ்சள் புத்த மத தலைவர்) என அங்கீகரிக்கபட்டார்.

கி பி 1391 முதல் 1474 ஆம் ஆண்டு வரை இருந்த முதல் தலாய் லாமாவை சீனாவை ஆண்ட இராஜ வமிசங்கள் அங்கீகரத்தன.

பதினேழாம் நூற்றாண்டில் திபெத்தில் ஆங்காங்கே கலவரமூண்டது. அந்த கலவரத்தை அடக்கி தனது தலைமை பொருப்பை உறுதி படுத்தும் பொருட்டு சீனாவின் இராணுவ உதவியை நாடினான் அப்போதைய தலாய் லாம் இங்கிருந்து தான் சனி ஆரம்பித்தது.

கி பி 1641 ஆம் ஆண்டு சின சக்ரவர்த்தி தந்து படைகளை அனுப்பி போராட்டத்தை அடக்கிவைத்தார். தலாய் லாமாவின் அங்கீகாரத்தை நிலை நாட்டினார்.

சீன முத்திரை வழங்கிய சீன சக்ரவர்த்தி இனி தலாய் லாமா மன்னருக்கு உரிய எல்லா அதிகாரஙகளும் பெறுவார். என உத்தரவிட்டதும் அப்போதைய திபெத் மன்னன் சீன அதிகாரத்திற்க்கு பயந்து அதற்க்கு உட்பட்டான்.

இது அய்ந்தாம் தலாய் லாமா வாழ்ந்த காலத்தில் நடந்த சம்பவம் இவர்தான் அரசனுக்கு இனையாக எல்லாம் பலமும் வாய்ந்தவர் என்றபோது தனது மத சாம்பிரதாயங்களில் இடையூறு வரக்கூடாது என்பதற்க்காக பஞ்சன் லாமா @2  என்ற இனைமத்தலைவரை நியமித்து அரசை வழிநடத்தும் பொருப்பை அவருக்கு தந்தார்.

அப்போதிலிருந்தே மன்னருக்குள்ள அதிகாரமெல்லாம் போய்விட்டது.  இன்றை முதலைமைச்சர் பிரதம மந்திரி போன்ற அதிகார மையங்களுக்கு சுடரேற்றியவர் இந்த ஐந்தாம் தலாய் லாமாதான்.

சீனாவின் ஆக்ரமிப்பு

1718 ஆம் ஆண்டு சீன சக்ரவர்த்தியில் உதவியோடு பலவீன மான திபெத் அரசனை பதவியில் இருந்து இறக்கி விட்டு தலாய் லாமாவே அனைத்து பொருப்புகளையும் ஏற்றார்.

அதே சமயம் மீண்டும் திபெத்திய மன்னனின் அச்சுருத்தல் வராமலிருக்க நிறந்தரமாக சீன பிரதிநிதி ஒருவரை திபெத் தலைநகர் லாஸாவில் சின சக்ரவர்த்தி நிறுவினார். அன்று முதல் சீன அரச படைகள் திபெத்தில் நிறந்தரமாக கால் பதிக்க ஆரம்பித்து விட்டது.

முக்கியமாக இந்த நடவடிக்கை தலாய் லாமாவின் அனுமதியில்லாமல் பஞ்சன்லாமாவால் செய்யபட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் தலாய் லாமா மீண்டும் திபெத்திய மன்னரால் மக்களுக்கு தீங்கு வராமலிருக்க இது தேவை என்ற காரணத்தால் மௌனம் சாதித்தார். இந்தியாவிற்க்கு வந்து விட்டார்.

1910 ஆம் ஆண்டு சின புரட்சியின் காரணமாக திபெத்தை விட்டு சீன துறுப்புகள் அனைத்து வெளியேற சீன சக்ரவர்த்தியின் அரசு கவிழ்ந்தது. 1912 ஆம் ஆண்டு சான் யாட் சன் தலைமையில் சீன கம்யுனிஸ்ட் பிரகடனமானது. ஆதே ஆண்டில்  ஜூன் மாதம் தலாய் லாமா இந்தியாவிலிருந்து திபெத் தலைநகர் லாஸாவிற்க்கு திரும்பினார். அவருடன் சர் சார்லஸ் பெல் என்ற ஆங்கிலேய தளபதி சிறுபடையுடன் திபெத் சென்றார். திபெத் சென்ற முதல் நாளே தலாய் லாமா திபெத் பூரண சுதந்திரம் பெற்ற குடியரசு நாடாக அறிவித்தார்.

புதிய சீன குடியரசு அமைக்கும் பணியில் கவணம் செலுத்திய சான் யாட் சென் இந்த பிரகடனத்தை கண்டுகிடாமல் விட்டாலும், நம்ம ஆளுதானே பிறகு பார்த்து கொள்ளாம் என்று மௌனம் சாதித்து விட்டார்.

