Sangee Muzangu

MUMBAI LOCAL

Home
Tibet dalai lama
ONRUPATTAAL UNTU VAAZU
Speak With Love
TuuRamagum UravukaL
For International Friends
KALAM
MUMBAI LOCAL
Unity or Disarray
Marutuva parvai
vanakkam nanparkalee
Teacher's Day
Ennaipatrri
tamil inaiya ezuththukal
Aanmeegapaarvai
ungal pathiugal
thamizukum oru vaazththu
India 60 years

மும்பை லோக்கல்

வணக்கம் இதில் சொல்லவிருக்கும் அனைத்து சம்பவங்களும் உண்மை இதில் எந்த ஒரு இடைச்சொருகளோ  மசலாக்களோ நான் தினிக்கவில்லை. இதை ஏன் நான் எழுதுகிறேன், இதை படிக்கும் நாங்கள் என்ன செய்ய முடியும் என்ற கேள்விகளுக்கு ஒரே பதில் தயவு செய்து நிதானமாக படியுங்கள்.
படித்து விட்டு இவர்களுக்காக பிராத்தனை செய்யுங்கள். நல்ல உள்ளங்களின் கோரிக்கைகளை இறைவன் நிச்சையம் செவிசாய்ப்பான் என்ற நம்பிக்கையில் சரவணா மும்பையிலிருந்து.

சாரே ஜஹான் சே அச்சா ஹிந்து சித்தான் ஹமாரா(எல்லாநாட்டிலும்  நல்ல நாடு  எங்க இந்தியா) சார் கொடி வாங்குங்க சார் நாளைக்கு சுதந்திர தினம், வீட்டில் வையுங்க உங்க ஆபிஸ் டேபிளில் வையுங்க வீட்டு மேலே வையுங்க,  கோட்டு சட்டை மேலே குத்துங்க ஆனால் கீழே மட்டும் போட்டுடாதீங்க சார் கொடி வாங்குங்க , பெரியது 2 ரூபா, சின்ன கொடி 1 ரூபா, சார் சாகெலேட் வாங்குங்க சார் தொண்டை கரகரப்பு போய்விடும் சார் , டாக்டர்கிட்ட போனா 50, 100, ஆனா எங்கிட்ட வாங்கினா 1 ரூபாய்க்கு மூனு சார் வாங்கிக்கோங்க சார் டிரெயின் மும்பை தாதரை கடந்து மட்டுங்கா மாஹிம் என சென்று கொண்டிருந்தது. நேரம் சரியாக 11:30 மேற்க்கு புறநகர் இரயிலில் கூட்டம் கொஞ்சம் குறைந்திருந்த நேரம் , சார் லைட்பேனா சார் வீட்டில் கரண்ட் இல்லாட்டியும் எழுதலாம் சார், ஒன்னு பத்து ரூபா, பாந்திரா இரயில் நிலையத்தை புறநகர் இரயில் கடந்தது. அடுத்த பெட்டிக்கு மாற வேண்டும் அந்த பேட்டியில் கிடைத்த ரூபாயை உடல் மறைக்க கட்டி இருக்கும் உடையின் இரகசிய அறைகளில் பணத்தை திணித்து  விட்டு, கார்  ரோட்டை அடைந்தவுடன் அடுத்த பெட்டியில் ஏறி மீண்டும் வியாபாரம், அந்தேரி  இரயில் நிலையத்தை அடைந்தஉடன் கூட்டம் முற்றிலும் ஓய்ந்து போக மீண்டும் சர்ச் கேட் செல்லும் இரயிலில் ஏறி வியாபாரம் தொடர்கிரது.
 