குழப்பிவிட்ட பரங்கியன்

அடுத்து 1914 ஆம் ஆண்டு பிரிட்டீஸ் அரசால் சிம்லாவில் முடிக்க பட்டது. ஆதாவது  சீனா இந்தியா திபெத் மூன்றும் சேர்ந்து திபெத்தின் எதிர்காலத்தை நிர்மானிப்பது (குரங்கு கையில் பூமாலை) @1 இந்த முடிவு திபெத்தின் நிலையில் பெருங்குழப்பமானது( இதுதானே வேண்டும் பரங்கியனுக்கு) இதை சாக்காக கொண்டு சீன எல்லை ஒட்டிய பகுதியை சீனாவின் அதிகாரத்திற்க்குட்பட்ட பகுதியாகவும் அங்கு பாதுகாப்பு மற்றும் பல அதிகாரங்களை தன்னிடம் வைத்து கொண்டு வெறும் அரசாட்சி பொருப்பு மட்டும் லாமாவிற்க்கு வழங்கபட்டது.

இந்தியாவின் பிரதி நிதி என்ற பெயரில் மற்ற பகுதிகளை பிரிட்டீஸார் தனது அதிகாரமையமாக்க  பிரிட்டீஸாரின் இராணுவ பலத்திற்க்கு அஞ்சிய சீனா அப்போழுது ஒன்றும் சொல்லாமல் அமைதிகாத்தது. அதே நேரத்தில் திபெத்தில் பிரிட்டீஸாரின் அதிகாரத்தை ஏற்க்கவுமில்லை.இந்த நேரத்தில் இந்தியா சுதந்திரம் பெற்றது. ஆனாலும் பிரிட்டீஸ் அரசின் (தரகர்)ஏஜெண்ட் 1950 வரை திபெத்தில் தங்கி இருந்து இங்கிலாந்து இராணியின் அதிகாரத்தை அவரது பிரதிநீதியாக நிலை நாட்டி வந்தார். இங்கு கவனிக்க படவேண்டியது இந்தியாவை சேர்ந்த எந்த ஒரு நபரும் திபெத்தில் நியமிக்க படவில்லை @1

தற்ப்பொதைய தலாய் லாமா

இதனிடையே  பதிநான்காம் தலாய் லாமா இறந்தார். கிழக்கு திபெத் ஒன்றில் சாதரண விவசாய குடும்பத்தில் பிறந்த தொந்துபிப் லாமோ (லாமோ தொன் துப்) பதினான்காம் தலாய் லாமாவாக சமய பெரியோர்களால் நியமிக்கபட்டார். தனது நான்காம்வயதில் பிரமாண்டமான பொட்லா அரண்மனையில் தலாய் லாமாவாக நியமிக்க பட்டார்.

தனது பதிநான்காம் வயதிலேயேஆனைத்து துறைகளிலிலும் சிறந்து விளங்கும் திபெத்தின் தலை சிறந்த தலாய் லாமாவாக உயர்ந்து விட்டார். இந்நிலையில் சீன கம்யூனிச தலைவர் மாசே துங் தலைமையில் கம்பூனிச ஆட்சி மலர்ந்தது. சியாங் கை சேக் தோல்வியுற்று தனது படைகளுடன் ஃபர்மோச தீவில் தனது ஆட்சியை தொடர்ந்து வந்தார்.

புதிய சீன அரசாங்கம் சீனாவின் எல்லைகளை விரிவு படுத்த துவங்கியபோது திபேத்திற்கு பேரிடி காத்திருந்தது. பிரிட்டீஸார் சீனா கண்கானிக்க வேண்டும் என்று கொடுத்த பகுதிகளை சீனாவிற்க்கு உட்பட்ட பகுதி என பகிரங்கமாக அறிவித்தது. பரங்கியனின் சாவி வேலை செய்ய துவங்கிவிட்டது.

1950 ஆக்டோபர் மாதம் சீன துறுப்புகள் திபெத்திற்க்குள் புகுந்தது. தலைநகர் லாஸாவிற்க்கு 500 கிலோ மீட்டர் தொலைவில் தனது படைகளை நிறுத்தியது. அப்போழுது 16 வயது நிறம்பிய தலாய் லாமா சீன துருப்புகளை எதிர்க்குமாறு தனது படைகளுக்கு ஆணையிட திபேத்தியர்களும் ஆக்ரோசமாக போரிட்டனர்.ஆனால் 80 ஆயிரத்திற்க்கு மேற்பட்ட சீன துறுப்புகளிடம் 10,000திற்க்கும் குறைவான நவீன ஆயுதங்கள் இல்லாத காரணத்தால் தாக்கு பிடிக்க முடியவில்லை . இதன் காரணமாக திபேத் அரசு சீன அரசுடன் பேச்சுவர்த்தை நடத்த முற்பட்டது.

அங்கு சீன அரசின் மேலாதிக்கம் திபேத்தின் மீது இருக்கவேண்டும் என்ற ஒப்பந்தம் சீனாவின் பயமுறுத்துதல் பேரில் கையெப்பமானது. அந்த சரத்தின் படி சீனா திபேத்தின் மத விவகாரங்களிலோ உள்நாட்டு ஆட்சியிலோ தலையிடாது. என்று ஆனால் இதை இன்றைய இலங்கை அரசு போல் பரன் மேல் தூக்கிபோட்டு விட்டு தனது மாமியார் வீடு என நினைத்து முழுஅதிகாரத்தையும் செலுத்தி வந்தது. திபெத்தின் உள் நாட்டு விவகாரங்களில் முழுமையான குறுக்கீடுகள் சீன படைகள் திபேத்தில் முழுமையாக இறங்கியது.

இதை அடுத்து உள்நாட்டு கலவரம் ஏற்பட்டது. ஆங்காகே சீன துருப்புகளுக்கு எதிராக மக்கள் போராட்டத்தை தீவிர படுத்த கலவரத்தை நிறுத்த ஆணையிடுமாறு சீனா தலாய் லாமாவிற்க்கு உத்தவிட்டது. ஆனால் தலாய் லாமா இது சுதந்திர போராட்டம் என கூறி சீனா திபெத்தை விட்டு வெளியெறு இல்லை என்றால் வெளியேற்ற படுவீர்கள் என அறகூவல் விடுத்தார். இதனால் சினாவின் அடக்கு முறைக்கேதிரான போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.

 

தப்பிய லாம

இந்நிலையில் சீன அரசு தூதுவர் தலாய் லாமாவை விருந்திற்க்கு அழைத்து அவரை  (சிறைபிடிக்க முடிவெடுத்தது) . ஆங்காங்கே சீன துறுப்புகளுக்கேதிரான கொரில்லா தாக்குதல் கடுமையாக்கபட்டது. தலைநகர் லாஸாவில் முகாமிட்டிருந்த சீன இராணுவம் அரண்மனையை கைபற்றி லாமாவை பிடிக்கும் யோசனையுடன் அரன்மனைமீது கடுமையான பிரங்கி தாக்குதல் நடாத்தியது.

இது 1959 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் திகதி நடந்தது அன்று மதியம் திபெத்திய உயரதிகாரிகள் தலால் லாமா திபெத்தை விட்டு வெளியேறுங்கள் உங்கள் உயிருக்கு எந்நெரமும் ஆபத்து என்று நீங்க வெளியிலிருந்து உரிமைக்காக போராடுங்கள் உலக நாடுகளுக்கு திபெத்தின் நிலையை தெரிவிப்பதற்கு அது ஒன்றுதான் வழி என்று அறிவுறை கூற லாமாவும் அதற்கு ஒப்பு கொண்டார். அன்று இரவு சாதாரன அரன்மனை சிப்பாய் போல் வேடமிட்டு அரண்மனையில் இரகசிய வழியாக வெளியேறி இரவோடிரவாக திபேத்தின் கிரிசு ஆற்றை கடந்தார்.

ஆற்றின் மறுகரையில் அவருக்காக காத்திருந்த சிறு படையின் உதவியோடு பல நூறுகி மீ நடந்து 31 நாட்கள் பயணம் செய்து 1959 ஆம் நாள் ஏப்ரல் 18 ஆம் திகதி இந்தியா வந்து சேர்ந்தார்.

இதனிடையில் லாமா கிளம்பிய மறுதினம் பொழுது புலர சீன படைகள் அரண்மனையை சுற்றி வளைத்தன. ஆனால் லாமா தப்பிவிட்டார் என்ற செய்தி கிடைத்தது. திபெத் எங்கும் அவரை தேடும் பணி தீவிரமானது. எல்லைகள் எல்லாம் அடைக்கபட்டன. அவருக்கு ஆதவானவர்கள் கொல்லபட்டனர். இந்த கொடுமையான செய்கையால் சுமார் 87000திபெத்தியர்கள் கொல்லபட்டனர். மேலும் 27000 பேர்கள் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டனர்.

இவ்வளவு நடந்து லாமாவை பற்றி எந்த ஒரு திபெத்தியனும் வாய் திற்க்கவில்லை இது தான் உண்மையான இராஜ விசுவாசம் என்பதோ.