அது ஆரம்ப நிலையம் ஆனதால் தனது சரக்கு பையை ஒரு சீட்டின் கீழே வைத்து விட்டு மீண்டும் வியாபாரம் தொடர்கிறது. பார்லே நிலையத்தில் வில்லன்கள் ஏறிவிடுகின்றனர்( police & T T R) அதை புரிந்து கொண்ட வியாபாரி டக்கென அருகில் இருந்த ஒரு காலி சீட்டில் உட்கார்ந்து அங்கு மொபைலில் பாட்டு கேடுக்கொண்டிருந்த நபரிடம் சார் நானும் கேட்க்கவா என சொல்ல அந்த நபரும் ஒரு பகுதி ஹேர் போனை அவருக்கு பொம்மலாட்ட பொம்மை போல் தலையாட்டினவரை  சரியாக அடையாளம் கண்டு பிடித்து போலீஸ் அழைக்க அவரும் அகப்பட்டு கொண்ட பயத்தில் ??? எழ அவனது  கையிலிருந்த பொருட்கள் பையை பிடுங்கி சாந்தாகுரூஸ் ஸ்டேசனில் இறக்கியது அந்த வில்லன்கள் கூட்டம் பிளாட்பாரத்தில் கடைசியில் கூட்ட்மே இல்லாத ஒரு பகுதிக்கு கொண்டு சென்று எடுடா பணத்தை என்று மிரட்ட அவரும் சார் இப்ப தான் சார் வண்டியில் ஏறினேன் இன்னும் வியாபாரமே ஆகலை என்று சொல்லியும் கேட்க்காத அவர்கள் அவரது பையில் கையை விட சில சில்லரை மட்டுமே அகப்பட அவனது காலரை
எடுத்து விட அதன் மடிப்பின் இடையில் மூன்று இருபது ரூபாய்கள், மேலும் சாட்டையின் முடிவில் உள்ள ஒரு மடிப்பில்  இருந்து 50 ரூபாய் என 120 ரூபாய்வரை பிடுங்கி விட்டு அவனது, பொருட்கள் அடங்கிய பையையும்
எடுத்துக்கொண்டு கிளம்பியது, அந்த கூட்டம் அவரும் சார் சார் என்று
கெஞ்சிய படி பின்னாலே சொல்ல அரை மணிநேரம் அலைகழித்து விட்டு அந்த பையிலிருந்த பொருட்களை எல்லாம் பார்த்து விட்டு இனிமே இந்த பக்கம் வரதே ஓடிப்போ என திட்டி விட்டு தூக்கி எரிய அவரும் பையிலிருந்து சிதறிய பொருட்களை அள்ளி கொண்டு தூரமாக போய் அவர்கள் பார்வையிலிருந்து விலகியதும் , மீண்டும் தனது வியாபாரத்தை துவங்கினார்.
 

நேரம் சரியாக 2 மணி இரயில் பாந்திராவை அடைந்ததும். இரங்கிய அவர் கடைசி பிளாட்பார்மில் இருக்கும் அமர் இருக்கைக்கு அருகில் உள்ள இடைவெளியில்  சொருகி வைத்திருந்தஒரு பழைய சாக்கு மூட்டையை எடுத்து பிரிக்க அதின் உள்ளே மேலும் ஒரு பாலிதீன் பை அதன் உள் மூன்று சிறிய பை புப்பி, கல்லு, பிண்டு இதில் கல்லு தான் அவர் பெயர் அந்த பாக்கேடுகள் உள்ளே அவர்களுக்கான மதிய உணவு அதில் கல்லு விற்க்கு 5 ரொட்டி சட்டினி, இருந்தது அதில் இரண்டை எடுத்து புப்பியின் பாக்கெட்டில் வைத்து விட்டு , சாப்பிட்டு விட்டு தண்ணீர் அருந்த பிளாட்பாரத்தில் உள்ள கடையில் தண்ணீர் அருந்த சென்ர சமயம் அங்கு ஒரு மூதாட்டி சயா(தேனீர்) கேட்க்க அந்த கடைக்காரன் அவரை விரட்ட கல்லுவோ ஏன் அவர்களை விரட்டு கிறாய் சாலா(நமது ஊரில் மாப்பிள்ளை மச்சி என்பது போல் ஒரு வார்த்த்தை இதை பிரியமானவர்களிடமும் பயன்படுத்தலாம் எதிரிகளிடமும் பயன் படுத்தலாம்) காலங்காத்தால சாமிக்குன்னு சொல்லி சாயவை ரோட்டில் ஊற்றுகிறாய் ஆனால் இவருக்கு ஒரு கிளாஸ் கொடுத்தால் என்ன உன் சொத்தா குறைந்து விடும் என சொல்ல கடைக்காரனோ உங்க அப்பனா பால் டீத்தூள் சக்கரை எல்லாம் கொடுக்கிரான் என சொல்ல அவரும் , சரி அந்த பாட்டிக்கு ஒரு சாய கொடு அப்படியே பிஸ்கெட் பாக்கேட் ஒன்னு கொடு என்று சொல்லி அதற்க்கான பணத்தை கடைக்காரனிடம் கொடுக்க அவனும் வெட்கமில்லாமல் அவரிடம் வாங்கிக் கொண்டு அந்த பாட்டிக்கு டீயும் பிஸ்கெட்டும் கொடுக்க அந்த பாட்டி ஒரு ஓரத்தில் உட்கார்ந்து அதை சாப்பிட்ட இவரும் தனது வழக்கமான வியாபாரத்தை ஆரம்பிக்கிறார்.
 
வண்டி மாஹிமை தாண்டியது ஒரு இளைஞன் அவரிடம் லைட் பேனாவை வாங்கி பரிசோதிக்க இன்னும் இரண்டு பேனாவை வாங்கி பரிசோதிப்பது போல் நடித்து மாஹிம் ஸ்டேசன் வந்ததும் இறங்க எத்தனிக்க அவர் அவனது சட்டையை பிடித்து காசு கொடுத்துவிட்டு போடா  என முறைக்க அவனும் பொருட்களை தூக்கிஎறிந்து விட்டு இறங்கிவிட்டான். அவர் அவனை மும்பை லோக்கல் பாஸையில் வசை பாடிவிட்டு , மீண்டும் தனது வியாபாரத்தை தொடர்ந்தார்.
நேரம் இரவு 10ஐ தாண்டிவிட்டது. குட்டு வந்து காலையில் அவன் வண்டியிம் சீட்டுக்கு அடியில் வைத்திருந்த பொருட்கள் பையை கொடுத்து உன்னை இன்று முழுவதும் தேடிபார்த்தேன் கிடைக்க வில்லை அதுதான் லேட் என்றான் பரவாயில்லை இன்று வியாபாரம் நல்லா இருந்துச்சி கொடிஎல்லாம் விற்றுவிட்டது. புப்பி எங்கே என கேட்க அவளுக்கு இன்றும் உடம்பு சரியில்லை அதுதான் அவல் வீட்டிலேயே இருக்கிறாள் என்றான். கல்லுவும் சரி என சொல்லிவிட்டு அவளுக்கு சாப்பிட பிரேட் வாங்கிக்கொண்டு வீடு நோக்கி  போனவரை கொஞ்சம் பேட்டி எடுத்து பார்ப்போமே என அவரிடம் சென்று விசாரிக்க.
நான்:  வணக்கம் நான் சரவணன் உங்களை பற்றி கொஞ்சம் எழுதலாம் என்று இருக்கிறேன்
அவர்:நீங்க ஸ்பெசல் போலீச் தானே  இல்லை, நான் சாதா மனிதன்
 
 அவர்:என்னை பற்றி எழுதி என்ன செய்ய போறீங்க
நான் கம்பியூட்டரில் எழுதுவேன்
 அவர்:அப்ப அதுக்கு உங்களுக்கு ரொம்ப காசு கிடைக்குமில்ல
 
நான்:  இல்லை எனக்கு உங்களை பற்றி உலகத்திற்க்கு சொன்ன ஒரு நிம்மதி கிடைக்கும்
நான்:  உன் பெயரென்ன
 அவர்: கல்லு
நான்:  உங்க அம்மா அப்பா பேரு
அவர்: அப்பா பேரு அம்மா பேரு எல்லாம் தெரியாது
நான்: உனக்கு எந்த ஊர்,
அவர்:பிஹார்
நான்:மும்பைக்கு எப்படி வந்தாய்
அவர்: எங்க சொந்த காரங்க கூட்டி வந்தாங்க பரதேசிங்க கல்யான் ஸ்டேச்னிலேயே விட்டுவிட்டு போய்ட்டாங்க அப்புரம் இம்ரான் பாய்தான் எனக்கு சாப்பாடு கொடுத்து இந்த தொழிலை கற்று கொடுத்தார்.
நான்: இப்ப அவர் எங்கே
அவர்: டிராக் கிராச் பன்னும் போது விரார் பாச்ட் வந்து அடுச்சு போட்டு போய்டுச்சு
நான்:அப்புரம்
 
அவர்: அப்புரம் என்ன செத்து போய்ட்டார்
நான்: அவங்க குடும்பம் எல்லாம் எங்கே
 
அவர்: அவரும் நம்மை மாதிரிதான் அதனால் போலீஸ் எடுத்துட்டுபோய்ட்டாங்க.
 