இந்நிலையில் லாமா இந்தியஎல்லைக்குள்  வந்த செய்தியை சவர்கலால் நேரு அவர்கள் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். ஆனால் இதற்கு கம்யினிஸ உறூப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

இதை அடுத்து இலட்ச கணக்கான திபெத்திய மக்கள் அகதிகளாக இந்திய எல்லைக்குள் வந்தவண்ணம் இருந்தனர்.

அவர்களுக்கெல்லாம் இந்தியா அடைக்கலம் அளிக்கும் என எப்ரல் 27 ஆம் திகதி நேரு அறிவித்தார். தாமே நேரில் முசௌரி சென்று லாமாவை சந்தித்தார்.

மேலும் இமாச்சல பிரதேசம் தர்மசாலாவில் திபெத்தியருக்கு என்று பல வசதிகள் செய்து கொடுத்து லாமா இந்தியாவில் இருந்து கொண்டே திபத்திய அரசை வழிநடத்த வகை புரிந்தார் நேரு அவர்கள்.( இந்திய அரசாங்கம் இவ்வளவு வசதிகள் ஏன் செய்து கொடுத்தார்கள் என்றால் லாமா வரும் பொழுது டிரில்லியன் டாலர் மதிப்புகளுல்ல தங்கம் வைரம்  போன்றவற்றை கொண்டுவந்தார். அதை இந்திய வங்கிகளில் முதலீடு செய்து இன்றுவரை பொருளாதார சிக்கல் எதுமின்றி இருக்கான். என்று புலம்புகிறது சில சிவப்பு சட்டைகள்.)

இங்கும் ஒரு எட்டப்பன்.

பஞ்சன் லாமா என்று முழு அதிகாரம் படைத்த ஒருவரை நியமித்தாக முதலில் படித்திருப்பீர்கள் பிறகு 1925 ஆம் ஆண்டில் அவரது வரிசையில் வந்த பஞ்சன் லாமா.  அவர் சீன அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த சென்றவர்தான். அவர்கள் ஊதிய மகுடியில் அடங்கி பீஹிங் கிலேயே தங்கிவிட்டார். அங்கிருந்து கொண்டு நான் தான் உன்மையான திபெத்திய அரசாங்கம் என்றார்.

இன்றுவரை அவரும் அவரது பிரதிநிதிகளும் சீனாவில் தங்கியிருந்து டம்மி திபெத் ஆட்சி புரிகின்றனர்.

எதிகாலம்.

தலாய் லாமா இந்தியாவிற்க்கு வந்து 48 ஆண்டுகள் ஆகிவிட்டது. உலகெங்கும் அவருக்கு அமோக வரவேற்ப்பு உள்ளது 1989 ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்றார்.

திபெத்திற்கு பூரன சுதந்திரம் ஒன்றே எமது இனம் எமது மக்கள் எமது ஆட்சி என்ற கொள்கைகளுடம்  அகிம்சை வழி போராட்டம் நடத்தி வரும் தலாய் லாமாவிற்க்கு உலக நாடுகளுக்கு இதை எடுத்து செல்ல கிடைத்த மிகப்பேரிய வாய்ப்பு சீனாவில் நடைபெறப்போகும் உலக விளையாட்டு திருவிழா.

இதை நல்வாய்ப்பாக கொண்டு லாமா மீண்டும் தனது கோரிக்கைகளுக்கு புத்துயிர் ஊட்ட துவங்கியுள்ளார்.

1, திபெத் பீடபூமி அகிம்சை பிரதேசமாக உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும்.

2, திபேத் சுதந்திர நாடாக வேண்டும் சீனாவின் எந்த ஒரு தலையீடும் கூடாது.

3,சீன குடியேற்றங்கள் முற்றிலும் வெளியேறவேண்டும்.

4, தலாய் லாமாவிற்க்கு அரசியல் உரிமை தேவையில்லை அங்கு சனநாகம் மலர வேண்டும்

என்ற நான்கு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்துகிறார்.  சீன அரசாங்கம் இதற்கெல்லாம் இளகவில்லை , மாற்றாக இவர் கலவரத்தை தூண்டுகிறார் என குற்றம் சாட்டுகிறது.

தலாய் லாமா ஆண்மிக தலைவராக வெற்றியுடன் திபெத் செல்வாரா, சீனா இவரது கோரிக்கைகளை ஏற்க்குமா ???????

பொருத்திருந்து பார்ப்போம்.

 

tibet-2.jpg

xizang.jpg

 உங்கள் கருத்துக்களை பதிக்க மறந்துவிடாதீர்கள்

ஸ்வேதா மேகம் சிந்தும் ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தேடுகிறேன்