நான்:உங்க கூட யார் யார் இருக்கிறார்
அவர்: நான், குட்டு, புப்பி(இதில் குட்டு சூ பாலீஸ் போடுவார் புப்பி பாட்டு படிப்பாள் அவளுக்கு கண்தெரியாது இப்பெல்லாம் எல்லோரும் மொபைல் வச்சு பாட்டு கேட்கிறாங்க அதனால் அவளுக்கு காசு நிரைய கிடைக்க வில்லை
நான்: உனக்கு எந்த சாமி பிடிக்கும்
அவர்: கன்பதி  அந்த சாமி ஊர்வலத்தில் ஆடமுடியும்
நான்: உங்க வீடு எங்க வாடகையா சொந்த வீடா
அவர்: அதே பந்திரா பிர்ட்சுக்கு கீழே இருக்கு (பாலத்திற்க்கு அடியில் உள்ள தாங்கும் இரும்பு பாளங்கள்) அது சம்சுதீனோடது அதனால் அவனுக்கு தினம் 50 ரூபாய் கொடுக்கனும்.பிறகு போலீச்காரன் வந்தால் அவனுகளுக்கு 100, 200ன்னு அழனும். (அதாவது மாதம் 1500 வரை நடுத்தர மும்பை குடிமகன் கொடுக்கும் வாடகை)
நான்: குளிக்க பல்விளக்க எல்லாம் எங்கே போவாய்,
 
அவர்: சார் யானைஎன்ன பல்லா விளக்குது. அப்புரம் மழைபெய்து காடியில் தண்ணீர் வந்தால்  குதியாட்டம் போடுவோம்.
நான்:யாருக்கு பயப்படுவ
அவர்: யாருக்கும் இல்லை போலீஸ்காரங்கல கண்டால் மட்டும் பயப்படுவது மாதிரி  நடிப்பேன்.  அப்புரம் சமூக சேவை அப்படீன்னு சொல்லிகிட்டு எங்கள கூட்டீடு போவங்க அங்க  போய்(**************! *******    ) அதுனால நாங்க ஓடியாந்திடுவோம்.
அவர்: சார் எனக்கு ஒரு உதவி செய்ங்க சார்
நான்:என்ன
அவர்: புப்பி அடிக்கடி உடம்பு சரியில்லாம போய்டரா அதனால் அவளோட போட்டாவை  கம்பியீட்டரில் போட்ட  அவங்க அம்மா , அப்பா வந்து கூட்டிகிட்டு போய்டுவாங்க சார். நான்: அவள் கண்தெரியாதவள் என்பதற்க்காகத்தானே அவளை இரயில் நிலையத்தில்  விட்டு விட்டு சென்றனர்  அவளது பெற்றொர்கள்.( இவ்வளவு புத்திசாலியாக இருக்கும் நீ அவள் மீது வைத்திருக்கும் பாசத்தில்  புரியாமல் பேசுகிறாய் என சொல்லி புரிய வைக்க ஆசைதான் ஆனால் வேண்டாம் என்ன  அவர்களின்  மனதை புண்படுத்த)
நான்:சரி உங்களின் எதிர்கால லட்சியம் ஏதாவது உண்டா @!????
அவர்: அமா சார் சீக்கிரத்தில் இந்த இரயில் ஒன்று வாங்க வேண்டும். அவர்:
அப்புறம் புப்பிக்கு நல்ல பையனா பார்த்து கல்யாணம் முடித்து வைக்க
வேண்டும்

இரவு ரூமிற்க்கு போனது தனது சட்டையை அவிழ்க்கிறான் அதற்க்கு உடலை ஒட்டாமல் ஒரு சின்ன  பனியன் பொன்ற ஒரு சட்டை அதில் பல இடங்களில் இருந்து குறைந்தது 300 ரூபாய்  வரை எடுத்து  போட்டார்.  சம்சுதீன் சத்தம் கேட்டு அவனுக்கு 50 ரூபாய் கொடுத்து விட்டு புப்பிக்கு  பாலும் பிரேட்டும் ஊட்டிவிட   மறுநாள் சாமான்கள் வாங்க பணத்தை தனது டௌசருக்குல் தினித்து விட்டு தூங்க     மும்பை சென்ரலில் இருந்து டில்லிக்கு செல்லும் கடைசி எக்ஸ்பிரஸ் ஓசையுடன் சப்தமிட்டு அவர்களின் இருப்பிடத்தை கடந்தது.
சில விபரங்கள் இவர்களை பற்றி
 
வயது:  8 முதல் 11 வயது

ஊர் : பிஹார் (கல்லு) உபி (குட்டு) மஹராஸ்டிடத்தில் (எங்கேயோ பிறந்த
புப்பி)

மாத வருமானம்: 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை (ஆனால் மிஞ்சுவது பைசாகூட
இல்லை)
வருத்தப்பட்டது: எங்க சொந்த காரர்கள் ஸ்டேசனில் தனியாக விட்டுவிட்டு போனபோது
பேசும் மொழி : ஹிந்தி ஹிந்தி ஹிந்தி கொஞ்சம் மராட்டி
நேஸ்னாலிட்டி: இந்தியன்

ஸ்வேதா மேகம் சிந்தும் ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தேடுகிறேன்